திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 666 அதிக ராய்ப்பொரு (வேலூர்) Thiruppugazh 666 adhigarAipporu (vElUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன ...... தந்ததான ......... பாடல் ......... அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில் ரசனை காட்டிக ளீயார் கூடினும் அகல வோட்டிகள் மாயா ரூபிகள் ...... நண்புபோலே அசட ராக்கிகள் மார்மே லேபடு முலைகள் காட்டிகள் கூசா தேவிழும் அழகு காட்டிக ளாரோ டாகிலு ...... மன்புபோலே சதிர தாய்த்திரி வோயா வேசிகள் கருணை நோக்கமி லாமா பாவிகள் தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் ...... நம்பொணாத சரச வார்த்தையி னாலே வாதுசெய் விரக மாக்கிவி டாமூ தேவிகள் தகைமை நீத்துன தாளே சேர்வதும் ...... எந்தநாளோ மதுரை நாட்டினி லேவாழ் வாகிய அருகர் வாக்கினி லேசார் வாகிய வழுதி மேற்றிரு நீறே பூசிநி ..... மிர்ந்துகூனும் மருவு மாற்றெதிர் வீறே டேறிட அழகி போற்றிய மாறா லாகிய மகிமை யாற்சமண் வேரோ டேகெட ...... வென்றகோவே புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள் பகலி ராத்திரி யோயா ஆலைகள் புரள மேற்செல வூரூர் பாயஅ ...... ணைந்துபோதும் புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி லளகை போற்பல வாழ்வால் வீறிய புலவர் போற்றிய வேலூர் மேவிய ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... அதிகராய்ப் பொருள் ஈவார் நேர் படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும் அகல ஓட்டிகள் மாயா ரூபிகள் ... அதிகமாகப் பொருள் கொடுப்பவர் கிடைத்தால் இன்பம் காட்டுவார்கள். பொருள் கொடாதவர் கூட வந்தால் அவர்களைத் தம்மை விட்டு நீங்கும்படி ஓட்டுபவர்கள். மாயையே ஒர் உருவம் ஆனவர்கள். நண்பு போலே அசடர் ஆக்கிகள் மார் மேலே படு முலைகள் காட்டிகள் கூசாதே விழும் அழகு காட்டிகள் ... நட்பு பாராட்டுவது போல (வந்தவர்களை) மூடர்களாக ஆக்குபவர்கள். மார்பு மேலே உள்ள மார்பகத்தைக் காட்டுபவர்கள். கூச்சம் இல்லமால் மேலே விழுந்து தமது அழகைக் காட்டுபவர்கள். ஆரோடாகிலும் அன்பு போலே சதிர் அதாய்த் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இ(ல்)லா மா பாவிகள் தரும் உபேட்சை செய் தோஷா தோஷிகள் ... யாராக இருந்தாலும் அன்பு உள்ளவர்கள் போல் சாமர்த்தியமாக எப்போதும் திரியும் ஓய்வில்லாத விலைமாதர்கள். அருள் நோக்கம் என்பதே இல்லாத பெரிய பாவிகள். வேண்டும் என்றே வந்தவரைப் புறக்கணிப்பவர்கள். பலவித குற்றம் (பாவம்) செய்பவர்கள். நம்ப ஒணாத சரச வார்த்தையினாலே வாது செய் விரகம் ஆக்கி விடா மூதேவிகள் தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ ... நம்புதற்கு முடியாத பக்குவ வார்த்தைகளைப் பேசி வாது செய்து, காமத்தை மூட்டி, போக ஒட்டாது பிடிக்க வல்ல மூதேவிகள். (இத்தகையோருடன்) கூடுவதை ஒழித்து, உன்னுடைய திருவடியைச் சேரும் நாள் எனக்குக் கிட்டுமோ? மதுரை நாட்டினிலே வாழ்வாகிய அருகர் வாக்கினிலே சார்வாகிய வழுதி மேல் திரு நீறே பூசி நிமிர்ந்து கூனும் ... மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டில் வாழ்ந்திருந்த சமணர்களின் கொள்கைகளில் ஈடுபட்டிருந்த பாண்டிய மன்னன் மீது திரு நீற்றைத் தடவி, அவனுடைய கூன் நிமிரச் செய்தும், மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய மாறால் ஆகிய மகிமையால் சமண் வேரோடே கெட வென்ற கோவே ... அருகில் பாயும் வைகை ஆற்று வெள்ள நீரை எதிர்த்து இட்ட ஏடுகள் மேற் செல்லச் செய்தும், அழகு நிறைந்த பாண்டி மா தேவியாகிய மங்கையர்க்கரசி உன்னைத் துதித்துப் போற்றிய பக்தியின் சிறப்பாலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பாலும், அந்தச் சமணர்கள் வேருடன் அழியும்படி வெற்றி கொண்ட (திருஞானசம்பந்தத்) தலைவனே, புதிய மாக் கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள் புரள மேல் செல ஊரூர் பாய அணைந்து போதும் புகழினால் ... புதிய மாம்பழங்களினின்று விழுகின்ற தேன் ஊறல்கள், பகலிலும், இரவிலும் ஓயாது வேலை செய்யும் கரும்பாலைகள் மேலே புரண்டு மேற் சென்று அயலில் உள்ள ஊர்களிலும் பாயும்படி சேர்ந்து போகின்ற புகழ் பெற்ற காரணத்தால், கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே. ... கடல் சூழ்ந்த இப் பூமியில் பல வகையான வாழ்வால் மேம்பட்ட பண்டிதர்களால் அளகாபுரி* போலப் போற்றப்பட்ட வேலூரில் வீற்றிருக்கும் தம்பிரானே. |
