திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 578 காம அத்திரமாகி (விராலிமலை) Thiruppugazh 578 kAmaAththiramAgi (virAlimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன ...... தனதான ......... பாடல் ......... காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக் கார்போற்றவ ழோதி நிழல்தனி லார்வாட்கடை யீடு கனகொடு காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர் ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில் மலருட னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால் ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார னெனவெகு சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக் கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள் கோதாட்டிய ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு மருவிய கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... (முதல் ஒன்பது வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). காம அத்திரமாகி இளைஞர்கள் வாழ் நாள் கொடு போகி அழகிய காது ஆட்டிய பார இரு குழை அளவோடி ... மன்மதனுடைய பாணமாக இருந்து, இளைஞர்களின் உயிரைக் கவர்ந்து சென்று, அழகு வாய்ந்த காதில் ஆடுகின்ற கனத்த இரண்டு குண்டலங்கள் வரையிலும் ஓடிச் சென்று, கார் போல் தவழ் ஓதி நிழல் தனில் ஆர் வாள் கடை ஈடு கன(ம்) கொ(ண்)டு ... கருமேகம் போல் தவழ்ந்து விளங்கும் கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று, வாள் முனை போன்று வலிமையும் பெருமையும் கொண்டதாய், கால் ஏற்று வை வேலின் முனைக் கடை யம தூதர் ஏமாப்பு அற மோக இயல் செய்து ... கொடுங் காற்றின் தன்மை கொண்டு, கூரிய வேலின் முனை நுனி போன்ற இக்கண்களின் கொடுமை முன் (நாம் எம்மட்டு எனும்படி) யம தூதுவர்கள் இறுமாப்பை இழக்க, மோகத் தன்மையை ஊட்டி, நீலோற்பல ஆசு இல் மலருடன் நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார் பால் ஏகாப் பழி பூணும் மருள் அற ... நீலோற்பலத்தின் குற்றமில்லாத மலருக்கு ஒப்பான ஆட்டத்தையும் ஆச்சரியத்தையும் காட்டும் கண்களை உடைய வேசியர் மீது நீங்காத நிந்தையான பழிச் சொல்லைக் கொண்டிருந்த மயக்கம் (என்னை) விட்டு நீங்க, நீ தோற்றி மு(ன்)னாளும் அடிமையை ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே ... நீ எதிரில் தோன்றி முன்பு அடிமையாகிய என்னைக் கரை ஏற்றிய காரணத்தால் உன் அருளின் திறத்தை நான் மறக்க மாட்டேன். சீமாட்டியும் ஆய திரி புரை காலாக்கினி கோப பயிரவி ... பெருமாட்டியாகிய திரிபுரை, யுகாந்த கால வடவாமுகாக்னி போன்ற கோபம் கொள்ளும் பைரவி, சீல உத்தமி நீலி சுர திரி புவன ஈசை ... நல்லொழுக்கம் உள்ள உத்தமி, நீல நிறம் உடையவள், விண் முதலிய மூவுலகங்களுக்கும் ஈசுவரியாகிய பார்வதி தேவியும், சீ(ர்) கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு சீராட்டொடு பேண ... ஸ்ரீ கார்த்திகையாகிய அறுவகை மாதர்களும் குமாரனே என்று மிக்க செல்லப் பாராட்டுகளுடன் உன்னைப் போற்ற, வட திசை கயிலாச கோமாற்கு உபதேசம் உபநிட வேத அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள் ... வட திசையில் உள்ள கயிலாயத்தில் வீற்றிருக்கும் தலைவாராகிய சிவபெருமானுக்கு உபதேசமாக உபநிடதம், வேதம் இவைகளுக்குப் பொருளான மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருள் செய்து, கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே ... அறியாமை என்னும் குற்றத்தை நீக்கிய குரு மூர்த்தி என்னும் பெயர் விளங்க வாய்ந்த இளையவனே, கோடாச் சிவ பூஜை பவுருஷ மாறாக் கொடை நாளும் மருவிய ... நெறி தவறாத முறையில் சிவ பூஜையும், ஆண்மையும், இல்லை என்னாத கொடையும் தினந்தோறும் பொருந்தியுள்ள கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே. ... கோனாட்டைச்* சேர்ந்த விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.891 pg 1.892 pg 1.893 pg 1.894 WIKI_urai Song number: 360 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 578 - kAma AththiramAgi (virAlimalai) kAmAththira mAki yiLainjarkaL vAzhnAtkodu pOki yazhakiya