திருப்புகழ் 763 வண்டு அணியும்  (திருமயேந்திரம்)
Thiruppugazh 763 vaNduaNiyum  (thirumayEndhiram)
Thiruppugazh - 763 vaNduaNiyum - thirumayEndhiramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தந்தன தாந்த தானன
     தந்தன தந்தன தாந்த தானன
          தந்தன தந்தன தாந்த தானன ...... தனதான

......... பாடல் .........

வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
     அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
          வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல

வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
     யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
          வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன்

கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
     குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
          கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர்

கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
     நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
          கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ...... முழல்வேனோ

அண்டரு டன்தவ சேந்து மாதவர்
     புண்டரி கன்திரு பாங்கர் கோவென
          அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை

அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
     ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
          அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா

செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
     யென்பணி யன்கன சாம்பல் பூசிய
          செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகோனே

திங்கள்மு கந்தன சாந்து மார்பின
     ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
          சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை
போந்த வாள் நுதல்
... வண்டுகள் மொய்க்கும், நறுமணம் கமழும்
கூந்தலை உடையவர்களின் கண் அம்பு போன்று இருக்கும். வில்லைப்
போன்ற ஒளி பொருந்திய நெற்றி,

வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல வண்
பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ்
...
வளப்பம் பொருந்திய முத்தை ஒத்துத் திகழும் நன்கு அமைந்த
வரிசையான பற்கள், குயிலைப் போன்ற நன்கு பயிலும் மொழிகள், மலை
போன்ற மார்பகம், அதில் அழகிய தேமல், அழகிய குமிழம் பூ போன்ற
மூக்கு,

ஆம்பல் தோள் கர(ம்) வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல்
இடை மடவார்
... மூங்கில் போன்ற தோளும், கையும், வஞ்சிக் கொடி
போன்ற, நூல் போன்ற நுண்ணிய இடை, இவைகளை உடைய
விலைமாதர்கள்

பொன் கண்டவுடன் களி கூர்ந்து பேசிகள் ... பொருளைப்
பார்த்தவுடனேயே மகிழ்ச்சி மிகுந்து பேசுபவர்கள்,

குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் ... கலகத்தை மூட்டும்
குரலுடன் எல்லாவற்றையும் பற்றிப் பேசுபவர்கள்,

கண் சுழலும் படி தாண்டி ஆடிகள் சதிகாரர் ... கண்கள் சுழலும்படி
தாண்டுவதும் ஆடுவதுமாக உள்ள வஞ்சகக்காரிகள்,

கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த
பாவிகள்
... (பணமில்லாதவரிடம்) இரப்போர்கள் ஏந்தும் பையையும்,
தடி ஒன்றையும் கொடுத்து (பிச்சைக்காரனாகிப்) போவென்று விரட்டி,
விஷத்தையும் கலந்து கொடுக்கும் வஞ்சகம் நிறைந்த பாவிகள்,

கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் உழல்வேனோ ...
(இத்தகையோரின்) அதிகார வரம்பிலும் இவ்வுடல் நலிவுற்று, நாய்
போன்ற அடியேனும் திரிவேனோ?

அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர்
கோ என
... தேவர்களும், தவ நிலையை மேற்கொண்டுள்ள தவசிகளும்,
தாமரையோனும் (பிரமனும்), லக்ஷ்மியின் கணவனான திருமாலும் கோ
என்று ஓலம் இட,

அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை அங்கம்
ஒடுங்கிட மாண்டு ஒட
... பயப்பட வேண்டாம் என்னும்படி சென்று
வீரத்துடன் அசுரர்களை அவர்கள் உடல் ஒடுங்கி இறந்து ஒழியச் செய்து,

ஆழிகள் எண்கிரியும் பொடி சாம்பர் நூறிட அந்தகனும் கயிறு
ஆங்கு ஐ வீசிட விடும்வேலா
... கடல்களும், எட்டு மலைகளும்
பொடி சாம்பலாய்த் தூளாக, யமனும் தனது பாசக் கயிற்றை அவ்விடம்
(போர்க்களத்தில்) வியப்புடன் வீசிட வேலாயுதத்தைச் செலுத்தியவனே,

செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன்
கன சாம்பல் பூசிய செம் சடலன் சுத சேந்த வேலவ
முருகோனே
... பூச் செண்டை அணிந்துள்ள சடையில் பாம்பு, கங்கை,
சந்திரன், எலும்பு (ஆகியவற்றை) அணிந்தவன், பெருமை பொருந்திய
திரு நீற்றைப் பூசியுள்ள சிவந்த உடலை உடையவன் (ஆகிய
சிவபெருமானுடைய) பிள்ளையே, சிவப்பு நிறம் உடையவனே, வேலனே,
முருகோனே,

திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு
பாங்கி மானோடு
... சந்திரனை ஒத்த திருமுகத்தையும், மார்பில்
சந்தனப் பூச்சையும் உடையவள், எனது உள்ளத்தில் புகுந்துள்ள உன்
தோழி வள்ளியுடன்

சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய பெருமாளே. ... மனம்
மகிழ்ந்து திருமயேந்திரம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* திருமயேந்திரம் கொள்ளிடம் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள
ஆச்சாபுரம் (திருநல்லூர்) என்ற ஊருக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.843  pg 2.844  pg 2.845  pg 2.846 
 WIKI_urai Song number: 767 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 763 - vaNdu aNiyum (thirumayEndhiram)

vaNdaNi yumkamazh kUntha lArvizhi
     ampiya lunjcilai pOntha vANuthal
          vaNdara Lanthika zhAyntha vArnakai ...... kuyilpOla

vaNpayi lumkuva dANda mArmulai
     yinpoRi yangumi zhAmpal thOLkara
          vanjiye numkodi sErntha nUlidai ...... madavArpon

kaNdavu dankaLi kUrnthu pEsikaL
     kuNduNi yumkural sAnga mOthikaL
          kaNsuzha lumpadi thANdi yAdikaL ...... sathikArar

kanjuLi yunthadi yeenthu pOvena
     nanjaiyi dumkava dArntha pAvikaL
          kampaiyi lumchada mAynthu nAyanu ...... muzhalvEnO

aNdaru danthava sEnthu mAdhavar
     puNdari kanthiru pAngar kOvena
          anjale numpadi pOnthu veeramo ...... dasurArai

angamo dungida mANdo dAzhika
     LeNkiri yumpodi sAmpar nURida
          anthaka numkayi RAngai veesida ...... vidumvElA

seNdaNi yumcadai pAnthaL neermathi
     yenpaNi yankana sAmpal pUsiya
          senjada lansutha sEntha vElava ...... murukOnE

thingaLmu kanthana sAnthu mArpina
     LenRanu Lampuku pAngi mAnodu
          sinthaima kizhnthuma yEnthra mEviya ...... perumALE.

......... Meaning .........

vaNdu aNiyum kamazh kUnthalAr vizhi ampu iyalum silai pOntha vAL nuthal: The eyes of these women, with fragrant hair swarmed by the beetles, look like arrows; they have bright bow-like forehead;

vaN tharaLam thikazh Ayntha vAr nakai kuyil pOla vaN payilum kuvadu ANda mAr mulaiyin poRi am kumizh: their teeth in neat rows look like robust pearls; their speech is refined like that of the cuckoo; their bosom is like the mountain, and it has discoloration of the skin; their nose is like the beautiful kumizham flower;

Ampal thOL kara(m) vanji enum kodi sErntha nUl idai madavAr: their shoulders and arms are soft like bamboo; their slender waist is like the creeper vanji (rattan reed) and is also thin like a thread; the whores who have such characteristics

pon kaNdavudan kaLi kUrnthu pEsikaL: speak gleefully once they see money;

kuNduNiyum kural sAngam OthikaL: they talk about all and sundry in a tone that provokes trouble;

kaN suzhalum padi thANdi AdikaL sathikArar: they are treacherous ones, rolling their eyes and dancing a lot;

kanjuLiyum thadi eenthu pO ena nanjai idum kavadu Arntha pAvikaL: they hand out a garbage bag and a walking stick, usually carried by beggars, and chase away their (moneyless) suitors; these sinners are capable of even poisoning the food;

kampaiyilum sadam mAynthu nAyanum uzhalvEnO: why should I submit to the authority of such whores and roam about, like a dog, suffering humiliation of the body and the soul?

aNdar udan thavasu Enthu mAdhavar puNdarikan thiru pAngar kO ena: As all the celestials, the sages who have undertaken penance, BrahmA on the lotus and Lord VishNu, the consort of Lakshmi, screamed for help,

anjal enumpadi pOnthu veeramodu asurArai angam odungida mANdu oda: You went out with valour allaying their fears and, granting them refuge, crushed the bodies of the demons to death;

AzhikaL eNkiriyum podi sAmpar nURida anthakanum kayiRu Angu ai veesida vidumvElA: the sea and the eight mountains were reduced to ashes and Yaman, God of Death, threw his rope of bondage (in the battlefield) in amazement while You wielded Your spear, Oh Lord!

seNdu aNiyum sadai pAnthaL neer mathi enpu aNiyan kana sAmpal pUsiya sem sadalan sutha sEntha vElava murukOnE: On His flower-decked matted hair, He wears a serpent, river Gangai, crescent moon and bone; He has a reddish body on which He smears the holy ash; He is Lord SivA and You are His child with red complexion, Oh Lord MurugA with the spear!

thingaL mukam thanam sAnthu mArpinaL enRan uLLam puku pAngi mAnOdu: She has a moon-like face and she smears sandalwood paste on her chest; She is Your consort who is occupying my heart; along with that VaLLi,

sinthai makizhnthu mayEnthiram mEviya perumALE.: You are seated with relish in the town of Thiru MayEnthiram,* Oh Great One!


* ThirumayEndhiram is near KoLLidam railway station adjacent to a village called AchchApuram - ThirunallUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 763 vaNdu aNiyum - thirumayEndhiram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]