திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 683 சோதி மாமதி (வடதிருமுல்லைவாயில்) Thiruppugazh 683 sOdhimAmadhi (vadathirumullaivAyil) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தானன தானன தந்தன தான தானன தானன தந்தன தான தானன தானன தந்தன ...... தனதான ......... பாடல் ......... சோதி மாமதி போல்முக முங்கிளர் மேரு லாவிய மாமுலை யுங்கொடு தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே சோலி பேசிமு னாளிலி ணங்கிய மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி மோதி யேகனி வாயத ரந்தரு நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின் மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி மோச மேதரு தோதக வம்பியர் மீதி லேமய லாகிம னந்தளர் மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ ஆதி யேயெனும் வானவர் தம்பகை யான சூரனை மோதிய ரும்பொடி யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர லேறி யேயுறி மீதளை யுங்கள வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே வாதி னால்வரு காளியை வென்றிடு மாதி நாயகர் வீறுத யங்குகை வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர் வாச மாமல ரோனொடு செந்திரு மார்பில் வீறிய மாயவ னும்பணி மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொ(ண்)டு ... ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போல முகமும், விளங்கும் மேரு மலை போன்ற பெரிய மார்பையும் கொண்டு, தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிர் ஆயே சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் ... தூரத்தில் வருகின்ற ஆண்களின் முன் எதிர்ப்பட்டு (தங்கள்) வியாபாரப் பேச்சைப் பேசி, நீண்ட நாட்கள் பழகிய பெண்களைப் போல, இரு தோளில் விழுந்து ஒரு சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி ... அவர்களுடைய இரண்டு தோள்களிலும் விழுந்து அணைத்து, ஒரு வஞ்சனைப் பேச்சினால் வரும்படி செய்து, (அவர்களைத் தங்கள்) வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து, மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின் மோனமாய் அவமே சில சண்டைகளுடன் ஏசி ... வலிய அணைத்து கொவ்வைக் கனி போன்ற வாய் இதழைத் தருகின்ற நாட்களில் வந்தவர்களுடைய பொருளை எல்லாம் கொள்ளை அடித்து, பின்பு (அவருடைய பொருளைக் கைப்பற்றிய பின்) மெளனமாக இருந்தும், வீணாகச் சில சண்டைகள் போட்டு இகழ்ந்து பேசியும், மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி மனம் தளர் மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ ... மோசமே செய்கின்ற வஞ்சனை மிக்க துஷ்டர்கள் மேல் காம இச்சை கொண்டு மனம் தளர்கின்ற மூடனும் பாதகனுமாகிய நான் நற்கதியைப் பெறுவேனோ? ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா ... ஆதி மூர்த்தியே என்று போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி அவனை நன்கு பொடியாகும்படிச் செய்து, மயிலில் ஏறி கோபித்த நெடிய வேலாயுதனே, ஆயர் வாழ் பதி தோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே கொடு போத(ம்) நுகர்ந்தவன் மருகோனே ... இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் மகிழ்ந்து சென்று, உரலில் ஏறி உறி மேல் உள்ள வெண்ணெயை திருட்டுத்தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனாகிய (கண்ணனுடைய) மருகோனே, வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு(ம்) கை வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர் ... வாது செய்ய வந்த காளியை வென்ற ஆதி நாயகர், மேலிட்டு விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல் அரசனாகிய வருணனும் வணங்கும் அழகிய பாதங்களை உடைய சிவபெருமான், வாச மா மலரோனோடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே. ... நறு மணமுள்ள சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனோடு, அழகிய லக்ஷ்மி மார்பில் விளங்கும் திருமாலும் வணங்கும் (வடதிருமுல்லைவாயில் இறைவராகிய) மாசிலாமணி* ஈசர் மகிழ்ந்து அருளிய பெருமாளே. |
