திருப்புகழ் 609 சூது கொலைகாரர்  (ஞானமலை)
Thiruppugazh 609 sUdhukolaikAra  (gnAnamalai)
Thiruppugazh - 609 sUdhukolaikAra - gnAnamalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தான தானதன தான
     தானதன தான ...... தனதான

......... பாடல் .........

சூதுகொலை கார ராசைபண மாதர்
     தூவையர்கள் சோகை ...... முகநீலர்

சூலைவலி வாத மோடளைவர் பாவர்
     தூமையர்கள் கோளர் ...... தெருவூடே

சாதனைகள் பேசி வாருமென நாழி
     தாழிவிலை கூறி ...... தெனவோதி

சாயவெகு மாய தூளியுற வாக
     தாடியிடு வோர்க ...... ளுறவாமோ

வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர்
     வேதியர்கள் பூச ...... லெனஏகி

வீறசுரர் பாறி வீழஅலை யேழு
     வேலையள றாக ...... விடும்வேலா

நாதரிட மேவு மாதுசிவ காமி
     நாரியபி ராமி ...... யருள்பாலா

நாரணசு வாமி யீனுமக ளோடு
     ஞானமலை மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சூது கொலைகாரர் ஆசை பண மாதர் ... சூதும் கொலையும்
செய்பவர்கள், பணத்தில் ஆசை கொண்ட விலைமாதர்கள்,

தூவையர்கள் சோகை முகம் நீலர் ... இறைச்சி உண்போர், (இரத்தக்
குறைவால்) வெளுத்த முகம் உடைய விஷமிகள்,

சூலை வலி வாதமோடு அளைவர் பாவர் தூமையர்கள்
கோளர்
... சூலை நோய், வலிப்பு, வாத நோய் இவைகளோடு சம்பந்தப்
படுபவர்கள், பாவிகள், தூய்மை இல்லாதவர்கள், கோள் சொல்லுபவர்கள்,

தெரு ஊடே சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை
கூறு இது என ஓதி
... தெருவில் காரியம் சாதிப்பதற்கு வேண்டிய
அழுத்தமான பேச்சுக்களைப் பேசி, வாரும் என அழைத்து, ஒரு நாழிகை
நேரத்திற்கு (24 நிமிடங்களுக்கு) பாண்டமாகிய உடலின் விலை
நிர்ணயம் இதுதான் என்று பேரம் பேசி,

சாய வெகு மாய தூளி உற ஆக தாடி இடுவோர்கள்
உறவாமோ
... (வந்தவர்கள் தம் பக்கம்) சாயும்படி மிக்க மாயப்
பொடியைப் படும்படி அவர்கள் மீது தூவி சரீரத்தைத் தட்டிக்
கொடுப்பவர்கள் உறவு எனக்கு என்றேனும் ஆகுமோ?

வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூசல் என
ஏகி
... வேதம் வல்ல முனிவர்கள், குழந்தைகள், பெண்கள், மறையோர்
இவர்களை போர் நடக்கப் போகிறது என்று முன்னதாகவே
அப்புறப்படுத்தி விட்டு,

வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும்
வேலா
... மேலெழுந்து வந்த அசுரர்கள் அழிந்து கீழே விழ, அலை கடல்
ஏழும் வற்றிச் சேறாக வேலைச் செலுத்தியவனே,

நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள்
பாலா
... தலைவரான சிவபெருமானுடைய இடப் பாகத்தில் உறையும்
மாது சிவகாமி, பார்வதியாகிய அழகி அருளிய குழந்தையே,

நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞான மலை மேவும்
பெருமாளே.
... நாராயண மூர்த்தி ஈன்ற மகளான வள்ளியோடு, ஞான
மலையில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.973  pg 1.974  pg 1.975  pg 1.976 
 WIKI_urai Song number: 391 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 609 - sUdhukolai kArar (gnAnamalai)

sUdhukolai kAra rAsaipaNa mAthar
     thUvaiyarkaL sOkai ...... mukaneelar

sUlaivali vAtha mOdaLaivar pAvar
     thUmaiyarkaL kOLar ...... theruvUdE

sAthanaikaL pEsi vArumena nAzhi
     thAzhivilai kURi ...... thenavOthi

sAyaveku mAya thULiyuRa vAka
     thAdiyidu vOrka ...... LuRavAmO

vEthamuni vOrkaL pAlakarkaL mAthar
     vEthiyarkaL pUsa ...... lenaEki

veeRasurar pARi veezhAlai yEzhu
     vElaiyaLa RAka ...... vidumvElA

nAtharida mEvu mAthusiva kAmi
     nAriyapi rAmi ...... yaruLbAlA

nAraNasu vAmi yeenumaka LOdu
     njAnamalai mEvu ...... perumALE.

......... Meaning .........

sUthu kolaikArar Asai paNa mAthar thUvaiyarkaL sOkai mukam neelar: These whores are schemers, murderers, greedy after money, and meat-eaters, having malicious, pale and anaemic faces;

sUlai vali vAthamOdu aLaivar pAvar thUmaiyarkaL kOLar: they are afflicted with several diseases like stomach ache, epilepsy and rheumatism; they are sinners, highly infected and unclean people, and tale bearers;

theru UdE sAthanaikaL pEsi vArum ena nAzhi thAzhi vilai kURu ithu ena Othi: they hang around in the street, speaking firmly for self-gratifying purpose, inviting someone and haggling with him about the rate for the use of the vessel (their body) per ghati (24 minutes);

sAya veku mAya thULi uRa Aka thAdi iduvOrkaL uRavAmO: pulling them over, they sprinkle magic powder on them, patting their bodies; will this kind of relationship with them ever befit me?

vEtha munivOrkaL pAlakarkaL mAthar vEthiyarkaL pUsal ena Eki: Determining in advance that sages well-versed in vEdAs, children, women and priests should be far removed from the battleground, You evacuated them all;

veeRu asurar pARi veezha alai Ezhu vElai aLaRu Aka vidum vElA: then You knocked down all the confronting demons and rendered the seven wavy seas into dried-up slush by wielding Your spear, Oh Lord!

nAtharidam mEvu mAthu sivakAmi nAri apirAmi aruL pAlA: You are the child of beautiful PArvathi, concorporate as SivagAmi in the left side of the Leader, Lord SivA!

nAraNa suvAmi eenum makaLOdu njAna malai mEvum perumALE.: Along with Your consort, VaLLi, the daughter of Lord NArAyaNan (VishNu), You are seated in this place called GnAnamalai*, Oh Great One!


* GnAnamalai is said to be near NAmakkal.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 609 sUdhu kolaikAra - gnAnamalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]