* அளகாபுரி நிதிக்கு காவலனான குபேரனின் தலைநகர். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.597 pg 2.598 pg 2.599 pg 2.600 pg 2.601 pg 2.602 WIKI_urai Song number: 670 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 666 - adhiga rAipporu (vElUr) athika rAypporu LeevAr nErpadil rasanai kAttika LeeyAr kUdinum akala vOttikaL mAyA rUpikaL ...... naNpupOlE asada rAkkikaL mArmE lEpadu mulaikaL kAttikaL kUsA thEvizhum azhaku kAttika LArO dAkilu ...... manpupOlE sathira thAyththiri vOyA vEsikaL karuNai nOkkami lAmA pAvikaL tharumu pEtchaisey thOshA thOshikaL ...... nampoNAtha sarasa vArththaiyi nAlE vAthusey viraka mAkkivi dAmU thEvikaL thakaimai neeththuna thALE sErvathum ...... enthanALO mathurai nAttini lEvAzh vAkiya arukar vAkkini lEsAr vAkiya vazhuthi mEtRiru neeRE pUsini ..... mirnthukUnum maruvu mAtRethir veeRE dERida azhaki pOtRiya mARA lAkiya makimai yARchamaN vErO dEkeda ...... venRakOvE puthiya mAkkani veezhthE nURalkaL pakali rAththiri yOyA AlaikaL puraLa mERchela vUrUr pAya a ...... NainthupOthum pukazhi nARkadal cUzhpAr meethini laLakai pORpala vAzhvAl veeRiya pulavar pOtRiya vElUr mEviya ...... thambirAnE. ......... Meaning ......... athikarAyp poruL eevAr nEr padil rasanai kAttikaL eeyAr kUdinum akala OttikaL mAyA rUpikaL: These women offer pleasure to those who pay them a lot of money. If their suitors are accompanied by some who do not pay, they mercilessly drive them away. They are an embodiment of delusion. naNpu pOlE asadar AkkikaL mAr mElE padu mulaikaL kAttikaL kUsAthE vizhum azhaku kAttikaL: They feign friendship and make utter fools of their suitors. They openly display their bosom on their chest. Shamelessly, they fall all over people and show off their beauty. ArOdAkilum anpu pOlE sathir athAyth thiri OyA vEsikaL karuNai nOkkam i(l)lA mA pAvikaL tharum upEtchai sey thOshA thOshikaL: These whores tirelessly roam about at all times with anyone, pretending to be in love and cleverly manipulating them. These worst sinners do not have an iota of compassion. They deliberately ignore their suitors and indulge in many a sinful activity. nampa oNAtha sarasa vArththaiyinAlE vAthu sey virakam Akki vidA mUthEvikaL thakaimai neeththu una thALE sErvathum entha nALO: They put forth arguments using the choicest words that cannot be relied upon and provoke passion. They are the impish goddesses of adversity (mUthEvi) holding on to their suitors without letting them go. Will there be a day for me to get out of the company of such women and attain Your hallowed feet, Oh Lord? mathurai nAttinilE vAzhvAkiya arukar vAkkinilE sArvAkiya vazhuthi mEl thiru neeRE pUsi nimirnthu kUnum: In the Kingdom of PANdiyAs which had Madhurai as its capital, the King was following the principles of the samaNAs; smearing the holy ash upon that King, You straightened his hunch-back; maruvum AtRu ethir veeRu Edu ERida azhaki pOtRiya mARAl Akiya makimaiyAl chamaN vErOdE keda venRa kOvE: in the nearby river Vaigai, the palm leaves that were placed on the flood water went against the current, and the beautiful queen Mangaiyarkkarasi of PANdiya kingdom extolled You with deep devotion; because of that and the great miracles performed by You, the samaNAs were all annihilated, and You triumphed coming as ThirugnAna Sambandhar, Oh Leader! puthiya mAk kani veezh thEn URalkaL pakal irAththiri OyA AlaikaL puraLa mEl sela UrUr pAya aNainthu pOthum pukazhinAl: The honey-like juices oozing out of the fresh mangoes in this place flow through the sugarcane factories that are engaged in manufacture of sugar day and night, and then overflow further into the neighbouring towns; because of this unique honour, kadal cUzh pAr meethinil aLakai pOl pala vAzhvAl veeRiya pulavar pOtRiya vElUr mEviya thambirAnE.: this town was praised by many experts, who had excelled in all walks of life, comparing it to ALagApuri*; this is Your abode, VElUr, Oh Great One! |
* AlagApuri is the capital city of KubEran, the DEva responsible for wealth. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |