திருப்புகழ் 681 கார்ச் சார் குழலார்  (திருவேற்காடு)
Thiruppugazh 681 kArchchArkuzhalAr  (thiruvERkAdu)
Thiruppugazh - 681 kArchchArkuzhalAr - thiruvERkAduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்தாதன தானன தானன
     தாத்தாதன தானன தானன
          தாத்தாதன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

கார்ச்சார்குழ லார்விழி யாரயி
     லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
          வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே

காழ்க்காதல தாமன மேமிக
     வார்க்காமுக னாயுறு சாதக
          மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே

பார்ப்பாயலை யோவடி யாரொடு
     சேர்ப்பாயலை யோவுன தாரருள்
          கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா

பார்ப்பாவல ரோதுசொ லால்முது
     நீர்ப்பாரினில் மீறிய கீரரை
          யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே

வார்ப்பேரரு ளேபொழி காரண
     நேர்ப்பாவச காரண மாமத
          ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப

வாக்காசிவ மாமத மேமிக
     வூக்காதிப யோகம தேயுறு
          மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே

வேற்காடவல் வேடர்கள் மாமக
     ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
          வேற்காடுறை வேதபு ரீசுரர் ...... தருசேயே

வேட்டார்மக வான்மக ளானவ
     ளேட்டார்திரு மாமண வாபொனி
          னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கார்ச் சார் குழலார் விழி ஆர் அயிலார் ... மேகத்தை ஒத்த கூந்தலை
உடையவர்கள், கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள்,

பால் மொழியார் இடை நூல் எழுவார் ... பால் போல் இனிய
சொற்களை உடையவர்கள், இடையானது நூல் போல நுண்ணிதாக
உடையவர்கள்

சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே ... பொருந்திய இள
நீரைப் போன்ற மார்பகங்களை உடையவர்களாகிய விலைமாதர்கள்
மீதுள்ள மயக்கத்தாலே,

காழ்க் காதலது ஆம் மனமே ... திண்ணியதான அன்பு பூண்டுள்ள
மனமே,

மிக வார்க் காமுகனாய் உறு சாதக ... மிக்க காமப் பித்தனாக
இருக்கின்ற ஜாதகத்தை உடையவனும்,

மா பாதகனாம் அடியேனை ... மிகவும் பெரிய பாதகச் செயல்களைப்
புரிபவனுமாகிய அடியேனை,

நின் அருளாலே பார்ப்பாய் அலையோ ... உன்னுடைய திருவருள்
கொண்டு பார்க்க மாட்டாயோ?

அடியாரொடு சேர்ப்பாய் அலையோ ... உனது அடியார்களோடு
சேர்க்க மாட்டாயோ?

உனது ஆர் அருள் கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு
குமரேசா
... உன்னுடைய பூரண அருளை நிரம்பத் தர மாட்டாயோ?
உமா தேவி பெற்ற குமரேசனே,

பார்ப் பாவலர் ஓது சொ(ல்)லால் ... பூமியில் உள்ள புலவர்கள் ஓதும்
புகழ்ச் சொற்களால்

முது நீர்ப் பாரினில் மீறிய கீரரை ... பழைய கடல் சூழ்ந்த
இவ்வுலகில் மேம்பட்டு விளங்குபவராகிய நக்கீரரை*

ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே ...
மகிழ்ந்து ஏற்பவனே, உனது திருவருளை அதேபோலப் பாலித்து ஒப்பற்ற
ஒரு உபதேசச் சொல்லை எனக்கு அருளுவாயாக.

வார்ப்பேர் அருளே பொழி காரண ... (உலகத்துக்கு) நீடிய பேர்
அருளையே பொழிந்த மூல காரணனே,

நேர்ப் பாவ ச காரணமா(ம்) ... நேரிட்டு எதிர்த்த பாவத்துக்குத்
துணைக் காரணமாகிய

மத ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப வாக்கா ... சமண
மதத்தை ஏற்பாடு செய்த மதக் குருக்கள் அழிபட (தேவாரப் பாடல்களை
திருஞானசம்பந்தராக வந்து) கூறிய, கோபம் கொண்ட திருவாக்கை
உடையவனே,

சிவ மா மதமே மிக ஊக்க அதிப ... சிறந்த சிவ மதமே பெருகும்படி
முயற்சிகளைச் செய்த தலைவனே,

யோகமதே உறும் மாத்தா சிவ பால குகா அடியர்கள்
வாழ்வே
... யோக நிலையில் இருக்கும் பெரியவனே, சிவனது குமரனே,
குகனே அடியார்களின் செல்வமே,

வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா
மகிணா
... வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்களின் சிறந்த
பெண்ணாகிய வள்ளியிடம் அன்பு பூண்ட நல்ல அழகிய கணவனே,

திருவேற்காடு** உறை வேத புரீசுரர் தரு சேயே ...
திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் வேத புரீசுரர் பெற்ற குழந்தையே,

வேட்டார் மகவான் மகளானவள் ஏடு ஆர் திரு மா மணவா ...
வேள்வி நிரம்பிய யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவயானையின்
சிறந்த அழகிய மணவாளனே,

பொ(ன்)னின் நாட்டார் பெரு வாழ்வு எனவே வரு
பெருமாளே.
... பொன்னுலகத்தினரான தேவர்களுடைய செல்வம் என
வருகின்ற பெருமாளே.