kAthAttiya pAra irukuzhai ...... yaLavOdik kArpOtRava zhOthi nizhalthani lArvAtkadai yeedu kanakodu kAlEtRuvai vElin munaikadai ...... yamathUthar EmAppaRa mOka viyalseythu neelORpala Asil malaruda nErAttavi nOtha midumvizhi ...... madavArpAl EkAppazhi pUNu maruLaRa neethOtRimu nALu madimaiyai yeedEtRutha lAlun valimaiyai ...... maRavEnE seemAttiyu mAya thiripurai kAlAkkini kOpa payiravi seelOththami neeli surathiri ...... puvanEsai seekArththikai yAya aRuvakai mAthAkkaLku mAra nenaveku seerAttodu pENa vadathisai ...... kayilAsak kOmARkupa thEsa mupanida vEthArththameynj njAna neRiyaruL kOthAttiya SvAmi yenavaru ...... miLaiyOnE kOdAcchiva pUjai pavurusha mARAkkodai nALu maruviya kOnAttuvi rAli malaiyuRai ...... perumALE. ......... Meaning ......... (First nine lines of the verse describe the eyes of the whores). kAma aththiramAki iLainjarkaL vAzh nAL kodu pOki azhakiya kAthu Attiya pAra iru kuzhai aLavOdi: They serve as the weapon of Manmathan (God of Love); snatching the lives of young men, they swing right up to the beautiful ears from which heavy ear-studs dangle; kAr pOl thavazh Othi nizhal thanil Ar vAL kadai eedu kana(m) ko(N)du: they fill up the shade under the hair that hovers like dark cloud; they are sharp and prominent like the edge of the sword; kAl EtRu vai vElin munaik kadai yama thUthar EmAppu aRa mOka iyal seythu: they have the characteristic of whirlwind; the messengers of Yaman (God of Death) feel ashamed before the horror of the spear-like pointed eyes which provoke passion; neelORpala Asu il malarudan nEr Attam vinOthamidum vizhi madavAr pAl EkAp pazhi pUNum maruL aRa: the movement of the eyes of the whores and the awe they inspire are like that of the pure blue lily; in order to get rid of my delusion for them, which blemish could not be eradicated, nee thOtRi mu(n)nALum adimaiyai eedEtRuthalAl un valimaiyai maRavEnE: You appeared before me and salvaged this old slave; for that reason, I would never forget the power of Your grace! seemAttiyum Aya thiri purai kAlAkkini kOpa payiravi: She is Thiripurai, the great Goddess; She is Bhairavi whose rage is comparable to the vadavA mukA agni, the inferno that appears during the deluge of the aeon; seela uththami neeli sura thiri puvana eesai: She is virtues-incorporated; She has blue complexion; She is the deity in charge of the three worlds including the sky; as that PArvathi DEvi see(r) kArththikaiyAya aRu vakai mAthAkkaL kumAran ena veku seerAttodu pENa: along with the six divine KArthikai Mothers, cuddled You, their pet son, calling You "Oh KumArA", vada thisai kayilAsa kOmARku upathEsam upanida vEtha arththa meynj njAna neRi aruL: You graciously preached the righteous way that is interpreted in the upanishads and VEdAs to Lord SivA, the leader of Mount KailAsh in the North, kOthu Attiya SvAmi ena varum iLaiyOnE: and became His great Master who removed the blemish called ignorance, Oh Young One! kOdAc chiva pUjai pavurusha mARAk kodai nALum maruviya: In this place, the worship of SivA is conducted in the traditional style; manliness and consistent charity prevail here everyday; kOnAttu virAli malai uRai perumALE.: this is Mount VirAlimalai, being part of KOnAdu*, where You are seated, Oh Great One! |
* KOnAdu is the region west of Mount eRumbeesar, east of MathiRkarai, south of River KAvEri and north of PirAnmalai; VirAlimalai is in this area, situated 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |