திருப்புகழ் 658 குவலயம் மல்கு  (வெள்ளிகரம்)
Thiruppugazh 658 kuvalayammalgu  (veLLigaram)
Thiruppugazh - 658 kuvalayammalgu - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தய்ய தனதன தய்ய
     தனதன தய்ய ...... தனதான

......... பாடல் .........

குவலய மல்கு தவலிகள் முல்லை
     குளிர்நகை சொல்லு ...... முதுபாகு

குழையிள வள்ளை யிடைசிறு வல்லி
     குயமுலை கொள்ளை ...... விழைமேவிக்

கவலைசெய் வல்ல தவலரு முள்ள
     கலவியில் தெள்ளு ...... கவிமாலை

கடிமல ரைய அணிவன செய்ய
     கழலிணை பைய ...... அருள்வாயே

தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு
     தனியுழை புள்ளி ...... யுடனாடித்

தருபுன வள்ளி மலைமற வள்ளி
     தருதினை மெள்ள ...... நுகர்வோனே

அவநெறி சொல்லு மவரவை கொல்லு
     மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே

அடையலர் செல்வ மளறிடை செல்ல
     அமர்செய வல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு(ம்)
முது பாகு
... உலகில் நிறைந்துள்ள, ஒழுக்கக் குறைபாடுகள் உள்ள
விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்றவை, பேச்சும்
முதிர்ந்த வெல்லம் போன்றது,

குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை
கொள்ளை
... காது இளமையான வள்ளிக் கொடி போன்றது, இடுப்பு
சிறிய கொடி ஒத்தது, இளமை வாய்ந்த மார்பகங்கள் பூரித்து உள்ளன
(என்று எல்லாம் கூறி)

விழை மேவிக் கவலை செய் வல்ல தவலரும் உள்ள
கலவியில்
... விருப்பம் மிகவும் அடைந்து, மனக் கவலை தரத்தக்க
குற்றம், குறை உள்ளவர்களுடன் நான் இணைந்திருந்த போதும்,

தெள்ளு கவி மாலை கடி மலர் ஐய அணிவன செய்ய கழல்
இணை பைய அருள்வாயே
... தெளிந்த கவி மாலைகளையும், நறு
மணம் உள்ள மலர் மாலைகளையும் அழகுற அணிவிப்பதற்காக உனது
திருவடி இணைகளை மெல்ல எனக்கு அருள் புரிவாயாக.

தவ நெறி உள்ளு(ம்) சிவ முனி துள்ளு(ம்) தனி உழை
புள்ளி உடன் ஆடித் தரு புன வள்ளி
... முன்பு, தவ நெறியில்
தியானித்து இருந்த சிவ முனிவரின் (தவத்தைக் கலைத்துத்) துள்ளிச்
சென்ற, ஒப்பற்ற, புள்ளி மானுடன் கலந்து பெற்றெடுத்தவளும்,
தினைப்புனத்தில் இருந்தவளும்,

மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே ... அந்த
வள்ளி மலையில் இருந்த வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவளுமான வள்ளி
கொடுத்த தினை மாவை மெதுவாக உண்டவனே,

அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி
நகர் வாழ்வே
... பயனற்ற மார்க்கத்தைச் சொல்லி வந்த சமணர்களின்
கூட்டத்தை (கழுவில்) மாய்த்த (திருஞானசம்பந்தராக வந்து) அழகு
வாய்ந்த வெள்ளிகரம்* என்னும் நகரில் வாழும் செல்வனே,

அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர் செய வல்ல
பெருமாளே.
... பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் எல்லாம் கடல்
நீரில் மூழ்கி அழியும்படி சண்டை செய்ய வல்ல பெருமாளே.


* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.576  pg 2.577  pg 2.578  pg 2.579 
 WIKI_urai Song number: 662 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 658 - kuvalayam malgu (veLLigaram)

kuvalaya malku thavalikaL mullai
     kuLirnakai sollu ...... muthupAku

kuzhhaiyiLa vaLLai yidaisiRu valli
     kuyamulai koLLai ...... vizhhaimEvik

kavalaisey valla thavalaru muLLa
     kalaviyil theLLu ...... kavimAlai

kadimala raiya aNivana seyya
     kazhhaliNai paiya ...... aruLvAyE

thavaneRi yuLLu sivamuni thuLLu
     thaniyuzhhai puLLi ...... yudanAdith

tharupuna vaLLi malaimaRa vaLLi
     tharuthinai meLLa ...... nukarvOnE

avaneRi sollu mavaravai kollu
     mazhhakiya veLLi ...... nakarvAzhhvE

adaiyalar selva maLaRidai sella
     amarseya valla ...... perumALE.

......... Meaning .........

kuvalayam malku thavalikaL mullai kuLir nakai sollu(m) muthu pAku: The whores all over the world, full of blemishes, have teeth like cool jasmine, sweet speech like seasoned jaggery,

kuzhai iLa vaLLai idai siRu valli kuya mulai koLLai: ears like tender vaLLi (creeper), waist like slender vine and youthful and developed bosom;

vizhai mEvik kavalai sey valla thavalarum uLLa kalaviyil: so saying, I hankered after them, and even though I sought carnal pleasure with such tarnished whores, capable of making me feel miserable,

theLLu kavi mAlai kadi malar aiya aNivana seyya kazhal iNai paiya aruLvAyE: kindly grant me Your blessings, little by little, to adorn Your hallowed feet with refined garlands of poems and fragrant flowers!

thava neRi uLLu(m) siva muni thuLLu(m) thani uzhai puLLi udan Adith tharu puna vaLLi: Once, a Saivite sage was in deep penance which was distracted by a spotted deer jumping about; his union with that deer resulted in the birth of this girl who grew up in a millet field;

malai maRa vaLLi tharu thinai meLLa nukarvOnE: that VaLLi, the damsel of the hunters belonging to Mount VaLLimalai, gave you the millet-flour which You ate in a relaxed way with relish, Oh Lord!

ava neRi sollum avar avai kollum azhakiya veLLi nakar vAzhvE: Those ChamaNas preached a religious way of little value, and their entire clan was sent to the gallows by You (coming as ThirugnAna Sambandhar); and You took VeLLigaram* as Your abode, Oh Our Treasure!

adaiyalar selvam aLaRu idai sella amar seya valla perumALE.: You are capable of fighting so fiercely that the entire wealth of the hostile demons is drowned in the sea, Oh Great One!


* VeLLigaram is 12 miles west of VEppagunta Railway Station, 22 miles north of ArakkOnam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 658 kuvalayam malgu - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]