பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/935

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கந்தன் குடி சோழநாட்டிற் பேரளம் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 3-மைல். அம்பகரத்துார் ஸ்டேஷனிலிருந்து1-மைல்) 805. பவம் அற தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தனதான

  • எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை

யென்றுந் துயர் பொன்றும்படி யொருநாளே. இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை f யென்றும்படி பந்தங்கெட மயிலேறி, வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந் திசை மண்டும்படி நின்றுஞ்சுட ரொளிபோலும். வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும் வண்டன்தமி யன்றன்பவம் ஒழியாதோ: தந்தந்தன திந்திந்திமி யென் றும்பல சஞ்சங்கொடு தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு மனியாரம். சந்தந்தொணி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி சம்புந்தொழ நின்றுந்தினம் விளையாடும்; கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு + மன்பன்கவி கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே. கண்டின்கணி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் X தங்குஞ்சுனை கந்தன் குடி யின்தங்கிய பெருமாளே.(1)

  • எந்தன் - என்றன் மரூஉ

i என்றும்படி - எப்போதும் போல.

  1. அன்பன் - நக்கீரர்; அவர் வரலாற்றைப் பாடல் 91 பக்கம் 212 கீழ்க்குறிப்பிற் காண்க

x தங்கும் பொழில் கந்தங்கொள்ப ரங்குன்றமர்' எனவும் பாடம்