திருப்புகழ் 771 சருவி இகழ்ந்து  (சீகாழி)
Thiruppugazh 771 saruviigazhndhu  (seegAzhi)
Thiruppugazh - 771 saruviigazhndhu - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தந்தன தந்தன தந்தன
     தனதன தந்தன தந்தன தந்தன
          தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான

......... பாடல் .........

சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
     சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
          தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ்

சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
     பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
          சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும்

விருது துலங்க சிகண்டியி லண்டரு
     முருகி வணங்க வரும்பத மும்பல
          விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின்

ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
     வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
          விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே

கருதியி லங்கை யழிந்துவி டும்படி
     அவுணர டங்கம டிந்துவி ழும்படி
          கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன்

கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு
     மடுவினில் வந்துத வும்புய லிந்திரை
          கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி

மருது குலுங்கி நலங்க முனிந்திடு
     வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்
          வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி

மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
     பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
          மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமும் ... மதப்
போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும்
வருபவரான சமயவாதிகளும்,

ஒன்றிலை யென்ற வரும் ... தெய்வம் என்ற ஒன்றே இல்லை
என்பவர்களும்,

பறிதலையரு நின்று கலங்க ... பறிதலையராம்* சமண குருமாரும் -
இவ்வாறு யாவரும் நின்று கலங்க,

விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையு ... அனைவரும் விரும்பத்தக்க
தமிழ்ப்பாடல்களை (திருஞானசம்பந்தராக) கூறும் செல்வாக்கையும்**,

நன்றியும் வென்றியு மங்கள பெருமைகளும் ... உபகார
குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான பல பெருமைகளையும்,

கனமுங்குணமும்பயில் சரவணமும் ... சீர்மையையும்,
நற்குணத்தையும், நீ குழந்தையாய் விளையாடிய சரவணப்
பொய்கையையும்,

பொறையும்புகழுந்திகழ் தனிவேலும் ... உனது பொறுமையையும்,
புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலையும்,

விருது துலங்க சிகண்டியில் ... வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில்
மீது அமர்ந்து

அண்டரும் உருகி வணங்கவரும்பதமும் ... தேவர்களும் மனமுருகி
வணங்கும்படியாக வரும் திருவடியையும்,

பல விதரணமுந்திறமுந் தரமும் ... பலவிதமான
கொடைவண்மையையும், உன் சாமர்த்தியத்தையும், தகுதியையும்,

தினைபுனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து ...
தினைப்புனத்து மானாகும் வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் அணிந்த
மார்பிலே மயங்கி நொந்து,

அடி வருடி மணந்துபுணர்ந்ததுவும் ... அவளது திருவடியை வருடி,
மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும்,

பல விஜயமும் அன்பின்மொழிந்துமொழிந்து இயல்
மறவேனே
... மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே
பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான்
மறக்கமாட்டேன்.

கருதியிலங்கை யழிந்துவிடும்படி ... ராவணனின் பிழையை
மனத்தில் எண்ணி, இலங்கை அழிந்து போகும்படியும்,

அவுணர் அடங்க மடிந்துவிழும்படி ... அரக்கர் யாவரும்
இறந்துவிழும்படியும்,

கதிரவ னிந்து விளங்கி வரும்படி விடுமாயன் ... சூரியனும்,
சந்திரனும் பழைமை முறைப்படி ஒளியுடன் வரும்படியும் செய்த திருமால்,

கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு ... மதயானை கஜேந்திரன் பயந்து
நடுக்கமுற்று வருந்திநின்ற

மடுவினில் வந்துதவும்புயல் ... மடுவினிடையே வந்து உதவிய
மேகவண்ணப் பெருமான்,

இந்திரை கணவன் அரங்க முகுந்தன் ... லக்ஷ்மியின் கணவன்,
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட முகுந்தன்,

வருஞ்சகடற மோதி ... தன்னைக் கொல்லவந்த சகடாசுரனை காலால்
மோதிக் கொன்றவன்,

மருது குலுங்கி நலங்க முனிந்திடுவரதன் ... மருதமரம் குலுங்கி
நொறுங்கிப்போகக் கோபித்த வரதன்,

அலங்கல் புனைந்தருளுங்குறள் வடிவன் ... மாலையைச்
சூடியருளும் வாமன வடிவ மூர்த்தி,

நெடுங்கடல் மங்க ஒர் அம்பு கை தொடுமீளி மருக ... பெரிய
கடல் நொந்து வற்றிப் போகுமாறு ஒரு அம்பைக் கையால் தொடுத்த
பராக்ரமசாலி ஆகிய திருமாலின் மருகனே,

புரந்தரனுந்தவ மொன்றிய பிரமபு ரந்தனிலும் ... இந்திரன் தவம்
சிரத்தையுடன் செய்த பிரமபுரம் என்ற சீகாழிப்*** பதியிலும்,

குக னென்பவர் மனதினிலும் ... குகனே என்று கூறுபவர் மனத்திலும்,

பரி வொன்றிய மர்ந்தருள் பெருமாளே. ... அன்போடு பொருந்த
வீற்றிருந்து அருளும் பெருமாளே.


* பறிதலை என்பது:

சமணர்களில் ஒருவர் குருவாக ஆகும்போது மற்ற குருமார், இப்போது துக்கம் பிற்பாடு சுகம்
என்ற மந்திரத்தைச் சொல்லி, அவரது தலைமயிர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கும் வழக்கம்.


