திருப்புகழ் 607 தொல்லைமுதல்  (கொல்லிமலை)
Thiruppugazh 607 thollaimudhal  (kollimalai)
Thiruppugazh - 607 thollaimudhal - kollimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யதன தானந்த தய்யதன தானந்த
     தய்யதன தானந்த ...... தனதான

......... பாடல் .........

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
     சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி

துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
     தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும்

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
     பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப்

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
     பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
     கல்வருக வேநின்று ...... குழலூதுங்

கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
     கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
     கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
     கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள் ...
பழமையானதும் முதலானதும் தான் ஒன்றாக விளங்குவதாய், சக்தி
- சிவன் என்ற மென்மையான இரண்டு பேதங்களாக விளங்குவதாய்,

சொல்லுகுண மூவு அந்தமெனவாகி ... சொல்லப்படுகின்ற மூன்று
குணங்களின் ( த்வம், ரஜோ, தமஸ்) முடிவாக விளங்கும்
மும்மூர்த்திகளாய்,

துய்யசதுர் வேதங்கள் வெய்யபுலன் ஓரைந்து ... தூய்மையான
நான்கு வேதங்கள் ஆகி, கொடிய புலன்களாகிய (சுவை, ஒளி, ஊறு,
ஓசை, நாற்றம் என்ற) ஐந்து ஆகி,

தொய்யுபொருள் ஆறங்கம் எனமேவும் ... சோர்வடையச்
செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு
வேதாங்கங்களாகி*1,

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் ... பலப்பல
நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம்
ஆகியவற்றில் தங்குவதாய்,

பல்குதமிழ் தானொன்றி யிசையாகி ... பெருகிவரும் தமிழ்
மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி,

பல்லுயிருமாய் அந்தமில்ல சொருபாநந்த பெளவமுறவே ...
பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில்
மூழ்கும்படி

நின்ற தருள்வாயே ... எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ
அருள்வாயாக.

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ ... கல்லும்
உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம்
அடைந்திருந்த பசுக்கள்

அம் புகல் வருகவே நின்று குழலூதுங் கையன் ... அழகிய புகும்
இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால்

மிசையேறு உம்பன் நொய்யசடையோன் எந்தை ...
(முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக*2 ஏறிய
பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான்

கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா ... கை குவித்துத்
தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே,

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமேசென்று ... தினைக்
கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று,

கொள்ளைகொளு மாரன்கையலராலே ... உயிரைக் கொள்ளை
கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே,

கொய்துதழையேகொண்டு செல்லுமழவாகந்த ... தழைகளைக்
கொய்து சென்ற*3 கட்டழகுக் கந்தனே,

கொல்லிமலை மேனின்ற பெருமாளே. ... கொல்லிமலை*4 மீது
நின்றருளும் பெருமாளே.


(*1) ஆறங்கம் - வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை:

சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் - இவை முறையே
நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.


(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால்
அத்தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக
வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.


(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர்.
அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு.
அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும்.
வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.


(*4) கொல்லிமலை சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.965  pg 1.966  pg 1.967  pg 1.968 
 WIKI_urai Song number: 389 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 607 - thollaimudhal (kollimalai)

thollaimudhal thAnondru melliyiru bEdhangaL
     solluguNa mUvandham ...... enavAgi

thuyyachathur vEdhangaL veyyapula nOraindhu
     thoyyuporu LARangam ...... enamEvum

pallapala nAdhangaL algapasu pAsangaL
     palguthamizh thAnondri ...... isaiyAgip

palluyiru mAyantha millasoru pAnandha
     bauvamuRa vEnindra ...... dharuLvAyE

kalluruga vEyinkaN allalpadu gO ampu
     galvaruga vEnindru ...... kuzhalUdhum

kaiyanmisai ERumban noyyasadai yOnendhai
     kaithozhamey nyAnamsol ...... kadhirvElA

kollaimisai vAzhgindra vaLLipuna mEsendru
     koLLaikoLu mArankai ...... alarAlE

koydhuthazhai yEkoNdu sellumazha vAkandha
     kollimalai mEnindra ...... perumALE.

......... Meaning .........

thollaimudhal thAnondru: It is an ancient and primordial thing of Oneness;

melliyiru bEdhangaL: Its subtle Duality is evident in Sakthi-SivA principle (see footnote *5);

solluguNa mUvandham enavAgi: It is the Trinity, representing the culmination of the three gunAs (characteristics) namely, sathwam (tranquility), rajo (aggressiveness) and thamas (dullness);

thuyyachathur vEdhangaL: It is the four chaste vEdAs;

veyyapula nOraindhu: It is the five terrible senses (namely, smell, sight, taste, hearing and sensation);

thoyyuporuL ARangam enamEvum: It is the six divisions*1 (ShadAnga) of the VEdAs with meanings that could wear one out;

pallapala nAdhangaL: It remains within the various musical notes;

algapasu pAsangaL: It remains in contact with the pasu (soul) and pAsam (delusion) so that life's bondages are severed;

palguthamizh thAnondri isaiyAgi: It manifests in all aspects of Tamil language that is constantly growing; It takes the form of music;

palluyiru mAyantha millasoru pAnandha bauvamuRa vE: It is seen in all lives - and in order that I dip into the ocean of endless blissful vision,

nindra dharuLvAyE: will You kindly grant It to me?

kalluruga vEyinkaN allalpadu gO: He played the bamboo flute so sweetly as to melt the stone; the herds of cows after a hard day of labour

ampugal varugavE nindru kuzhalUdhum kaiyan: reached their homes listening to the blissful music which He played; those fingers were Krishna's (Vishnu);

misai ERumban noyyasadai yOnendhai: that Vishnu (once) became a bull (Rishabha)*2 on which our father Lord SivA, with His drooping tresses, mounted;

kaithozhamey nyAnamsol kadhirvElA: and when He worshipped You with folded hands, You taught Him the True Knowledge, Oh Lord with the dazzling spear!

kollaimisai vAzhgindra vaLLipuna mEsendru: You went to the millet-field where VaLLi was living

koLLaikoLu mArankai alarAlE: and were romantically affected by the flowery arrows of Manmathan (God of Love).

koydhuthazhai yEkoNdu sellumazhavAkandha: You then plucked leaves*3 and carried them to VaLLi, Oh handsome KandhA,

kollimalai mEnindra perumALE.: You have Your abode at Kollimalai*4, Oh Great One!


*1 The six divisions (ShadAnga) of VEdAs are as follows: Siksha, Vyakaranam, Chandhas, Nruththam, Jyothisham and Kalpam.
These represent the nose, mouth, legs, ears, eyes and hands of the Veda Purusha respectively.


*2 When Lord SivA proceeded to invade Thiripuram, His chariot broke down as He failed to take the clearance of Lord VinAyagA.
At that time, Vishnu offered to become the Bull on which SivA mounted. This story is being referred to here.


*3 In Tamilnadu, girls in mountains used to wear leaves. In the agaththuRai (dealing with romance), the hero has to pluck leaves and carry them to the heroine to prove his love. Murugan is believed to have plucked leaves and carried them to VaLLi.


*4 Kollimalai is in SAlem District, near NAmakkal.


*5 'nAdha bhindu' ('vindhu') is explained here:

'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 607 thollaimudhal - kollimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]