* சிவபிரானால் சபிக்கப்பட்டு சிறையில் இருந்த நக்கீரர், திருமுருகாற்றுப்படையைப்
பாடி முருகன் அருளால் சிறை மீண்டார்.


** திருவேற்காடு சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து
தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.637  pg 2.638  pg 2.639  pg 2.640  pg 2.641  pg 2.642 
 WIKI_urai Song number: 685 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 681 - kArch chAr kuzhalAr (thiruvERkAdu)

kArccArkuzha lArvizhi yArayi
     lArppAlmozhi yAridai nUlezhuu
          vrccAriLa neermulai mAtharkaL ...... mayalAlE

kAzhkkAthala thAmana mEmika
     vArkkAmuka nAyuRu sAthaka
          mAppAthaka nAmadi yEnaini ...... naruLAlE

pArppAyalai yOvadi yArodu
     sErppAyalai yOvuna thAraruL
          kUrppAyalai yOvumai yALtharu ...... kumarEsA

pArppAvala rOthuso lAlmuthu
     neerppArinil meeRiya keerarai
          yArppAyuna thAmaru LAlorso ...... laruLvAyE

vArppEraru LEpozhi kAraNa
     nErppAvasa kAraNa mAmatha
          ERpAdika LEyazhi vEyuRa ...... aRaikOpa

vAkkAsiva mAmatha mEmika
     vUkkAthipa yOkama thEyuRu
          mAththAsiva pAlagu kAvadi ...... yArkaLvAzhvE

vERkAdaval vEdarkaL mAmaka
     LArkkArva nan mAmaki NAthiru
          vERkAduRai vEthapu reesurar ...... tharusEyE

vEttArmaka vAnmaka LAnava
     LEttArthiru mAmaNa vAponi
          nAttArperu vAzhvena vEvaru ...... perumALE.

......... Meaning .........

kArc cAr kuzhalAr vizhi Ar ayilAr: Their hair is black and thick like the dark cloud; their eyes are like the sharp spear;

pAl mozhiyAr idai nUl ezhuvAr: their speech is sweet as milk; their waist line is slender like the thread;

sAr iLa neer mulai mAtharkaL mayalAlE: their bosoms are like the tender coconut; crazy about such harlots,

kAzhk kAthalathu Am manamE: oh my mind, you are going fanatical with infatuation!

mika vArk kAmukanAy uRu sAthaka: I am born with such an obsessive passion;

mA pAthakanAm adiyEnai: I am the worst sinner;

nin aruLAlE pArppAy alaiyO: would You not look at me with Your gracious eyes?

adiyArodu sErppAy alaiyO: Would You not consider me as one among Your devotees?

unathu Ar aruL kUrppAy alaiyO umaiyAL tharu kumarEsA: Would You not bestow upon me Your total compassion? Oh, Lord Kumara, the son of UmAdEvi!

pArp pAvalar Othu so(l)lAl: He is endowed with words of praise from the poets of the world;

muthu neerp pArinil meeRiya keerarai: he is Nakkeerar*, an oustanding poet in this old world, surrounded by oceans;

ArppAy unathu Am aruLAl or sol aruLvAyE: You accepted Him gladly; would You not show me similar grace and preach a matchless word of ManthrA?

vArappEr aruLE pozhi kAraNa: You are the primordial source showering grace on the entire world!

nErp pAva sa kAraNamA (m) matha ERpAdikaL azhivE uRa aRai kOpa vAkkA: The samaNa priests, who were the root cause of confrontation, were annihilated by Your angry words (of thEvAram, when You came as ThirugnAna Sambandhar).

siva mA mathamE mika Ukka athipa: You are the enthusiastic leader whose efforts enhanced the cause of the great Saivism!

yOkamathE uRum mAththA siva pAla gukA adiyarkaL vAzhvE: You are always in the state of yOgA, Oh Wise One, You are the Son of SivA. Oh GuhA, You are the treasure of Your devotees!

vEl kAda val vEdarkaL mA makaLArkku Arva nan mA makiNA: You are the beloved and great consort of VaLLi, the damsel of the hunters who dwell in the forest holding spears in their hands.

thiruvERkAdu uRai vEtha pureesurar tharu sEyE: You are the child of VEdapureesar (Lord SivA) who resides in ThiruvERkAdu**.

vEttAr makavAn makaLAnavaL Edu Ar thiru mA maNavA: You are the handsome consort of DEvayAnai, the daughter of IndrA, famous for his many sacrificial oblations.

po(n)nin nAttAr peru vAzhvu enavE varu perumALE.: You are the treasure of DEvAs of the golden celestial world, Oh Great One!


* After Nakkeerar was cursed and imprisoned by Lord SivA, Murugan showed His mercy on Nakkeerar and released him appreciating his poetical composition of ThirumurugAtRuppadai.


** ThiruvERkAdu is 4 miles southeast of Avadi railway station near Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 681 kArch chAr kuzhalAr - thiruvERkAdu


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]