பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம் திருப்புகழ் உரை 23 (உருகிட உள்ளதான) உருகத்தக்க விரகு உடை உள்ளம் உற்சாகத்தை உடைய (என்) உள்ளம் இவ்வுலகில் என் உயிர் இருக்கும் பொழுதே நின்று ஒரு வழியாக நிலைத்து நின்று 'உமை பெற்ற செல்வனே" என்று மிகுந்த கல்வி உணர்ச்சியோடு சொல்லுதற்குத் தெரிந்து கொள்ளாதோ! வாசனை மலர்கள் உள்ள வள்ளிபுரம் உள்ள வள்ளிமலை யென்னும் ஊரில் உள்ள வள்ளிமலை 'யில் வாழ்ந்த வேட்டுவச்சி வள்ளியின் மணவாளனே! வளர்ந்த பெரிதாயுள்ள பூமியின் முழு எல்லையையும் அளவிட்ட பழைய-பச்சை நிறமுள்ள நல்ல மயில் வீரனே! அரிய கிரவுஞ்சமலை உடைபட வேலாயுதத்தைச செலுத்தின போர் வீரனே! அழகிய வயல் சூழ்ந்த வெள்ளி நகரில் வாழும் செல்வனே! (சூரா திபராம்) பகைவர்களின் செல்வப் பொருள்களெல்லாம் (கடல்) நீரிற் படிந்தழியப் போர் செயவல்ல பெருமாளே! ('உமைதரு செல்வன்" எனச் சொல்ல உணராதோ) 664. கள்ளத்தனம் உள்ள சாமர்த்தியம் உள்ள (வல்லி) ஒரு பெண்ணின் (பொது மகளின்) கையிலே நான் அள்ளி («тэйт) பொருள்களை அள்ளிக் கொடுப்பதாலே - (எனக்கு ஆஸ்தியாயிருந்த நவரத்னக் கற்களும், நெற்குவியல்களும், வெள்ளிப் பொருள்களும், தெளிந்த கல்விச் செல்வமும், செல்வமுள்ள சுற்றமும் (மாய எல்லாம் அழிந்து ஒழிய எல்லாம் விலக (மாயைச்) சேற்றிலே குதித்து, ஐவர் (மெய் வாய் கண் மூக்கு - செவி) என்னும் ஐம்பொறிகளும் செலுத்துகின்ற துன்பம் (ஐவரால்வரும் சஞ்சலம்) சொல்ல முடியாது: