பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/866

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 307 (ராவணன் செய்த பிழையை) மனத்தில் எண்ணி, இலங்கை அழிந்து போம்படியும், அரக்கர்கள் எல்லாரும் இறந்து விழும்படியும், சூரியனும் சந்திரனும் (பழைமை முறைப்படி) விளக்கத்துடன் வரும்படியும் செய்த திருமால் = மதகரி (கே ந்திரன்), பயந்து நடுக்கமுற்று வருத்த முற்றிருந்த மடுவினிட்த்தே வந்து உதவின மேகநிறப் பெருமான், இலக்குமி கணவன், சீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் முகுந்தன், தன்னைக் கொல்லவந்த அசுரன் மாளும்படி வண்டியை உதைத்து மோதினவன், மருதமரம் குலுங்கி நொந்துபோகக் கோபித்த வரதன், மாலை சூடியருளும் குறள்) வாமன வடிவமூர்த்தி, பெரிய கடல் நொந்து வாட்டமுற ஒரு அம்பைக் கையால்தொட்ட (மீளி) பராக்ரமசாலி- ஃேே -ஆகின்ற திருமாலின் மருகனே! இந்திரன் தவம் பொருந்திச் செய்த (பிரமபுரம்) சிகாழி என்னும் தலத்திலும், குகன் என்பவர் மனத்திலும் அன்பு பொருந்தி அமர்ந்தருளும் பெருமாளே! (பல விஜயமும் மொழிந்தியல் மறவேனே) 776. (சிந்து) கடலிற் பொருந்தி எழுகின்ற அழகிய சந்திரன் (வீசும்) நெருப்புப் பிழம்பாலே - (மிகுதியாலே) தென்றல் காற்று - சந்தனச் சோலையின் நறுமணத்துடன் எழுந்து வருவதாலே - மாலைப் பொழுதாகிய இரவின் செறிவாலே (இருட் கூட்டத்தாலே) 'குகா குகா என வகை வராதோ' - திருப்புகழ் 326 திருநீறிடும்போது தியானிக்கவேண்டிய மூன்று தலங்களில் ஒன்று சீகாழி - க்ழுமலம், கற்பகவூர், செருத்தணி செப்பி" கந்தரந்தாதி 29,

  1. நிலவு, தென்றல், கங்குல், காமத்தை வளர்த்தி வருத்துவன

- திருப்புகழ் 218. பக்கம் 53 கீழ்க்குறிப்பு. xX தரு வாசம் - சந்தனச் சோலையின் பரிமளம்.