திருப்புகழ் 682 அணி செவ்வியார்  (வடதிருமுல்லைவாயில்)
Thiruppugazh 682 aNisevviyAr  (vadathirumullaivAyil)
Thiruppugazh - 682 aNisevviyAr - vadathirumullaivAyilSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதய்ய தானன தானன
     தனதய்ய தானன தானன
          தனதய்ய தானன தானன ...... தனதான

......... பாடல் .........

அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
     தனநிவ்வி யேகரை யேறிட
          அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர

அருள்வல்லை யோநெடு நாளின
     மிருளில்லி லேயிடு மோவுன
          தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே

குணவில்ல தாமக மேரினை
     யணிசெல்வி யாயரு ணாசல
          குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத

குடிலில்ல மேதரு நாளெது
     மொழிநல்ல யோகவ ரேபணி
          குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா

பணிகொள்ளி மாகண பூதமொ
     டமர்கள்ளி கானக நாடக
          பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே

படரல்லி மாமலர் பாணம
     துடைவில்லி மாமத னாரனை
          பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா

மணமொல்லை யாகி நகாகன
     தனவல்லி மோகன மோடமர்
          மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா

மருமல்லி மாவன நீடிய
     பொழில் மெல்லி காவன மாடமை
          வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அணிசெவ்வியார் திரை சூழ்புவி ... அழகு நிறைந்த மாதர் (பெண்),
கடல் சூழ்ந்த பூமி (மண்),

தன நிவ்வியே கரை யேறிட ... செல்வம் (பொன்) என்ற
மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான

அறிவில்லியாம் அடியேன் இடரதுதீர ... அறிவற்றவனாகிய
அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய

அருள்வல்லையோ ... திருவருளை வலிய அருள்வாயோ?

நெடு நாளினம் இருளில்லிலேயிடுமோ ... அல்லது நீண்ட
காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான
பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ?

உனதருளில்லையோ ... உனது திருவருள் என்மீது சிறிதும்
இல்லையோ?

இனமானவை யறியேனே ... உன்அடியார் கூட்டத்தை நான்
அறியவில்லையே.

குணவில்லதா மக மேரினை ... சீரான வில்லாக மகா மேருவைத்
தாங்கிய*

அணிசெல்வியாய் அருணாசல குரு ... அழகிய தாயார் பார்வதி
தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே,

வல்ல மாதவ மேபெறு குணசாத ... திண்ணிய பெரும் தவநிலையே
பெறும்படியான நற்குணத்தோடு கூடிய பிறப்பில் கிடைத்த

குடிலில்லமே தரு நாளெது மொழி ... உடலாகிய வீட்டை எனக்கு
நீ தரும் நாள் எதுவெனக் கூறுவாயாக.

நல்ல யோகவ ரேபணி குணவல்லவா ... நல்ல யோகிகளே
பணிகின்ற நற்குண சீலனே,

சிவனேசிவ குருநாதா ... சிவனே, சிவபிரானுக்கு குரு மூர்த்தியே,

பணிகொள்ளி ... பாம்புகளை ஆபரணமாகப் பூண்டவளும்,

மாகண பூதமொடமர்கள்ளி ... பெரிய கணங்களாகிய பூதங்களோடு
அமர்ந்த திருடியும்,

கானக நாடக பரமெல்லியார் ... காட்டில் சிவனுடன் நடனம்
ஆடுகின்றவளும், மேலான மென்மையுடையவளுமான

பரமேசுரி தருகோவே ... பரமேஸ்வரி பார்வதிதேவி பெற்ற தலைவனே,

படரல்லி மாமலர் பாணமதுடைவில்லி ... நீரில் படரும் அல்லி,
தாமரை, நீலோற்பலம் முதலிய சிறந்த மலர்ப் பாணங்களை உடைய
வில்லியாகிய

மாமதனாரனை பரிசெல்வியார் மருகா ... அழகிய மன்மதனின்
அன்னையும், பெருமை வாய்ந்த செல்வியுமாகிய லக்ஷ்மிதேவியின்
மருமகனே,

சுர முருகேசா ... தெய்வ முருகேசனே,

மணமொல்லையாகி நகாகனதனவல்லி ... திருமணம் விரைவில்
புரிந்தவளும், பெருமை வாய்ந்த மலைக் கொடியும் ஆகிய பார்வதிதேவி

மோகனமோடமர் மகிழ்தில்லை ... வசீகரத்துடன் அமர்ந்து மகிழும்
சிதம்பரத்தில்

மாநட மாடினர் அருள்பாலா ... பெரிய நடனம் ஆடிய சிவபிரான்
அருளிய பாலனே,

மருமல்லி மாவன நீடிய ... வாசனைமிக்க மல்லிகை பெருங்காடாக
வளர்ந்துள்ள

பொழில் மெல்லி காவன மாடமை ... சோலையும், மென்மையான
பூந்தோட்டங்களும், நீர்நிலைகளும் பக்கங்களில் சூழ்ந்து அமைந்துள்ள

வடமுல்லைவாயிலின் மேவிய பெருமாளே. ...
வடமுல்லைவாயிலில்** மேவும் பெருமாளே.


* சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.


** வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில்
3 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.641  pg 2.642  pg 2.643  pg 2.644 
 WIKI_urai Song number: 686 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 682 - aNisevvi yAr (vadathirumullai vAyil)

aNisevvi yAr thirai sUzh buvi
     dhana nivviyE karai yErida
          aRiv illiyAm adiyEn idar ...... adhutheera

aruL vallaiyO nedu nALinam
     iruL illilE yidumO unadhu
          aruL illaiyO ina mAnavai ...... aRiyEnE

guNa villadhA maga mErinai
     aNi selviyA aruNAchala
          guru vallamA thavamE peRu ...... guNajAthA

kudil illamE tharu nALedhu
     mozhi nalla yOgava rEpaNi
          guNa vallavA sivanE siva ...... gurunAtha

paNi koLLi mAgaNa bUthamodu
     amar kaLLi kAnaka nAtaka
          para melli yAr para mEsuri ...... tharukOvE

padar alli mA malar bANama
     dhudai villi mA matha nAranai
          pari selviyAr marugA sura ...... murugEsA

maNa mollai yAgi nakAgana
     thana valli mOhana mOd amar
          magizh thillai mAnatam Adinar ...... aruLbAlA

maru malli mAvana neediya
     pozhil melli kAvana mAdamai
          vadamullai vAyilin mEviya ...... perumALE.

......... Meaning .........

aNisevvi yAr thirai sUzh buvi: Beautiful women, the world surrounded by the seas,

dhana nivviyE karai yErida: and wealth are the oceans of lust which I can hardly cross.

aRiv illiyAm adiyEn idar adhutheera: To assuage the sufferings of this stupid me,

aruL vallaiyO: will You ever deign to grant me Your grace?

nedu nALinam iruL illilE yidumO: Or are You determined to let me rot in these dark prisons of births for a long long time?

unadhu aruL illaiyO: Am I going to be denied even a little of Your grace?

ina mAnavai aRiyEnE: I am unable to recognise the multitude of Your devotees.

guNa villadhA maga mErinai: The Great Mount Meru was lifted by Her* as a bow

aNi selviyA aruNAchala guru: by pretty Goddess PArvathi whose consort is AruNachAlar, and You are His Master!

vallamA thavamE peRu guNajAtha: In a virtuous birth, with deep meditation,

kudil illamE tharu nALedhu mozhi: You have to give me this home of my body; and please tell me when You will do so.

nalla yOgava rEpaNi guNa vallavA: You are praised by great saints, Oh Virtuous One!

sivanE siva gurunAthA: You are SivA and also the Master of SivA!

paNi koLLi mAgaNa bUthamodu amar kaLLi: She wears snakes for jewels; She steals our hearts and revels in the company of great devils;

kAnaka nAtaka para melli yAr: She rejoices in dancing with SivA in the jungles; She is soft as soft can be;

para mEsuri tharukOvE: and She is the Supreme Goddess, PArvathi. You are the Great King She has bestowed with us.

padar alli mA malar bANamadhudai villi: He is an archer with arrows of waterborne flowers such as lotus, lily, neelOthpalam (a blue flower) etc;

mA matha nAranai pari selviyAr marugA: and He is Great Manmathan (Love God). His mother, the renowned Goddess of Wealth, is Lakshmi. You are Her Nephew!

sura murugEsA: You are the God of all DEvAs, Oh MurugA!

maNa mollai yAgi nakAgana thana valli: Goddess PArvathi, who married young, and who is the creeper-like damsel of Mount Himalayas,

mOhana mOd amar magizh thillai mAnatam Adinar: loves to sit captivatingly at Chidhambaram, where Lord NadarAjA performs the Great Cosmic dance;

aruLbAlA: and You are that SivA's dear son!

maru malli mAvana neediya pozhil: A lush growth of fragrant jasmine plants

melli kAvana mAdamai: and soft flowers abound in elegant gardens with ponds all around at

vadamullai vAyilin mEviya perumALE.: VadamullaivAyil**, which is Your abode, Oh Great One!


* Lord SivA held Mount MEru as a bow in His left hand and the hand belongs to PArvathi.


** VadamullaivAyil is very near Chennai, 3 miles north-east of Aavadi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 682 aNisevvi yAr - vadathirumullaivAyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]