திருப்புகழ் 764 அலைகடல் சிலை  (சீகாழி)
Thiruppugazh 764 alaikadalsilai  (seegAzhi)
Thiruppugazh - 764 alaikadalsilai - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தந்ததான

......... பாடல் .........

அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
     அரிவையர் வசையுட னங்கி போல்வர
          அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும்

அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
     அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
          அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய்

முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
     வழிவச மறஅற நின்று சோர்வுற
          முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே

முருகவிழ் திரள்புய முந்து வேலணி
     முளரியொ டழகிய தொங்கல் தாரினை
          முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ

சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
     திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
          திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி

திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
     திமிலையொ டறைபறை நின்று மோதிட
          சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே

மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
     மலரடி வருடியெ நின்று நாடொறு
          மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே

மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
     மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
          வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் ... அலை வீசும் கடல்,
வில் ஏந்திய மன்மதன், மழைக் காலத்துக் காற்று,

அரிவையர் வசையுடன் அங்கி போல் வர ... மாதர்களின் வசைப்
பேச்சு இவை எல்லாம் நெருப்பு போல (என்னிடம்) வர,

அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும் ...
அசைந்து வருகின்ற மாடுகளின் மணிகளின் ஒலி, அன்றில் பறவை,
குயில் இவற்றின் ஓசைக்குப் பயந்து நானும்,

அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ ... நெருப்பிலிட்ட
மெழுகு போல் உருகி, வியர்த்து விறுவிறுக்க,

அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற ... சாம்பிராணிப் புகையும்,
கஸ்தூரியும் விஷம் போலத் தாக்க,

அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய் ...
அணிந்துள்ள ஆபரணங்கள் ரத்ன மாலைகள் பலவும் வெந்து சாம்பலாக,
உடல் நிலை வேறுபட்டு,

முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம்
அற அற நின்று சோர்வு உற
... மார்பகங்கள் நெருப்பைச் சொரிய,
முன்பிருந்த நினைவானது அழிந்து, தன் வசம் மிகக் கெட நின்று, தளர்ச்சி
உண்டாக,

முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே ...
முழு நிலையில் வந்துள்ள விரக வேதனை நெருப்பை மொண்டு வீச,
அதனால் நான் சோர்வு அடையாமல்,

முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு
அழகிய தொங்கல் தாரினை
... வாசனை வீசுகின்ற திரண்ட புயங்கள்
வேகமாகச் செலுத்தும் வேலாயுதம், அற்புதப் பாதத் தாமரை இவையுடன்
அழகிய தொங்கும் பூ மாலையை,

முனிவு அற நினது அருள் தந்து என் மாலை
முனிந்திடாதோ
... வெறுப்பு, கோபம் இல்லாமல் உன்னுடைய
திருவருளைத் தந்து, என்னுடைய காம மயக்கத்தைக் கடிந்து நீக்காதோ?

சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி ... வில் போன்ற
நெற்றி, கயல் மீன் போன்ற கண்கள், செம்மை வாய்ந்த சொல்லை உடைய
வானவி தேவி,

திரி புரை பயிரவி திங்கள் சூடிய திகழ் சடை நெடியவள் ...
மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பைரவியாகிய சிவனது பத்தினி,
சந்திரனைச் சூடிய விளக்கமுற்ற சடையை உடைய பெரியவள்,

செம்பொன் மேனியள் சிங்கம் ஏறி ... செம்பொன் மேனி நிறத்தவள்,
சிங்க வாகனம் கொண்டவள்,

திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் ... கூட்டமான
படையாகப் பேய்களை உடையவள், ஒலி பொங்கி மேலெழும் ஊது
கொம்புகள்,

திமிலையொடு அறை பறை நின்று மோதிட ... திமிலைப்
பறையுடன், முழங்கும் பறை இவையெல்லாம் இருந்து பேரொலி செய்ய,

சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே ...
சிவபெருமானுடன் நடனம் செய்யும் மங்கை, மாது, உமை என்ற பார்வதி
பெற்ற முருக வேளே,

மலை தனில் ஒரு முநி தந்த மாது தன் மலர் அடி வருடியெ
நின்று நாள் தொறும்
... வள்ளி மலைச் சாரலில் தவம் செய்த ஒரு
முனிவர் பெற்ற வள்ளியின் திருவடியை வருடி நின்று, நாள் தோறும்,

மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே ...
மயில், நெருங்கி வரும் குயில், கிளி இவைகளை, புதியனவாய் (கவண்
கல் கொண்டு) கடிந்து (வள்ளிக்கு ஆயல் ஓட்டும் தொழிலில்) தொண்டு
செய்தவனே,

மழை முகில் தவழ் தரும் மண்டு கோபுர ... மழை கொண்ட
மேகங்கள் தவழ்கின்ற நெருங்கிய கோபுரங்கள்

மதிள் வயல் புடை உற விஞ்சு காழியில் ... மதில், வயல் இவை
சூழ மேம்பட்டு விளங்கும் சீகாழியில்*

வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே. ...
அவதரித்தக் கவுணிய குலத்துப் பிள்ளையாகிய ஞானசம்பந்தனே,
தேவர்களின் தம்பிரானே.


* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.


சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், புலவர் தம்மையே நாயகியாக
எண்ணிப் பாடுவதாக அமைந்தது. அலைகடல், மன்மதன், காற்று, மாதர்களின்
வசை, மாடுகளின் மணியோசை, அன்றில், குயில் முதலியவை தலைவனின்
பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.845  pg 2.846  pg 2.847  pg 2.848 
 WIKI_urai Song number: 768 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 764 - alaikadal silai (seegAzhi)

alaikadal silaimathan anthi yUthaiyum
     arivaiyar vasaiyuda nangi pOlvara
          asaivana vidaimaNi yanRil kOkilam ...... anjinAnum

azhalidu mezhukena vempi vErvezha
     akilodu mrukamatha nanju pOluRa
          aNipaNi maNipala venthu neeRezha ...... angamvERAy

mulaikanal sorivara munpu pOlninai
     vazhivasa maRARa ninRu sOrvuRa
          muzhuthukoL virakanal moNdu veesida ...... mangidAthE

murukavizh thiraLpuya munthu vElaNi
     muLariyo dazhakiya thongal thArinai
          munivaRa ninatharuL thanthen mAlaimu ...... ninthidAthO

silainuthal kayalvizhi senjol vAnavi
     thiripurai payiravi thingaL cUdiya
          thikazhsadai nediyavaL sempon mEniyaL ...... singamERi

thiraLpadai yalakaikaL pongu kOdukaL
     thimilaiyo daRaipaRai ninRu mOthida
          sivanuda nadamvaru mangai mAthumai ...... thanthavELE

malaithani lorumuni thantha mAthuthan
     malaradi varudiye ninRu nAdoRu
          mayilpayil kuyilkiLi vampi lEkadi ...... thoNdinOnE

mazhaimukil thavazhtharu maNdu kOpura
     mathiLvayal pudaiyuRa vinju kAzhiyil
          varumoru kavuNiyar maintha thEvarkaL ...... thambirAnE.

......... Meaning .........

alai kadal silai mathan anthi Uthaiyum: The wavy sea, Manmathan (God of Love) with his bow, the squall of the rainy season,

arivaiyar vasaiyudan angi pOl vara: and the gossip spread by women are all burning me like fire;

asaivana vidai maNi anRil kOkilam anji nAnum: I am scared of the sound of bells tied to the swaying cattle returning home and the noise of the birds, anRil (kind of swan) and cuckoo;

azhal idu mezhuku ena vempi vErvu ezha: I am sweating profusely, melting like the wax on fire;

akilodu mrukamatha nanju pOl uRa: the smoke from the incence and the fragrance of musk are attacking me like poison;

aNi paNi maNi pala venthu neeRu ezha angam vERAy: the jewels and chains of gems that I wear are burning into ash, and my whole body is undergoing transformation;

mulai kanal sori vara munpu pOl ninaivu azhi vasam aRa aRa ninRu sOrvu uRa: with my blazing bosom, all the thoughts of my past are fading, and I have completely lost control of myself and have become weak;

muzhuthu koL viraku anal moNdu veesida mangidAthE: the agony of separation is hitting me like fire with full impact, and lest I wither away,

muruku avizh thiraL puyam unthu vEl aNi muLariyodu azhakiya thongal thArinai: (I need) the spear forcefully wielded by Your strong fragrant shoulders and Your wonderful lotus feet, along with the beautifully swinging garland;

munivu aRa ninathu aruL thanthu en mAlai muninthidAthO: all of which, will You not grant them to me with grace, and without any indifference or anger, so that my delusory passion is chided away?

silai nuthal kayal vizhi sem sol vAnavi: She is Goddess VAnavi with a bow-like forehead, eyes like kayal fish and with well-chosen kind words;

thiri purai payiravi thingaL cUdiya thikazh sadai nediyavaL: She is superior to the Trinity; She is Bhairavi, the Consort of Bhairavar (Lord SivA); She is the tall Goddess wearing the crescent moon on Her bright matted hair;

sempon mEniyaL singam ERi: Her complexion is reddish gold, and Her vehicle is the Lion;

thiraL padai alakaikaL pongu kOdukaL thimilaiyodu aRai paRai ninRu mOthida: She has a battalion of fiends; the high-sounding horns, trumpets, thimilais (kind of a drum) and the resonant drums made a loud noise

sivanudan nadam varu mangai mAthu umai thantha vELE: while She danced along with Lord SivA; She is Mother UmA; that PArvathi delivered You, Oh Lord MurugA!

malai thanil oru muni thantha mAthu than malar adi varudiye ninRu nAL thoRum: Every day, You used to caress the feet of the damsel VaLLi, who was born to a sage doing penance in the foothill of Mount VaLLimalai;

mayil payil kuyil kiLi vampilE kadi thoNdinOnE: and You assisted her in (guarding the millet-field by) chasing away the birds like peacocks, cuckoos and parrots, by using new slings with stones!

mazhai mukil thavazh tharum maNdu kOpura: In this town, rainy clouds hover over the closely-built temple towers;

mathiL vayal pudai uRa vinju kAzhiyil: paddy fields and fortress walls surround this famous place, SeegAzhi*;

varum oru kavuNiyar maintha thEvarkaL thambirAnE.: You were born here (as ThirugnAna Sambandhar) in the lineage of KavuNiyars; You are the Lord of the celestials, Oh Great One!


* SeegAzhi is 11 miles south of Chidhambaram. It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.


The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan.
The sea, the God of Love Manmathan, the breeze, the women's gossip and the sounds of bell and birds are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 764 alaikadal silai - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]