பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/966

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . கொல்லிமலை திருப்புகழ் உரை 493. பசுமையான வன்னி, அல்லி, வெட்சி இவைதமை அணிந்த சென்னி (தலை) உள்ள பெருமாளே! பச்சை மயிலை நடத்த வல்ல பெருமாளே! (நைவ தியல்போதான்) 389 பழம் பொருள், முதற்பொருள் எனத் தான் ஒன்றே விளங்குவதாய், சத்தி சிவம் என்னும் இரு வேறு தன்மையதாய், சொல்லப்படும் ராசத தாமத சாத்துவீக மெனப்படும் முக்குண முடிவாய் (முக்குணங்களை உடைய திரி மூர்த்திகளாய்), பரிசுத்தமான நான்கு வேதங்களாய், கொடிய புலன்கள் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஒர் ஐந்தையும் சோர்வடையச் செய்யும் பொருள் கொண்ட ஆறு அங்கம் (வேதாங்கம்) சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருள் உணர்த்துங் கருவிகளாய் விளங்குவதாய், பலப்பல ஒலிகளில் தங்குவதாய், உயிர், தளை என்பனவாய், பெருகும் தமிழிற் பொருந்தி இசை (இன்னிசை) யாப் பல உயிர்களுமாய், முடிவில்லாததாய், உள்ள ஆனந்த உருவக் கடலை அடையும்படிச் செய்ய வல்ல பொருள் எதுவோ அந்தப் பொருளை அருளுவாயாக.