பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/940

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலதைப்பதி திருப்புகழ் உரை 381 (பரிவு) உண்மை அன்பு (அற்று) இல்லாமல், (எரியும் நெஞ்சில்) பொருள்வேண்டியே எரிச்சல்படும் (வேசையர்ಘೀ உள்ளத்திலும், மேகம்போலக் கறுத்த கூந்தலிலும், படுபுள் பவன முன்றில் - புட்குரலுக்கு (எட்டுப் பறவைகள் செய்யும் புட்குரல்களுக்குப்) பவனம் - இருப்பிடமான (முன்றிலில்) - வெளியிடமாம் (கழுத்தி லும்), இயல் ஆரும் தகுதி நிறைந்துள்ள. அன்னநடைக்கு ஒத்த சிறந்த நடையிலும், கிளியின் இனியமொழிக்கு ஒப்பான சொல்லிலும், அழகிலும், தனித்து நின்று தளர்ந்தும், அதிக மோகம் (காம இச்சை) (அல்லது (மதி) அறிவானது மோகத்தை) i (அளவி) கொண்டு - அதில் மனம் கலந்து, புளகங் கொண்டுள்ள கொங்கைகள் குழையும்படியாகத் இன்பக்கடலில் திரிகின்றவனான நான் என்றேனும் (அல்லது எப்போதும்) (உன்னை) அறிவேனோ! (அறிந்து உய்வேனோ): தனனத் தனன தந்த.தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் தமித என்று தனியாக மத்தளம் க்க வருபவனே! செம்மையான நெற்பயிர் விளையும் நல்ல கழனிகள் செழிப்புற்று ஓங்கி, (திமிலம்) பெரிய மீன்களும், தாமரையும் நிறைந்து, நெருங்கிய நல்ல கரும்புகள் திரட்சியாக வளர்ந்து வளப்பம் உற்று, அழகிய நல்ல சிகரங்களை உடைய உயர்ந்த மலைக்கு நிகராக விளங்கும் திலதைப்பதி என்னும் தலத்தில் விற்றிருக்கும் பெருமாளே! (என்று மறிவேனோ) 808. மகர மீன்போல அமைந்த குழைகள் மீது தாவிப் பாயும் கண்களின் (கடையில்) ஒரத்தில் விளங்கும் (வசி) கூர்மை வாய்ந்த (அச்சரத்தில்) - அல்லது வசியம் செய்யவல்ல அந்த அம்பால் ஏற்பட்ட குறியாலும் (வடவெற்பு) மேருமலையை (துரந்து) (வடக்கே) ஒட வைத்து, சந்தனக்கலவை அணிந்த குடத்தை ஜெயித்து, (மதர்வில்) செழிப்புடன் பெருத்து எழுந்த கொங்கைமேலும்.