திருப்புகழ் 659 பொருவன கள்ள  (வெள்ளிகரம்)
Thiruppugazh 659 poruvanakaLLa  (veLLigaram)
Thiruppugazh - 659 poruvanakaLLa - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தய்ய தனதன தய்ய
     தனதன தய்ய ...... தனதான

......... பாடல் .........

பொருவன கள்ள இருகயல் வள்ளை
     புரிகுழை தள்ளி ...... விளையாடும்

புளகித வல்லி யிளகித வல்லி
     புரியிள முல்லை ...... நகைமீதே

உருகிட வுள்ள விரகுடை யுள்ள
     முலகுயி ருள்ள ...... பொழுதேநின்

றுமைதரு செல்வ னெனமிகு கல்வி
     யுணர்வொடு சொல்ல ...... வுணராதோ

மருவலர் வள்ளி புரமுள வள்ளி
     மலைமற வள்ளி ...... மணவாளா

வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை
     மரகத நல்ல ...... மயில்வீரா

அருவரை விள்ள அயில்விடு மள்ள
     அணிவயல் வெள்ளி ...... நகர்வாழ்வே

அடையலர் செல்வ மளறிடை செல்ல
     அமர்செய வல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி
விளையாடும்
... போர் செய்யவல்ல கள்ளத்தனம் உள்ள கயல் மீன்
போல் இரண்டு கண்கள் வள்ளிக் கொடி போன்ற காதுகளைத் தாக்கி
விளையாடுகின்ற

புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே ...
புளகாங்கிதம் கொண்ட, கொடி போல் இடை வாய்ந்த, இளம் பெண்கள்
புன்னகை புரியும் போது தெரியும் முல்லை அரும்பு போன்ற பற்களைக்
கண்டு,

உருகிட உள்ள விரகு உடை உள்ளம் ... உருகத் தக்க உற்சாகத்தை
அடையும் என் மனம்,

உலகு உயிர் உள்ள பொழுதே நின்று உமை தரு(ம்) செல்வன்
என
... இவ்வுலகில் உயிர் இருக்கும் பொழுதே நிலைத்து நின்று
உமாதேவியார் பெற்றெடுத்த செல்வனே என்று உன்னை

மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ ... மிகுந்த கல்வி
உணர்ச்சியோடு சொல்லுவதற்குத் தெரிந்து கொள்ளாதோ?

மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி
மணவாளா
... வாசனை மலர்கள் உள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளி
மலையில் இருக்கும் குறப்பெண் வள்ளியின் கணவனே,

வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில்
வீரா
... பெரிதாக உள்ள பூமியின் முழு எல்லையையும் (பறந்தே)
அளவிட்ட, பழைய மரகதப் பச்சை நிறமுள்ள அழகிய மயில் மீதேறும்
வீரனே,

அரு வரை விள்ள அயில்விடும் மள்ள அணி வயல் வெள்ளி
நகர் வாழ்வே
... அரிய கிரவுஞ்ச மலை உடைபடுமாறு வேலாயுதத்தைச்
செலுத்திய போர் வீரனே, அழகிய வயல்கள் சூழ்ந்த வெள்ளி நகரில்
வாழும் செல்வமே,

அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர் செய வல்ல
பெருமாளே.
... பகைவர்களின் செல்வம் எல்லாம் சேற்றிடையே படிந்து
அழியுமாறு போர் செய்ய வல்ல பெருமாளே.


* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.578  pg 2.579  pg 2.580  pg 2.581 
 WIKI_urai Song number: 663 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 659 - poruvana kaLLa (veLLigaram)

poruvana kaLLa irukayal vaLLai
     purikuzhai thaLLi ...... viLaiyAdum

puLakitha valli yiLakitha valli
     puriyiLa mullai ...... nakaimeethE

urukida vuLLa virakudai yuLLa
     mulakuyi ruLLa ...... pozhuthEnin

Rumaitharu selva nenamiku kalvi
     yuNarvodu solla ...... vuNarAthO

maruvalar vaLLi puramuLa vaLLi
     malaimaRa vaLLi ...... maNavALA

vaLarpuvi yellai yaLavidu thollai
     marakatha nalla ...... mayilveerA

aruvarai viLLa ayilvidu maLLa
     aNivayal veLLi ...... nakarvAzhvE

adaiyalar selva maLaRidai sella
     amarseya valla ...... perumALE.

......... Meaning .........

poruvana kaLLa iru kayal vaLLai puri kuzhai thaLLi viLaiyAdum: The two stealthy eyes looking like battling kayal fish attack the ears which resemble the vaLLi creeper;

puLakitha valli iLakitha valli puri iLa mullai nakai meethE: these young girls, who are exhilarated, have a slender creeper-like waist; looking at their jasmine-bud-like teeth that are noticeable when they smile,

urukida uLLa viraku udai uLLam: my mind simply melts feeling ecstatic;

ulaku uyir uLLa pozhuthE ninRu umai tharu(m) selvan ena miku kalvi uNarvodu solla uNarAthO: while I am alive in this world, would I be able to address You steadfastly saying "Oh MurugA, the Son of DEvi UmA!" and would my mind be able to learn to say such words in a scholarly way, full of feeling?

maru alar vaLLipuram uLLa vaLLi malai maRa vaLLi maNavALA: You are the consort of VaLLi, the damsel of the KuRavAs, living in VaLLimalai, close to the town, VaLLipuram, where fragrant flowers abound!

vaLar puvi ellai aLavidum thollai marakatha nalla mayil veerA: Oh valorous One, You mount the beautiful peacock of an old emerald-green hue, that measured the circumference of this large earth by flying to all its frontiers!

aru varai viLLa ayilvidum maLLa aNi vayal vaLLi nakar vAzhvE: You are the brave warrior who wielded the spear to split the rare mount Krouncha into two! You are the treasure of this town VeLLigaram*, surrounded by beautiful fields!

adaiyalar selvam aLaRu idai sella amar seya valla perumALE.: You are capable of waging such a war that the wealth of the enemies is destroyed by mixing with slush, Oh Great One!


* VeLLigaram is 12 miles west of VEppagunta Railway Station, 22 miles north of ArakkOnam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 659 poruvana kaLLa - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]