பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயேந்திரம்) திருப்புகழ் உரை 285 திருமயேந்திரம் 767. வண்டுகள் மொய்க்கும் நறுமணக் கூந்தலை உடையவர்கள், கண்ணானது அம்பு போன்றிருக்கும்; வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றி, வளப்பம் பொருந்திய முத்தை நிகர்த்துவிளங்குவனவாய் நன்கு அமைந்த ஒழுங்கான பற்கள், குயில்போல நன்கு பயிலும் (மொழிகள்), மலைபோன்று மார்பில் உள்ள கொங்கை, அதில் அழகிய (பொறி) தேமல், அழகிய குமிழம்பூப் போல மூக்கு (ஆம்பல்) மூங்கில் போன்ற தோளும் கையும், வஞ்சிக்கொடி போன்ற நூலுக்கு இணையான இடை, இவைதமை உடைய மாதர்கள் - பொன் (பொருளைக்) கண்டவுடனே மகிழ்ச்சி மிக்குப் பேசுபவர்கள், (குண்டுணியுங் குரல்) கலகத்தை மூட்டும் குரலுடனே (சாங்கம்) எல்லா விஷயங்களையும் பேசுபவர்கள், கண்கள் சுழலும்படித் தாண்டுவதும் ஆடுவதுமாய் உள்ள வஞ்சனைப் பேர்வழிகள் (கஞ்சுளி) பரதேசிப் பையையும் தடியொன்றையும் கொடுத்துப் (பிச்சைக் காரனாக்கி)ப் போ என்று. விஷத்தையும் கலந்து கொடுக்கும் வஞ்சம் நிறைந்த பாவிகள் - (அத்தகையோரது) கம்பையிலும் அதிகார வரம்பில் - எல்லையில், சடம் மாய்ந்து - இவ்வுடல் நலிவுற்று - கெடுதலடைந்து அடியேனும் திரிவேனோ! தேவர்கள், தவநிலையை (ஏந்தும்) மேற்கொண்டுள்ள மகா தவசிகள், (புண்டரிகன்) தாமரையோன் - பிரமன், திருபாங்கர் லகூழ்மியின் கணவர் . இவர்களெல்லாம் (கோ என) இரங்கி ஒலம் என, அவர்களை அஞ்சாதீர்கள் என்னும்படிச் சென்று வீரத்துடனே, அசுரர்களை அவர்களுடைய உடல் ஒடுங்கி (மான்ை - மானன்டல்) தொட - இறத்தல் உண்டாக அல்லது மாண்டு (ஒட) ஒட இறந்தொழிய, கடல்களும் எட்டு மலைகளும் பொடி சாம்பராய்த் தூளாக, யமனும் அவனது பாசக்கயிற்றை, ஆங்கு - அவ்விடம் (ஐ) வியப்புடன் வீச வேலாயுதத்தைச் செலுத்தினவனே!