திருப்புகழ் 665 நசையொடு தோலு  (திருவல்லம்)
Thiruppugazh 665 nasaiyoduthOlu  (thiruvallam)
Thiruppugazh - 665 nasaiyoduthOlu - thiruvallamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானந் தனதன தானந்
     தனதன தானந் ...... தனதான

......... பாடல் .........

நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
     நடுநடு வேயென் ...... புறுகீலும்

நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்
     றுறநடை யாருங் ...... குடிலூடே

விசையுறு காலம் புலனெறி யேவெங்
     கனலுயிர் வேழந் ...... திரியாதே

விழுமடி யார்முன் பழுதற வேள்கந்
     தனுமென வோதும் ...... விறல்தாராய்

இசையுற வேயன் றசைவற வூதும்
     எழிலரி வேழம் ...... எனையாளென்

றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்
     இடமிமை யாமுன் ...... வருமாயன்

திசைமுக னாருந் திசைபுவி வானுந்
     திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர்

தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்
     திருவல மேவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நசையொடு தோலும் தசை துறு நீரும் நடு நடுவே என்பு
உறு கீலும் நலம் உறு வேய் ஒன்றிட
... ஈரத்துடன் தோலும்
மாமிசமும் அடைந்துள்ள நீரும் இடையிடையே எலும்புகளைப்
பூட்டியுள்ள இணைப்புக்களும் நலம் உறும் வண்ணம் பொருந்தி
ஒன்று சேர,

இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலூடே ... இரண்டு
கால்களும் நன்கு இணைக்கப் பெற்று நடை நிரம்பிய குடிசையாகிய
இந்த உடலுக்குள்,

விசை உறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம்
திரியாதே
... வேகமான வாழ்க்கை செல்லும் காலத்தில், ஐம்புலன்களின்
வழியாக கொடிய தீப் போன்றதும், மதம் நிறைந்த யானை போன்றதுமான
அந்த ஐம்பொறிகளும் அலையாமல்,

விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும்
விறல் தாராய்
... உனது திருவடியில் விழும் அடியார்களின் முன்,
குற்றம் இல்லாத வகையில், வேளே கந்தனே என்று ஓதும் சக்தியைத்
தந்தருளுக.

இசை உறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி ... முன்பு,
இனிய இசை பொருந்தி அசையாமல் நிற்கும்படி, புல்லாங்குழலை ஊத
வல்ல அழகிய கண்ணனும்,

வேழம் எனை ஆள் என்று இடர் கொடு மூலம் தொடர்வு
உடன் ஓதும் இடம்
... கஜேந்திரனாகிய யானை என்னை
ஆட்கொள்வாய் ஆதிமூலமே என்று துன்பத்துடனும் பேரன்புடனும்
கூச்சலிட்டு அழைத்த இடத்துக்கு,

இமையா முன் வரும் மாயன் ... கண்ணை இமைக்கும் நேரத்தில்
வந்து உதவிய மாயனுமாகிய திருமாலும்,

திசை முகனாரும் திசை புவி வானும் ... நான் முகனும், பல
திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், வானுலகத்தில்
உள்ளவர்களும்

திரிதர வாழும் சிவன் மூதூர் ... வலம் வந்து சூழ வாழ்கின்ற
சிவபெருமானுடைய பழைய ஊரும்,

தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும்
பெருமாளே.
... மாதர்கள் வந்து அருமையான நடனம் புரியும்
ஊருமாகிய திருவ(ல்)லத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* திருவல்லம் வேலூருக்கு அருகில் உள்ளது. திருமாலாலும் பிரமனாலும்
சிவன் வலம் செய்யப்பெற்று பூஜிக்கப்பட்டதால் திருவலம் என்ற பெயர் வந்தது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.594  pg 2.596  pg 2.597  pg 2.598 
 WIKI_urai Song number: 669 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 665 - nasaiyodu (thiruvallam)

nasaiyodu thOlun thasaithuRu neerum
     nadunadu vEyen ...... puRukeelum

nalamuRu vEyon Rida iru kAlnan
     RuRanadai yArung ...... kudilUdE

visaiyuRu kAlam pulaneRi yEveng
     kanaluyir vEzhan ...... thiriyAthE

vizhumadi yArmun pazhuthaRa vELkan
     thanumena vOthum ...... viRalthArAy

isaiyuRa vEyan RasaivaRa vUthum
     ezhilari vEzham ...... enaiyALen

Ridarkodu mUlan thodarvuda nOthum
     idamimai yAmun ...... varumAyan

thisaimuka nArun thisaipuvi vAnum
     thirithara vAzhunj ...... sivanmUthUr

therivaiyar thAmvan tharunada mAdum
     thiruvala mEvum ...... perumALE.

......... Meaning .........

nasaiyodu thOlum thasai thuRu neerum nadu naduvE enpu uRu keelum nalam uRu vEy onRida: The skin and flesh are soaked in water that is filled inside, with bones interlinked through joints here and there, for everything to function well in coordination;

iru kAl nanRuRa nadai Arum kudilUdE: both legs are so properly fitted that this hut of a body could be mobile on its feet; in this body,

visai uRu kAlam pulan neRiyE vem kanal uyir vEzham thiriyAthE: life moves at a very fast pace when the five fiery sensory organs romp around like mad elephants ravaging the five senses; to avoid this ruin,

vizhum adiyAr mun pazhuthu aRa vEL kanthanum ena Othum viRal thArAy: kindly grant me the energy to recite Your name flawlessly, saying "KanthA, my Lord!" in front of all Your devotees prostrating at Your hallowed feet!

isai uRavE anRu asaivu aRa Uthum ezhil ari: Once, the charming flautist, Krishna, who was capable of playing the flute enchantingly making the melodious music tranquil,

vEzham enai AL enRu idar kodu mUlam thodarvu udan Othum idam: came (as VishNu) to the aid of the elephant GajEndran who screamed in pain, calling out His name "Oh Primordial One, I seek refuge in You!"

imaiyA mun varum mAyan: He dashed to that place in the twinkling of an eye (to save the elephant); He is the mystical Lord, VishNu;

thisai mukanArum thisai puvi vAnum: (along with Him) there were BrahmA, others from many directions, and people of the earth and the celestial world,

thirithara vAzhum sivan mUthUr: who went around Lord SivA with reverence in this old city of His;

therivaiyar thAm vanthu aru nadamAdum: women come here and perform superb dances

thiruvalam mEvum perumALE.: in Thiruva(l)lam*, which is Your abode, Oh Great One!


* Thiruvallam is near Vellore. Here, Lord SivA was worshipped by BrahmA and VishNu who went around SivA with great reverence (valam in Tamil); that is why the town was named Thiruvalam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 665 nasaiyodu thOlu - thiruvallam


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]