திருப்புகழ் 664 வதன சரோருக  (வெள்ளிகரம்)
Thiruppugazh 664 vadhanasarOruga  (veLLigaram)
Thiruppugazh - 664 vadhanasarOruga - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
     தானாதன தானந் தானன ...... தந்ததான

......... பாடல் .........

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
     வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும்

வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
     மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே

இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
     லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும்

இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
     நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான்

கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த
     கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக்

கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து
     ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள

விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
     நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே

விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
     வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

வதன சரோருக நயன சிலீமுக ... தாமரை போன்ற முகமும், அம்பு
போன்ற கண்களும் உடைய

வள்ளி புனத்தில் நின்று ... வள்ளியின் தினைப்புனத்தில் போய்
நின்று கொண்டு,

வாராய்பதி காதங் காதரை ... நீ என்னுடன் வருவாயாக, என் ஊர்
(திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25 மைல்),

ஒன்றுமூரும் வயலும் ஒரே இடை ... என் ஊரும், உன்னூராகிய
வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல்தான்
உள்ளது,

எனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து ... என்று கூறி, ஒரு
சோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து,

மாலாய் மடல் ஏறுங் காமுக எம்பிரானே ... வள்ளி மீது மிக்க
மயக்கம் கொண்டு மடல்* ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே,

இதவிய காண் இவை ததையென ... இதோ இவ்வுணவு இனிப்புடன்
கலந்து இருப்பதைப் பார் என்று கூறிய

வேடுவன் எய்திடும் எச்சில் தின்று ... வேடுவன் கண்ணப்பன்
சேர்ப்பித்த எச்சில் உணவைத் தின்று

லீலாசலம் ஆடுந் தூயவன் மைந்த ... (கண்ணில் ரத்தத்துடன்)
திருவிளையாடல் ஆடிய சுத்த சிவன் மகனே,

நாளும் இளையவ ... எப்போதும் இளமையுடன் இருப்பவனே என்றும்,

மூதுரை மலைகிழவோனென ... பழைய நூல்
திருமுருகாற்றுப்படையில் சொன்னபடி மலை கிழவோனே
(மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால்,

வெள்ள மெனக் கலந்து ... ஒரு பெரிய எண்ணிக்கையாகக் கூடி

நூறாயிர பேதஞ் சாதம் ஒழிந்தவாதான் ... நூறாயிர பேதமாக**
வருவதாகிய பிறப்புக்கள் ஒழிந்து போயினவே, இது பெரிய அற்புதந்தான்.

கதை கன சாப ... (கெளமோதகி என்னும்) கதாயுதமும், பெருமை
பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும்,

திகிரி வளை ... சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்யம் என்னும்
சங்கும்,

வாளொடு கை வசிவித்த ... நாந்தகம் என்னும் வாளும் (ஆகிய
பஞ்ச ஆயுதங்களை) கைகளில் ஏந்தியவனும்,

நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்துவாழ ... நந்த கோபாலன்
என்ற கோகுலத்து மன்னனது தேவி யசோதை மகிழ்ந்து வாழ

கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் ... உரலோடு
கட்டப்பெற்ற கயிறோடு அந்த உரலை இழுத்தவண்ணம் உலாவியனும்,
வெண்ணெய் திருடும் கள்வனும்,

அறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்துநீள ... மிகவும்
பயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி உயரமாக
வளர்ந்து

விதரண மாவலி வெருவ ... கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி
அஞ்சும்படி

மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற ... மகா விரதசீல வாமனனாய்
பகிரங்கமாக எதிரில் நின்றவனும்

நாராயண மாமன் சேயை முனிந்தகோவே ... ஆகிய நாராயண
மூர்த்தியாம் உன் மாமனின் மகனாகிய பிரமனைக் கோபித்த தலைவனே,

விளைவயலூடிடை வளைவிளையாடிய ... விளைச்சல் உள்ள
வயல்களின் இடையில் சங்குகள் தவழ்ந்தாடும்

வெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத ... வெள்ளிநகர்*** என்னும்
திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதனே,

மேவுந் தேவர்கள் தம்பிரானே. ... உன்னைத் துதிக்கும்
தேவர்களுக்கெல்லாம் தலைவனே.


* மடல் எழுதுதல்:

தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்
மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல்
ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு
பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார்
தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய
மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.


** சம்பந்தர் தேவாரத்தின்படி சாதம் (பிறப்பு) 84 நூறாயிரம் வகையாகும்.

   ஊர்வன - 11, மானிடம் - 9, நீர்வாழ்வன - 10,
   பறவைகள் - 10, மிருகங்கள் - 10, தேவர்கள் - 14,
   தாவரங்கள் - 20, ஆக 84 நூறாயிரம் (8,400,000).


*** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.590  pg 2.591  pg 2.592  pg 2.593  pg 2.594  pg 2.596 
 WIKI_urai Song number: 668 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 664 - vadhana sarOruga (veLLigaram)

vadhana sarOruga nayana sileemuka vaLLi punaththil nindru
     vArAy padhi kAdhang kAdharai ...... ondrumUrum

vayalu morEvidai enavoru kAvidai vallabam
     atrazhindhu mAlAy madalERung kAmuka ...... embirAnE

idhaviya kANivai thadhaiyena vEduvan eydhidum echchil thindru
     leelAchalam Adun thUyavan main ...... dhanALum

iLaiyava mUdhurai malaikizha vOnena veLLa menak kalandhu
     nURAyira bEdham jAtham ozhin ...... dhavAdhAn

gadhaigana chApa thigiri vaLai vALodu kaivasi viththa nandha
     gOpAla mageepan dhEvi ma ...... gizhndhuvAzha

kayiRod ulUkalam uruLa ulAviya kaLva naRap payandhu
     AgAya kapAlam peeRa ni ...... mirndhuneeLa

vitharaNa mAvali veruva mahAvrutha veLLa veLukka nindra
     nArAyaNa mAman sEyai mu ...... nindhakOvE

viLai vayalUdidai vaLaiviLai yAdiya veLLinagark amarndha
     vElAyudha mEvun dhEvargaL ...... thambiRAnE.

......... Meaning .........

vadhana sarOruga nayana sileemuka vaLLi: VaLLi has a lotus face and eyes like arrows;

punaththil nindru vArAy padhi kAdhang kAdharai: You went to her millet-field and said "Come over to me. Your town (VaLLimalai) is just 25 miles away from my town (ThiruththaNigai).

ondrumUrum vayalu morEvidai: Both of our hometowns are so close to each other that there is only a millet-field in between them"

enavoru kAvidai vallabam atrazhindhu: Thus You spoke to her in that grove where You surrendered all Your strength.

mAlAy madalERung kAmuka embirAnE: You were so enchanted with VaLLi that You were ready to climb the "madal"*, Oh my Lord!

idhaviya kANivai thadhaiyena vEduvan: The hunter (Kannappan) offered food saying that it was very sweet;

eydhidum echchil thindru leelAchalam Adum: and after taking a bite by himself, he then offered the food that was gladly accepted by Him (Lord SivA) who cast a magic spell on the hunter (with bleeding eye).

thUyavan maindha: You are the Son of that pure SivA!

nALum iLaiyava: You remain forever youthful;

mUdhurai malaikizha vOnena: (at the same time) the ancient work in Tamil (ThirumurugAtRuppadai) calls You the old man of the mountains!

veLLa menak kalandhu: When You are worshipped ardently in a big way,

nURAyira bEdham jAtham ozhindhavAdhAn: millions of births** are destroyed. This is indeed a miracle!

gadhaigana chApa thigiri vaLai vALodu kaivasi viththa: He holds in His hands five different weapons; GowthamOthaki as the mace, the great SArangam as the bow, Sudharsanam as the wheel, PAnchajanyam as the Conch and NAndhakam as the sword;

nandhagOpAla mageepan dhEvi magizhndhuvAzha: Yasodhai, the consort of King NandagOpan, was delighted

kayiRod ulUkalam uruLa ulAviya kaLvan: when the grinding stone to which she tied Him was dragged by the famous butter thief;

aRap payandhu AgAya kapAlam peeRa nimirndhuneeLa: He grew terrifyingly upto the sky piercing it with His head;

vitharaNa mAvali veruva mahAvrutha veLLa veLukka nindra: (before that) He stood innocently in front of the benevolent Emperor MahAbali as pious little VAmanan seeking alms;

nArAyaNa mAman sEyai munindhakOvE: and He is Your Uncle NarAyaNan! You lost Your temper with His son, BrahmA, Oh Lord!

viLai vayalUdidai vaLaiviLai yAdiya: Amid the fertile paddy field, there are plenty of conch shells in this place,

veLLinagark amarndha vElAyudha: called VeLLinagar (VeLLigaram***), which is Your abode, Oh Lord of the Spear!

mEvun dhEvargaL thambiRAnE.: You are the Master of all the DEvAs worshipping You!


* madal: is a type of palm leaf used as a canvas on which Murugan drew the descriptive picture of VaLLi and went alone to VaLLimalai. There, He chose a junction of four streets and stood staring at the picture day in and day out, oblivious of other peoples' comments and jeers. Ultimately, VaLLi's people were so moved by Murugan's devotion that they decided to formally give VaLLi in marriage to Murugan - according to Kandha PurANam.


** According to ThEvAram by ThirugnAna SambandhAr, there are 84 lacs (1 lac = 100,000) of species of diverse births: Reptiles - 11, Humans - 9, Aquatic lives - 10, Birds - 10, Animals - 10, DEvAs - 14, Botanicals - 20, in total 84 lacs (8,400,000).


*** VeLLigaram is 12 miles west of VEppagunta Rail Station, 22 miles north of ArakkOnam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 664 vadhana sarOruga - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]