திருப்புகழ் 577 கரிபுராரி காமாரி  (விராலிமலை)
Thiruppugazh 577 karipurArikAmAri  (virAlimalai)
Thiruppugazh - 577 karipurArikAmAri - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
     கயிலை யாளி காபாலி ...... கழையோனி

கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
     கணமொ டாடி காயோகி ...... சிவயோகி

பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
     பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி

பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
     பரம ஞான வூர்பூத ...... அருளாயோ

சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
     துரக கோப மீதோடி ...... வடமேரு

சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
     சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும்

திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
     திரளி னோடு பாறோடு ...... கழுகாடச்

செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
     திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரிபுராரி ... யானையின் உடலை அழித்து தோலை உடுத்தியவரும்,

காமாரி ... மன்மதனை எரித்தவரும்,

திரிபு ராரி ... திரிபுரத்தை அழித்தவரும்,

தீயாடி ... சுடலை (மயான) நெருப்பில் மூழ்கி ஆடுபவரும்,

கயிலை யாளி ... கயிலைமலைக்கு இறைவரும்,

காபாலி ... மண்டையோட்டை (கபாலம்) கையில் ஏந்தியவரும்,

கழையோனி ... மூங்கிலின் கீழே தோன்றியவரும்*,

கர உதாசன ஆசாரி ... கையில் நெருப்பை ஏந்திய ஆசார்ய
குருநாதரும்,

பரசு பாணி ... மழு (கோடரி) ஆயுதத்தைக் கையில் கொண்டவரும்,

பானாளி ... நள்ளிரவில் ஆடுதற்கு விரும்புபவரும்,

கணமொ டாடி ... பூத கணங்களுடன் ஆடுபவரும்,

காயோகி சிவயோகி ... உலகங்களைக் காக்கும் யோகியும், சிவ
யோகியும்,

பரம யோகி மாயோகி ... பரம யோகியும், மகா கனம் பொருந்திய
யோகியும்,

பரி அரா ஜடாசூடி ... பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும்,

பகரொணாத மாஞானி ... சொல்லுதற்கு அரிய மகா ஞானியும்,

பசுவேறி ... பசுவை வாகனமாகக் கொண்டவரும்,

பரதம் ஆடி கானாடி ... பரத நாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம்
செய்பவரும்,

பர வயோதிக அதீத ... மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய

பரம ஞான வூர் ... பரம சிவனாரின் பெரிய ஞான ஊருக்குள்
(சிவஞானபீடத்தில்)

பூத அருளாயோ ... யான் புகுவதற்கு நீ அருளமாட்டாயோ?

சுருதி யாடி தாதா ... வேதங்களை அத்யயனம் செய்த பிரமன்

வி வெருவி யோட ... மிகவும் அஞ்சி ஓடவும்,

மூதேவி துரக ... மூதேவி அகன்று ஓடவும்,

கோப மீதோடி வடமேரு சுழல ... மிக்க கோபம் கொண்டு, வடக்கே
உள்ள மேருமலை சுழலவும்,

வேலை தீமூள ... கடலிலே நெருப்பு பிடித்துக்கொள்ளவும்,

அழுது அளாவி வாய்பாறி சுரதினோடு சூர் மாள ... வாய் கிழிய
அழுகை கலந்த ஓசையுடன் சூரன் மாயவும்,

உலகேழும் ... ஏழு உலகங்களுடன்

திகிரி மாதிர ஆவார திகிரி சாய ... வட்டமான, திசைகளை
மறைக்கும், சக்ரவாளகிரியும் சாயவும்,

வேதாள திரளினோடு பாறோடு கழுகாட ... பேய்க்
கூட்டங்களுடன் பருந்துகளும் கழுகுகளும் ஆடவும்,

செருவில் நாடு ... போர்க்களத்தை விரும்பிச் சென்றவனே,

வான் நீப ... பரிசுத்தமான கடம்பமாலையை அணிந்தவனே,

கருணை மேருவே ... கருணையின் மேருமலையே,

பார திருவி ராலியூர்மேவு பெருமாளே. ... பெருமை மிக்க
அழகிய விராலிமலையில்** அமர்ந்த பெருமாளே.


* சிவபிரான் மூங்கிலின் அடியில் சுயம்புவாகத் தோன்றியதால் வேய்முத்தர்
எனப் பெயர் கொண்டார் - திருநெல்வேலி தலபுராணம்.


** விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.


இப்பாடலில் முதற்பகுதி சிவனையும், பிற்பகுதி முருகனது போரையும்
வருணிப்பது சிறப்பானது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.889  pg 1.890  pg 1.891  pg 1.892 
 WIKI_urai Song number: 359 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 577 - karipurAri (virAlimalai)

karipu rAri kAmAri thiripu rAri theeyAdi
     kayilai yALi kApAli ...... kazhaiyOni

karavu dhAsa nAsAri parasu pANi pAnALi
     kaNamo dAdi kAyOgi ...... sivayOgi

parama yOgi mAyOgi pariya rA jatAsUdi
     pagaro NAdha mAnyAni ...... pasuvERi

baratha mAdi kAnAdi parava yOdhi kAtheetha
     parama nyAna UrbUtha ...... aruLAyO

surudhi yAdi dhAthAvi veruvi Oda mUdhEvi
     thuraga kOba meethOdi ...... vadamEru

suzhala vElai theemULa azhudha LAvi vAypARi
     suradhi nOdu sUrmALa ...... ulagEzhum

thigiri mAdhira AvAra thigiri sAya vEdhALa
     thiraLi nOdu pAROdu ...... kazhugAda

seruvi nAdu vAneepa karuNai mEru vEpAra
     thiruvi rAli yUrmEvu ...... perumALE.

......... Meaning .........

karipurAri: He killed an elephant and wore its hide as a shawl;

kAmAri: He burnt down Manmathan (Love God) into ashes;

thiripurAri: He destroyed Thiripuram (burning it with a mere smile);

theeyAdi: He dances amidst the fire in the cremation ground;

kayilai yALi: He rules Mount KailAsh;

kApAli: He holds in His hand the skull (from one Head of BrahmA);

kazhaiyOni: He emerged from under a bamboo tree*;

kara vudhAsana AsAri: He is a Great Teacher, holding fire in one of His hands;

parasu pANi: In another hand, He holds parasu (pickaxe);

pAnALi: He loves to dance at midnight;

kaNamo dAdi: He dances with a multitude of BhUthAs (devils);

kAyOgi: He is a Yogi who protects all the worlds;

sivayOgi: He is a Yogi of pure Saivite tradition;

parama yOgi mAyOgi: He is a Supreme Yogi and the greatest Yogi;

pariya rA jatAsUdi: He adorns His tresses with a huge serpent;

pagaro NAdha mAnyAni: He is such a wizard, too great to describe in words;

pasuvERi: He mounts the bovine, Nandi;

baratha mAdi: He is an expert dancer of Bharatha NAtiyam;

kAnAdi: He dances in the forests;

para vayOdhika atheetha: He is above all and is beyond aging;

parama nyAna UrbUtha aruLAyO: and He is Lord SivA; Will You not let me enter His Kingdom of Supreme Knowledge?

surudhi yAdi dhAthA: BrahmA, who is the authority on all scriptures,

vi veruvi Oda: ran away from the scene out of extreme fear;

mUdhEvi thuraga: the woman of ill-omen (MUdhEvi) fled the spot in a hurry;

kOba meethOdi vadamEru suzhala: the Mount MEru (KailAsh) in the North was so enraged that it began to spin on its axis;

vElai theemULa: the sea caught fire;

azhudha LAvi vAypARi suradhi nOdu sUrmALa: SUran was so frightened that he cried loudly until his jaws tore open, and he was eventually killed;

ulagEzhum thigiri mAdhira AvAra thigiri sAya: all the seven worlds and SUran's abode, ChakravALagiri, which was a huge sphere obscuring all the directions, fell;

vEdhALa thiraLi nOdu pAROdu kazhugAda: devils along with vultures and eagles danced in the battlefield;

seruvi nAdu: and You marched into that battlefield willingly!

vAneepa: You wear the garland made of pure kadamba flowers!

karuNai mEruvE: For compassion You are comparable to Mount MEru (KailAsh)!

pAra thiru virAli yUrmEvu perumALE.: You have chosen for Your abode the famous and beautiful place, VirAlimalai**, Oh Great One!


* SivA appeared in the form of 'LingA' under a bamboo tree - ThirunelvEli ThalapurANam.


'nAdha bhindu' ('vindhu') is explained here:

'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham).


** VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.


The beauty of this song can be seen in the first half describing SivA and, in the second half, the war launched by Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 577 karipurAri kAmAri - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]