திருப்புகழ் 765 இரதமான தேன்  (சீகாழி)
Thiruppugazh 765 iradhamAnathEn  (seegAzhi)
Thiruppugazh - 765 iradhamAnathEn - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

இரத மான தேனூற லதர மான மாமாத
     ரெதிரி லாத பூணார ...... முலைமீதே

இனிது போடு மேகாச உடையி னாலு மாலால
     விழியி னாலு மாலாகி ...... யநுராக

விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
     ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி

விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
     விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய்

அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
     அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற

அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
     அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற்

புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
     புரண பூர ணாகார ...... முருகோனே

புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
     புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் ... சுவை நிரம்பிய
தேன் போல ஊறும் வாய் இதழ் ஊறலை உடைய அழகிய
விலைமாதர்களின்

எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே ... நிகர் இல்லாத அணிகல
மாலைகள் கொண்ட மார்பகங்களின் மேல்

இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால
விழியினாலும் மால் ஆகி
... அழகாக அணிந்துள்ள மேலாடை
உடையினாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும் காம
மயக்கம் கொண்டு,

அநுராக விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாடோறும்
ம்ருகமத ஆதிசேர் ஓதி நிழல் மூழ்கி
... காமப் பற்றினால்
வேதனைப்பட்டு, படுக்கையில் எப்போதும் நாள் தோறும் கஸ்தூரி
முதலிய நறு மணங்கள் சேர்ந்துள்ள கூந்தலின் நிழலிலே மூழ்கினவனாய்,

விளையும் மோக மா மாயை கழலுமாறு ... (அதனால்) ஏற்படும்
காம மயக்கம் என்னும் பெரிய மாயை என்னை விட்டு அகலுமாறு,

நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள் தாராய் ... நாயினும்
அடியவனாகிய நானும் வீணன் ஆகாதவாறு உன்னுடைய திருவருளைத்
தந்தருளுக.

அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள்
பூசியா மூடர்
... அரகரா என்று கூறாத மூடர்கள், திருநீற்றைப் பூசாத
மூடர்கள், அடியவர்களைப் பணியாத மூடர்கள்,

கரை ஏற அறிவு நூல் க(ல்)லா மூடர் நெறியிலே நி(ல்)லா
மூடர்
... கரை ஏறுவதற்கான நல்ல அறிவைத் தரும் ஞான நூல்களைக்
கல்லாத மூடர்கள், நல்ல நெறியைக் கடைபிடிக்காத மூடர்கள்,

அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் புரள வீழ்வர் ... தருமம்
இன்னதென்று கூட விசாரணை செய்யாத மூடர்கள் ஏழு* நரகங்களிலும்
புரளும்படி விழுவார்கள்.

ஈராறு கர விநோத சேய் சோதி ... பன்னிரண்டு திருக் கரங்களை
உடைய விநோதனே, செவ்வேளே, ஜோதி வடிவானவனே,

புரணம் பூரணாகார முருகோனே ... நிறைந்த ஒளி பொருந்திய
பூரண உருவத்தனே, முருகனே,

புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி
வாழ் தேவர் பெருமாளே.
... மேகம் உலாவும் விண் நாட்டவர்
போற்றிப் பரவி நாள்தோறும் ஈடேறுகின்ற புகலி என்னும் சீகாழியில்**
வீற்றிருந்து வாழ்கின்ற, தேவர்களின் பெருமாளே.


* ஏழு நரகங்கள் பின்வருமாறு:

கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).


** 'புகலி' சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.

சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.


சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.847  pg 2.848  pg 2.849  pg 2.850 
 WIKI_urai Song number: 769 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 765 - iradhamAna (seegAzhi)

iratha mAna thEnURa lathara mAna mAmAtha
     rethiri lAtha pUNAra ...... mulaimeethE

inithu pOdu mEkAsa udaiyi nAlu mAlAla
     vizhiyi nAlu mAlAki ...... yanurAka

viraka mAki yEpAya lidaivi dAmal nAdORu
     mrukama thAthi sErOthi ...... nizhalmUzhki

viLaiyu mOka mAmAyai kazhalu mARu nAyEnum
     vizhala nAyvi dAthEni ...... naruLthArAy

araka rAe nAmUdar thiruve NeeRi dAmUdar
     adikaL pUsi yAmUdar ...... karaiyERa

aRivu nUlka lAmUdar neRiyi lEni lAmUdar
     aRamvi sAri yAmUdar ...... narakEzhiR

puraLa veezhva reerARu karavi nOtha sEyjOthi
     puraNa pUra NAkAra ...... murukOnE

puyalu lAvu sENAdu paravi nALu meedERu
     pukali mEvi vAzhthEvar ...... perumALE.

......... Meaning .........

irathamAna thEn URal atharamAna mA mAthar: The trickle oozing out of the beautiful whores' mouth is sweet like honey;

ethir ilAtha pUN Aram mulai meethE inithu pOdum EkAsam udaiyinAlum AlAla vizhiyinAlum mAl Aki: obsessed with passion by looking at the nicely clad garment covering their bosom adorned by matchless ornamental chains and their eyes filled with AlakAla poison,

anurAka virakam AkiyE pAyal idaividAmal nAdORum mrukamatha AthisEr Othi nizhal mUzhki: I became miserable, smitten by love, and always reclined on the bed day in and day out, drowned in the shade of their hair, with the fragrance of musk and other scents;

viLaiyum mOka mA mAyai kazhalumARu: in order that the delusory and fanatic passion of mine is shaken off,

nAyEnum vizhalanAy vidAthE nin aruL thArAy: and lest I, meaner than the dog, become a total waste, kindly bestow Your grace upon me!

arakarA enA mUdar thiru veN neeRu idA mUdar adikaL pUsiyA mUdar: The stupid people who do not say the name of the Lord as "Hara, Hara", those fools who do not wear the holy ash,

karai ERa aRivu nUl ka(l)lA mUdar neRiyilE ni(l)lA mUdar: those unwise ones who never learn texts of knowledge that show them the way to cross over this birth, the foolish people who never follow the virtuous path,

aRam visAriyA mUdar naraku Ezhil puraLa veezhvar: and those idiots who do not even inquire into what righteousness is will all fall into the seven* worst hells.

eerARu kara vinOtha sEy jOthi: Oh Wonderful Lord with twelve hallowed hands, Oh reddish One in the form of an Effulgence,

puraNam pUraNAkAra murukOnE: Oh MurugA, You are the all-inclusive Lord, full of bright light.

puyal ulAvu sENAdu paravi nALum eedERu pukali mEvi vAzh thEvar perumALE.: The people of the celestial land, over which clouds drift about, come everyday to this place Pukali (SeegAzhi**), and worship You and attain salvation, and You have chosen this place as Your abode, Oh Great One!


* The seven hells are:

kUdAsalam, kumbipAkam, aLLal, athOkathi, Arvam, pUthi and chenthu (pingalam).


* ** 'Pukali' is one of the names of SeekAzhi.

The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.


SeegAzhi is 11 miles south of Chidhambaram. It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 765 iradhamAna thEn - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]