** சலிகை என்றால் செல்வாக்கு - முருகனின் சலிகை முதலிய 16 அருமையான
லக்ஷணங்களை இங்கு தொடங்கி விஜயமும் வரை வெகு அழகாக அருணகிரிநாதர்
வரிசைப் படுத்தியது மிக்க இன்பம் தருகிறது.


*** சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.


சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.863  pg 2.864  pg 2.865  pg 2.866 
 WIKI_urai Song number: 775 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 771 - saruvi igazhndhu (SeegAzhi)

saruvi igazhndhu maruNdu veguNduRu
     samayamum ondrilai endra varum paRi
          thalaiyaru nindru kalanga virumbiya ...... thamizh kURum

saligaiyu nandriyum vendriyu mangaLa
     perumaigaLung ganamung guNamum payil
          saravaNamum poRaiyum pugazhun thigazh ...... thanivElum

virudhu thulanga sikaNdiyil aNdarum
     urugi vaNanga varumpadhamum pala
          vitharaNamun thiRamun tharamum thinai ...... puna mAnin

mrigamadha kungkuma kongaiyil nondhadi
     varudi maNandhu puNarndhadhuvum pala
          vijayamum anbin mozhindhu mozhindhiyal ...... maRavEnE

karudhi ilankai azhindhu vidumpadi
     avuNar adanga madindhu vizhumpadi
          kadhiravan indhu viLangi varumpadi ...... vidumAyan

kadakari anji nadungi varundhidu
     maduvinil vandh udhavum puyal indhirai
          kaNavan aranga mukundhan varunchakadu ...... aRamOdhi

marudhu kulungi nalanga munindhidu
     varadhan alangal punaindh aruLung kuRaL
          vadiva nedung kadal mangavor ambu kai ...... thodumeeLi

maruga purandharanun thavam ondriya
     birama puran thanilun guhan enbavar
          manadhinilum pari vondri amarndharuL ...... perumALE.

......... Meaning .........

saruvi igazhndhu maruNdu veguNduRu samayamum: All the religions, bickering among themselves, caught in delusions and throwing temper tantrums;

ondrilai endra varum: those non-religious ones who deny even the existence of God;

paRithalaiyaru: and those ChamaNas, whose members pluck the hair (of the Master-to-be among them)*;

nindru kalanga virumbiya thamizh kURum: were all in a state of shell-shock when You (as ThirugnAna Sambandhar) narrated the endearing songs (ThEvAram) in Tamil.

saligaiyu nandriyum vendriyu mangaLa perumaigaLum: That command**; Your compassion; Your triumphs; Your auspicious glories;

ganamung guNamum payil saravaNamum: Your loftiness; Your great virtues; the famous pond of Saravana where You grew up;

poRaiyum pugazhun thigazh thanivElum: Your forbearance; Your fame; Your matchless and bright Spear;

virudhu thulanga sikaNdiyil aNdarum urugi vaNanga varumpadhamum: Your holy feet, victoriously displayed on the peacock, worshipped by the Celestials ardently;

pala vitharaNamun thiRamun tharamum: Your manifold charitable acts; Your skills; Your nobleness;

thinai puna mAnin mrigamadha kungkuma kongaiyil nondhu: Your submission to the deer-like damsel (VaLLi) in the millet field, cuddling in her bosom, fragrant with the paste of musk and vermilion,

adivarudi maNandhu puNarndhadhuvum: caressing her feet, leading to Your marriage and union with her;

pala vijayamum: and Your several victories** - all these,

anbin mozhindhu mozhindhiyal maRavEnE: I want to keep on praising again and again with love. I can never forget Your greatness!

karudhi ilankai azhindhu vidumpadi: Considering the wrong acts (of Ravana), Rama decided to destroy LankA;

avuNar adanga madindhu vizhumpadi: He also was determined to annihilate all the asuras (demons);

kadhiravan indhu viLangi varumpadi vidumAyan: and He wanted to restore the old glories of the Sun and the Moon - so He, the mystical one, made sure that those events occurred;

kadakari anji nadungi varundhidu: When the wild elephant, GajEndran, was scared, trembling in distress in the pond,

vandh udhavum puyal: He (Vishnu), with the complexion of the dark cloud, rushed to his rescue;

indhirai kaNavan aranga mukundhan: He is the consort of Lakshmi; He is Ranganathan of Srirangam; He is also Mukundhan;

varunchakadu aRamOdhi: (As Krishna) He smashed to pieces the speeding wheel (SakadAsuran) which came rolling to kill him;

marudhu kulungi nalanga munindhidu varadhan: He also showed His rage on the Marutha trees which were shaken and felled down; He is Varadhan (bestower of boons);

alangal punaindh aruLung kuRaL vadivan: He came as a dwarf (Vamanan) wearing a garland;

nedung kadal mangavor ambu kai thodumeeLi: He (as Rama) was the strong archer who threw a powerful arrow from His hand to tame the vast sea, sending it into turmoil;

maruga: and You are that Great Vishnu's nephew!

purandharanun thavam ondriya birama puran thanilum: In this holy place, Brahmapuram (SeegAzhi***), where even IndrA settled once to do a penance,

guhan enbavar manadhinilum: and in the hearts of those who praise You calling "Oh GuhA!",

pari vondri amarndharuL perumALE.: You reside with relish and compassion, Oh Great One!


* Among the ChamaNas, there is a peculiar custom whereby the Master-to-be is surrounded by other masters who chant the ManthrA 'Today's misery is tomorrow's bliss' and begin to pluck all his hair.


** saligai means command: from this aspect the poet describes 16 features of Murugan until he speaks about His victories. This is noteworthy.


*** The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.


SeegAzhi is 11 miles south of Chidhambaram.
It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 771 saruvi igazhndhu - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]