திருப்புகழ் 459 சிரித்துச் சங்கொளி  (சிதம்பரம்)
Thiruppugazh 459 siriththuchchangkoLi  (chidhambaram)
Thiruppugazh - 459 siriththuchchangkoLi - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத் தந்தன தானன தானன
     தனத்தத் தந்தன தானன தானன
          தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

சிரித்துச் சங்கொளி யாமின லாமென
     வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு
          செணத்திற் சம்பள மேபறி காரிகள் ...... சிலபேரைச்

சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்
     புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை
          திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய ...... மயில்போலே

அருக்கிப் பண்புற வேகலை யால்முலை
     மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க
          ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் ...... மிடறோதை

அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி
     மினுக்கிச் சந்தன வாசனை சேறுட
          னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க ...... ளுறவாமோ

இரைத்துப் பண்டம ராவதி வானவ
     ரொளித்துக் கந்தசு வாமிப ராபர
          மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள்

இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ
     டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ
          டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு ...... மயில்வீரா

சிரித்திட் டம்புர மேமத னாருட
     லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை
          திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் ...... கியசேயே

திருச்சித் தந்தனி லேகுற மானதை
     யிருத்திக் கண்களி கூர்திக ழாடக
          திருச்சிற் றம்பல மேவியு லாவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிரித்துச் சங்கு ஒளியாம் மி(ன்)னலாம் என உருக்கிக்
கொங்கையினால் உற மேல் விழு செணத்தில் சம்பளமே பறி
காரிகள்
... சிரித்து, (பற்களின் ஒளியை) சங்கின் ஒளி எனவும்,
மின்னலின் ஒளி எனவும் சொல்லும்படி வெளிக் காட்டி, (அதனால்
காண்போருடைய மனத்தை) உருக்கி மார்பகங்களைக் கொண்டு
பொருந்த, மேலே விழுகின்ற அந்த நேரத்தில் பொருளைப் பறிப்பவர்கள்.

சில பேரைச் சிமிட்டிக் கண்களினால் உறவே மயல்
புகட்டிச் செம் துகிலால் வெளியாய் இடை திருத்திப் பண்
குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே அருக்கி
... சில
பேர்வழிகளை கண்களால் சிமிட்டி, அழுத்தமாகக் காமத்தை
ஊட்டி, செவ்விய ஆடையால் வெளித் தோன்றவே (பகிரங்கமாக)
இடையைச் சீர்படுத்தி, இசைப் பாட்டுக்களைக் குழல் போல
இனிமை பொருந்தப் பாடி, மேகத்தைக் கண்ட அழகிய மயிலைப்
போல தமது நடன அருமையைக் காட்டி,

பண்பு உறவே கலையால் முலை மறைத்துச் செம் துவர்
வாய் அமுது ஊறல்கள் அளித்துப் பொன் குயிலாம் எனவே
குரல் மிடறு ஓதை அசைத்து
... ஒழுங்காக ஆடையால் மார்பை
மறைப்பது போல ஜாலம் காட்டி, செவ்விய பவழம் போன்ற வாயிதழின்
அமுதம் போன்ற நீரூற்றைக் குடிக்கச் செய்து, அழகிய குயில்
என்னும்படி குரல் எழக் கண்டத்தில் ஓசையை அசையச் செய்து,

கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கிச் சந்தன வாசனை
சேறுடன் அமைத்துப் பஞ்சு அணை மீது அணை மாதர்கள்
உறவாமோ
... காதோலைகளையும் நிறைந்து, அணி கலன்களையும்
மினுக்கி ஒளி பெறச் செய்து, சந்தன நறு மணக் கலவையுடன்
அலங்கரித்து, பஞ்சு மெத்தையின் மீது சேர்கின்ற பொது மகளிரின்
உறவு எனக்குத் தகுமோ?

இரைத்துப் பண்டு அமராவதி வானவர் ஒளித்துக் கந்த
சுவாமி பராபரம் எனப் பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள் பட
அசுரார்கள் இறக்க
... பெரும் இரைச்சலுடன் முன்பு பொன்னுலகத்தில்
இருந்த தேவர்கள் (மேரு மலையில்) ஒளித்திருந்து, கந்த சுவாமியே,
மேலாம் பொருளே என்று முறையிட, அஷ்ட திக்குகளிலும் உள்ள
மலைகளும் பொடிபடவும், ஏழு கடல்களும் தூள்படவும், அசுரர்கள்
இறந்துபடவும்,

சிங்கம் தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள்
கூளியொடு இரத்தச் சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா
...
சிங்கங்கள் பூட்டப்பட்ட தேர்கள், குதிரைகளும், யானைகளும்
போர்க்களத்தில் உறுப்புக்கள் சிதறுண்டு வீழ, செந்நிறக் கழுகுகள்,
நரிகள், பேய்களோடு ரத்த வெள்ளத்தில் விளையாட வேலாயுதத்தைச்
செலுத்திய மயில் வீரனே,

சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்துக் கண்ட
கபாலியர் பால் உறை திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி
நல்கிய சேயே
... சிரித்து அழகிய திரி புரத்தையும் மன்மதனுடைய
உடலையும் எரி செய்த, கபாலத்தை ஏந்தும் சிவபெருமானுடைய பக்கத்தில்
இருக்கின்ற பொலிவு நிறைந்த அழகு மிக்க சிவகாமி பெற்ற செல்வக்
குழந்தையே,

திருச் சித்தம் தனிலே குற மான் அதை இருத்திக் கண் களி
கூர் திகழ் ஆடக திருச் சிற்றம்பலம் மேவி உலாவிய
பெருமாளே.
... உனது அழகிய உள்ளத்தில் குறப் பெண்ணாகிய
வள்ளியை இருத்தி கண்ணால் மகிழ்ச்சி அடைந்து, புகழ் மிக்க
பொன்கூரை வேய்ந்த பொன்னம்பலத்தே விரும்பி உலவும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.385  pg 2.386  pg 2.387  pg 2.388 
 WIKI_urai Song number: 600 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 459 - siriththuch changkoLi (chidhambaram)

chiriththuc changoLi yAmina lAmena
     vurukkik kongaiyi nAluRa mElvizhu
          seNaththiR champaLa mEpaRi kArikaL ...... silapEraic

chimittik kaNkaLi nAluRa vEmayal
     pukattic chenthuki lAlveLi yAyidai
          thiruththip paNkuzha lEymuki lOviya ...... mayilpOlE

arukkip paNpuRa vEkalai yAlmulai
     maRaiththuc chenthuvar vAyamu thURalka
          LaLiththup ponkuyi lAmena vEkural ...... midaROthai

asaiththuk konthaLa vOlaika LArpaNi
     minukkic chanthana vAsanai chERuda
          namaiththup panjaNai meethaNai mAtharka ...... LuRavAmO

iraiththup paNdama rAvathi vAnava
     roLiththuk kanthasu vAmipa rApara
          menappat teNkiri Ezhkadal thULpada ...... asurArkaL

iRakkac chingama thErpari yAnaiyo
     duRuppiR chengazhu kOrikaL kULiyo
          diraththac changama thAdida vElvidu ...... mayilveerA

chiriththit tampura mEmatha nAruda
     leriththuk kaNdaka pAliyar pAluRai
          thikazhppoR chunthari yALsiva kAminal ...... kiyasEyE

thiruchchith thanthani lEkuRa mAnathai
     yiruththik kaNkaLi kUrthika zhAdaka
          thiruchchit Rampala mEviyu lAviya ...... perumALE.

......... Meaning .........

chiriththuc changu eLiyAm mi(n)nalAm ena urukkik kongaiyinAl uRa mEl vizhu seNaththil sampaLamE paRi kArikaL: When they laugh, they display their shining teeth that look like the white conch-shell or the flash of the lightning; with that dazzle, they melt the hearts of their suitors; then, they press tightly with their bosom and at that very moment, they grab the money of their suitors.

sila pEraic chimittik kaNkaLinAl uRavE mayal pukattic chem thukilAl veLiyAy idai thiruththip paN kuzhal Ey mukil Oviya mayil pOlE arukki: With the wink of their eyes, they beckon some men and give them a strong dose of passion; they openly show off their attire exposing their waistline; they sing melodious songs sounding like the flute and demonstrate their rare skill of dancing like the beautiful peacock that is elated by the black cloud.

paNpu uRavE kalaiyAl mulai maRaiththuc chem thuvar vAy amuthu URalkaL aLiththup pon kuyilAm enavE kural midaRu Othai asaiththu: They make a big fuss as though they are properly covering their bosom with the sari; they make their suitors imbibe the nectar-like saliva oozing like a fountain from their lips that look like the reddish coral; they raise crooning sounds from their throat like that of the pretty cuckko;

konthaLa OlaikaL Ar paNi minukkic chanthana vAsanai sERudan amaiththup panju aNai meethu aNai mAtharkaL uRavAmO: They fill their ear-lobes with studs; they shake their ornaments in a showy manner, adorn themselves by smearing the fragrant paste of sandalwood and then they make love upon the cotton mattress; is a liaison with such whores an appropriate one for me?

iraiththup paNdu amarAvathi vAnavar eLiththuk kantha suvAmi parAparam enap pattu eNkiri Ezh kadal thUL pada asurArkaL iRakka: Once, the celestials who lived in their golden land assembled secretly (in Mount MEru) and implored You very loudly beseeching "Oh Lord KanthA! Oh Supreme Lord! (Save us)"; shattering the mountains in the eight directions to pieces, raising dust in the seven seas and killing all the demons,

singam thEr pari yAnaiyodu uRuppil sem kazhuku orikaL kULiyodu iraththac changamathu Adida vEl vidu mayil veerA: scattering all over the battlefield the parts of chariots drawn by the lions, the horses and the elephants that were all smashed, their organs being devoured by reddish eagles, foxes and fiends having a heyday playing in the flood of blood, You wielded Your spear, Oh Lord mounting the Peacock!

chiriththittu am puramE mathanAr udal eriththuk kaNda kapAliyar pAl uRai thikazh pon sunthariyAL sivagAmi nalkiya sEyE: He laughed and burnt down the beautiful Thiripuram as well as the body of Manmathan (God of Love); He holds a skull in His hand; on the left side of that Lord SivA's body is concorporate the beautiful mother SivagAmi (PArvathi); and You are Her prosperous child, Oh Lord!

thiruc chiththam thanilE kuRa mAn athai iruththik kaN kaLi kUr thikazh Adaka thiruc chiRRampalam mEvi ulAviya perumALE.: In Your lovely heart You have placed VaLLi, the damsel of the KuRavAs, expressing Your elation through Your eyes, Oh Lord! You roam about with relish in Chidhambaram whose temple has been thatched with famous and golden tiles, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 459 siriththuch changkoLi - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]