* வடதிருமுல்லைவாயிலில் இருக்கும் சிவபிரான் மாசிலாமணி என்ற நாமம் படைத்தவர். இத்தலம் சென்னைக்கு அருகில் உள்ள ஆவடிக்குப் பக்கத்தில் இருக்கிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.643 pg 2.644 pg 2.645 pg 2.646 WIKI_urai Song number: 687 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 683 - sOthimAmathi (vada thirumullaivAyil) sOthi mAmathi pOlmuka mungkiLar mEru lAviya mAmulai yungkodu thUra vEvaru mAdavar thangaLmu ...... nethirAyE sOli pEsimu nALili Nangiya mAthar pOliru thOLilvi zhunthoru cUthi nAlvara vEmanai koNdava ...... rudanmEvi mOthi yEkani vAyatha rantharu nALi lEporuL cURaikaL koNdupin mOna mAyava mEsila saNdaika ...... LudanEsi mOsa mEtharu thOthaka vampiyar meethi lEmaya lAkima nanthaLar mOda nAkiya pAthaka nungathi ...... peRuvEnO Athi yEyenum vAnavar thampakai yAna cUranai mOthiya rumpodi yAka vEmayi lERimu ninthidu ...... neduvElA Ayar vAzhpathi thORumu kanthura lERi yEyuRi meethaLai yungkaLa vAka vEkodu pOthanu karnthavan ...... marukOnE vAthi nAlvaru kALiyai venRidu mAthi nAyakar veeRutha yangukai vAri rAsanu mEpaNi yunthiru ...... nadapAthar vAsa mAmala rOnodu senthiru mArpil veeRiya mAyava numpaNi mAsi lAmaNi yeesarma kizhntharuL ...... perumALE. ......... Meaning ......... sOthi mA mathi pOl mukamum kiLar mEru ulAviya mA mulaiyum ko(N)du: With their face looking like the bright moon and their big bosom like Mount MEru, thUravE varum Adavar thangaL mun ethir AyE sOli pEsi mun nALil iNangiya mAthar pOl: they accost men coming at a distance and conclude their terms of negotiation as though they have been very old and close friends; iru thOLil vizhunthu oru cUthinAl varavE manai koNdu avarudan mEvi: they fall all over them and hug both their shoulders; talking deviously, they coax them to visit their home and remain united with them; mOthiyE kani vAy atharam tharu nALilE poruL cURaikaL koNdu pin mOnamAy avamE sila saNdaikaLudan Esi: they forcibly embrace their suitors and offer their lips that are like reddish kovvai fruit; on those days, once these women grab all their belongings, they either remain tight-lipped or resort to unnecessary squabbles and rebuke them; mOsamE tharu thOthaka vampiyar meethilE mayalAki manam thaLar mOdanAkiya pAthakanum kathi peRuvEnO: I fell passionately for these wicked whores who were out to deceive me; I have been a foolish sinner having lost my peace of mind; will I ever reach the righteous path? AthiyE enum vAnavar tham pakai Ana cUranai mOthi arum podi AkavE mayil ERi muninthidu nedu vElA: When the celestials praised You in worship, addressing You as "Oh the Primordial Lord!", You attacked their enemy, namely the demon SUran, and totally smashed him to pieces by angrily mounting the peacock and wielding Your long spear, Oh Lord! Ayar vAzh pathi thORum ukanthu ural ERiyE uRi meethu aLaiyum kaLavAkavE kodu pOtha(m) nukarnthavan marukOnE: He happily went to every town where the shepherds resided, climbed on top of the stone-barrel and reached for the butter kept in the 'uRi' (hanging holder of containers); stealthily picking up that butter, He ate it to His heart's content; and You are the nephew of that KrishNa (Lord VishNu), Oh Lord! vAthinAl varu kALiyai venRidum Athi nAyakar veeRu thayangu(m) kai vAri rAsanumE paNiyum thiru nada pAthar: He is the Primordial Lord who conquered KALi who challenged Him in a debate; He has the hallowed feet that were worshipped by VaruNan, Lord of the Oceans, with a lot of prostrating waves serving as his arms; He is Lord SivA; vAsa mA malarOnOdu sem thiru mArpil veeRiya mAyavanum paNi mAsilA maNi eesar makizhnthu aruL perumALE.: He is known as Lord MAsilAmaNi* (in the town of Vada ThirumullaivAyil) worshipped by Lord BrahmA, seated on a great fragrant lotus, along with Lord VishNu in whose heart Lakshmi resides; You are the son delivered happily by that Lord, Oh Great One! |
* The deity -SivA- in the town of Vada ThirumullaivAyil is named MAsilAmaNi. This town is near Avadi, one of the suburbs of Chennai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |