திருப்புகழ் 608 மாகசஞ் சாரமுகில்  (ராஜகெம்பீரவளநாட்டு மலை)
Thiruppugazh 608 mAgasanjchAramugil  (rAjagembeeravaLanAttu malai)
Thiruppugazh - 608 mAgasanjchAramugil - rAjagembeeravaLanAttumalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனந் தானதன தாத்த தனதன
     தானனந் தானதன தாத்த தனதன
          தானனந் தானதன தாத்த தனதன ...... தந்ததான

......... பாடல் .........

மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
     போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு
          மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு ...... கண்டுபோல

மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு
     சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு
          வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு ...... மன்றுளாடி

சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு
     போகபண் டாரபணி தோற்ற அரைகொடு
          தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு ...... வந்துகாசு

தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற
     வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு
          சீவனொன் றானபர மார்த்த தெரிசனை ...... வந்துதாராய்

வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
     மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
          வீரனென் பானொருப ராக்ர னெனவர ...... அன்றுசோமன்

மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
     ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
          வீழநன் பாரதியு மூக்கு நழுவிட ...... வந்தமாயன்

ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
     வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்
          ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் ...... வந்துசேயென்

றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
     தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
          ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

மாகம் சஞ்சாரம் முகில் தோற்ற குழல் கொ(ண்)டு ...
ஆகாயத்தில் உலவுகின்ற மேகத்தை தோல்வியுறும்படிச் செய்த
கூந்தலைக் கொண்டும்,

போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொ(ண்)டு ...
போகங்களை அனுபவிக்கின்ற இந்திர (வான)வில்லை தோல்வி
அடையும்படிச் செய்த நெற்றியைக் கொண்டும்,

மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொ(ண்)டு கண்டு
போல மாலர் கொண்டு ஆடு கனி தோற்ற இதழ்
கொ(ண்)டு
... பெருமை தங்கிய வண்டுகள் சேர்கின்ற மன்மதனுடைய
மலர்ப் பாணங்களை தோல்வியுறச் செய்த கண்களைக் கொண்டும்,
கற்கண்டு போல இனிக்கின்றதென்று (காம) மயக்கம் கொண்டவர்கள்
கொண்டாடுகின்ற, கொவ்வைக் கனியை தோல்வியுறச் செய்த
வாயிதழைக் கொண்டும்,

சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொ(ண்)டு வார்
பொரும் பாரமலை தோற்ற முலை கொ(ண்)டு
... சோலையில்
போய் (அங்கே) ஒலி எழுப்பும் குயிலைத் தோல்வி அடையும்படி செய்த
இசை இன்பம் கொண்டும், கச்சு அணிந்து பாரமுள்ளதான, மலையைத்
தோல்வி அடையும்படிச் செய்த, மார்பகங்களைக் கொண்டும்,

மன்றுள் ஆடி சீகரம் பேணு துடி தோற்ற இடை கொ(ண்)டு
போக பண்டார பணி தோற்ற அரை கொ(ண்)டு
... அம்பலத்தில்
ஆடுகின்ற நடராஜர் திருக்கரத்தில் விரும்பி வைத்துள்ள உடுக்கையை
தோல்வி அடையும்படிச் செய்த இடுப்பைக் கொண்டும், காம போகத்தின்
கருவூலமாகிய, பாம்பைத் தோல்வி அடையும்படி செய்த பெண்குறியைக்
கொண்டும்,

தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொடு வந்து ... தேன்
சொட்டும் சிறப்புள்ள வாழையைத் தோல்வியுறச் செய்த தொடையைக்
கொண்டும் வெளியே வந்து,

காசு தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என உறவாடுகின்ற
எனை மல(ம்) நீக்கி ஒளி தரு சீவன் ஒன்றான பரமார்த்த
தெரிசனை வந்து தாராய்
... பொருளைத் தேடி நிற்கும் வேசியரோடு
பொழுது போக்கும் உடல் கொண்ட பொல்லாதவனாக உறவாடுகின்ற
என்னை மலங்களைப் போக்கி, ஒளி வீசும் சீவனோடு ஒன்று பட்ட பரம்
பொருள் விளக்கத்தை வந்து தந்தருளுக.

வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும்
அது தீர்க்க வடிவுடை வீரன் என்பான் ஒரு பராக்ரன் என
வர
... கோபம் தோன்றி உமை கூறியவுடனே (தக்ஷனுடைய) பெரிய
வேள்வி மேற்கொண்டு நடப்பதை அழிக்கும் பொருட்டு, ஒளி நிறைந்த
வீரபத்திரன் என்னும் வலிமையாளனாகிய ஒப்பற்றவன் தோன்றி வர,

அன்று சோமன் மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக
ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை வீழ நல் பாரதியும்
மூக்கு நழுவிட வந்த மாயன் ஏக நின்றாகி அமர் தோற்று
வதறிட
... அன்று சந்திரன் உடல் தேய, சூரியனுக்கு உள்ள பற்கள்
உதிர, யாகப் பசுவைப் பொடியாக்கும் அக்கினியின் கை அற்று விழ,
முதன்மையான தக்ஷன் முடி அற்று விழ, நல்ல சரசுவதியின் மூக்கு
அறுபட்டு நழுவி விழ, அங்கு வந்திருந்த திருமால் ஓட்டம் பிடிக்க,
அந்த யாக சாலையில் நின்று போர் விளைத்து, (அங்கிருந்தவர்களை)
வைது,

வேக உங்காரமோடு ஆர்க்க அலகைகள் ஏறி வென்று ஆடு
களம் நீக்கி
... கோப உங்காரத்தோடு சிவபெருமான் ஆரவாரம் செய்ய,
பேய்கள் கூடி வென்று ஆடிய (அந்த) யாக சாலையை விட்டு விலக்க,

முநிவர் வந்து சேய் என்று ஈச நண்பான புருஷார்த்த
தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய ராச
கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே.
... முனிவர்களும்
வந்து சேயே என்றும், ஈசா என்றும் போற்றி அன்பின் பாற்பட்ட
நால்வகைப் புருஷார்த்தங்களின் விளக்கக் காட்சியை தந்தருளுக
என வேண்டிய கேள்வி நெறியின் புகழைக் கொண்ட ராஜகெம்பீர
வள நாட்டு மலையில்* விளங்கும் தம்பிரானே.


* இது தற்போது திருக்கற்குடி என்று வழங்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில்
உள்ள உய்யக்கொண்டான் மலை என்றும் கூறுவர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.969  pg 1.970  pg 1.971  pg 1.972  pg 1.973  pg 1.974 
 WIKI_urai Song number: 390 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 608 - mAgasanj chAramugil (rAjagembeeravaLanAttu malai)

mAkasanj chAramukil thOtRa kuzhalkodu
     pOkainth rAthisilai thOtRa nuthalkodu
          mAnavaN dERukaNai thOtRa vizhikodu ...... kaNdupOla

mAlarkoN dAdukani thOtRa ithazhkodu
     sOlaisen RUthukuyil thOtRa isaikodu
          vArporum pAramalai thOtRa mulaikodu ...... manRuLAdi

seekaram pENuthudi thOtRa idaikodu
     pOkapaN dArapaNi thOtRa araikodu
          thEnukunj cheerkathali thOtRa thodaikodu ...... vanthukAsu

thEdukin RArodumey thUrththa nenavuRa
     vAdukin REnaimala neekki yoLitharu
          seevanon RAnapara mArththa therisanai ...... vanthuthArAy

vEkamuN dAkiyumai chAtRu maLavinil
     mAmakang kUrumathu theerkka vadivudai
          veeranen pAnorupa rAkra nenavara ...... anRusOman

mEniyun thEyakathir thOtRa eyiRuka
     Anukun theekaiyaRa sEtta vithithalai
          veezhanan bArathiyu mUkku nazhuvida ...... vanthamAyan

Ekanin RAkiyamar thOtRu vathaRida
     vEkavung kAramodu Arkka alakaikaL
          ERiven RAdukaLa neekki munivarar ...... vanthusEyen

ReesanaN pAnapuru shArththa therisanai
     thAvenung kELvineRi keerththi maruviya
          rAsakem beeravaLa nAttu malaivaLar ...... thambirAnE.

......... Meaning .........

mAkam sanjcAram mukil thOtRa kuzhal ko(N)du: With their hair that trounced the dark cloud floating in the sky,

pOka inthrAthi silai thOtRa nuthal ko(N)du: with their forehead that defeated the rainbow of IndrA that offers consummate enjoyment of pleasures,

mAna vaNdu ERu kaNai thOtRa vizhi ko(N)du kaNdu pOla mAlar koNdu Adu kani thOtRa ithazh ko(N)du: with their eyes that conquered the flowery arrows of Manmathan (God of Love), around which classy beetles swarm, with their lips that surpassed the kovvai fruit (in redness), which are hailed by amorous men as sweet as the sugar candy,

sOlai senRu Uthu kuyil thOtRa isai ko(N)du vAr porum pAramalai thOtRa mulai ko(N)du: with their pleasant music that traverses to the grove and challenges the music of the cuckoo, with their tight-bloused, heavy bosom that excels the mountain,

manRuL Adi seekaram pENu thudi thOtRa idai ko(N)du pOka paNdAra paNi thOtRa arai ko(N)du: with their waist that beats the hand-drum held with relish in His hallowed hand by Lord NadarAjar who dances on the golden stage, with their genital, the receptacle of passionate love-making, that rivals the hood of the serpent,

thEn ukum seer kathali thOtRa thodai kodu vanthu: and with their soft thigh that defeats the stem of plantain tree, oozing honey, they come out in the open;

kAsu thEdukinRArodu mey thUrththan ena uRavAdukinRa enai mala(m) neekki oLi tharu seevan onRAna paramArththa therisanai vanthu thArAy: I have been whiling away my time with such whores hankering after money; I roam about with my body as a wicked person seeking liaison with them; removing all my slags, kindly come over and grant me the interpretation of the union of the illuminated soul with the supreme principle, Oh Lord!

vEkam uNdAki umai sAtRum aLavinil mA makam kUrum athu theerkka vadivudai veeran enpAn oru parAkran ena vara: When UmAdEvi incited with fiery words, He was determined to suspend the mammoth sacrifcial rite of Dhakshan and destroy it by entering the hall in the dazzling form of Veerabhadran, a powerful and matchless one;

anRu sOman mEniyum thEya kathir thOtRa eyiRu uka An ukum thee kai aRa sEtta vithi thalai veezha nal pArathiyum mUkku nazhuvida vantha mAyan Eka ninRAki amar thOtRu vathaRida: that day, the Moon's body lost its lustre; the teeth of the Sun were knocked down; Agni whose job was to singe the sacrificial cow lost his arms which were severed; the foremost PrajAthipathi (Dhakshan) fell down with his head chopped off; the virtuous Goddess, Saraswathi, had her dismembered nose slip down; Lord VishNu who came on the scene fled from that place while He (Veerabhadran) steadfastly stood in the sacrificial hall and waged a war, scolding all those who had assembled there;

vEka ungkAramOdu Arkka alakaikaL ERi venRu Adu kaLam neekki: when Lord SivA made a thundering noise of rage, the devils that danced together celebrating the victory left the sacrificial hall;

munivar vanthu sEy enRu eesa naNpAna purushArththa therisanai thA enum kELvi neRi keerththi maruviya rAsa kempeera vaLa nAttu malai vaLar thambirAnE.: the sages assembled there and pleaded to you saying "Oh our child, Oh our Lord!" and implored You to interpret for them the four dear purushArthAs (namely, virtue, wealth, pleasure and liberation, which are the four pursuits humans may legitimately engage in); the seeking of the sages took place in the famous mountain of Rajagembeera vaLanAdu* which is Your abode, Oh Great One!


* This place is now known as ThirukkaRkudi and also as UyyakondAnmalai, near Tiruchi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 608 mAgasanj chAramugil - rAjagembeeravaLanAttu malai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]