திருப்புகழ் 460 தத்தையென்று  (சிதம்பரம்)
Thiruppugazh 460 thaththaiyenRoppidu  (chidhambaram)
Thiruppugazh - 460 thaththaiyenRoppidu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
     தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
          தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான

......... பாடல் .........

தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர்
     பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்
          சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ...... யென்பநீலச்

சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ
     டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்
          சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர்

சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்
     முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்
          சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ...... விஞ்சையோர்பால்

தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை
     விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு
          துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...... யெந்தநாளோ

குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
     பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்
          கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி ...... கொண்டவேலா

கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
     பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி
          கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ...... மங்கைபாலா

சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
     செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி
          சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு ...... மெங்கள்கோவே

சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
     ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்
          தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் ... கிளி
என்று ஒப்புமை சொல்லத் தக்கவராய், மயில் போன்று நடனம்
செய்பவர்கள்.

பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் சச்சை அம்
கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப
... அம்பு போன்ற
கண்ணும் நீருண்ட மேகத்தை ஒத்த கூந்தலும், சப்திக்கும் காற்
சதங்கையும் தாள ஒத்துப் போல ஒலி செய்யும் பாவை எனக்
கூறத் தக்கவர்.

நீலச் சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு
ஒற்றி நன் சித்திரம் போல எத்தும் பறியர்
... நீல நிறமுள்ள
சக்கரவாகப் புள், பொன்னாலாகிய குடம் இவற்றைப் போலிருந்து, பால்
கொண்டதாயுள்ள மார்பினைக் கொண்டு தழுவி, நல்ல ஓவியம் போல
இருந்து வஞ்சித்து, பொருளைப் பறிப்பவர்கள்.

சக் க(ள்)ளம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர்
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர்
... முழுப் பொய்யைப்
பரிகாசத்தினால் சாதிக்கின்ற, துக்கம் தரும் கொலைத் தொழிலைச்
செய்பவர்கள். அழகிய விலைமாதர்கள். தம் வசத்தில் சுழலும்படியான
பித்து ஏற்றுகின்ற சூதினைக் கற்ற சதிகாரிகள்.

முன் பணம் கைக் கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர்
சொக்கி இடும்புக் கடன் சேரு மட்டும் தனகும் விஞ்சையோர்
பால்
... முன்னதாகப் பணத்தைக் கையில் கொண்டு செலுத்தும் யார்
மீதும் தமது விருப்பத்தைச் செலுத்துபவர்கள். மயங்கும்படியான அகந்தை
வார்த்தைகளைச் சொல்லி பொருள் சேரும் வரையில் நட்பினைக் காட்டும்
மாய வித்தைக்காரர்களிடத்தே,

தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும்
துக்கமும் சீத பித்தங்கள் கொடு துப்பு அடங்கிப் படும்
சோரனுக்கும் பதவி எந்த நாளோ
... நெருங்கிக் கூடி வருகின்ற
வாந்தியும், சூலை நோயும், விலாப் பக்கத்தில் வரும் ராஜபிளவைக்
கட்டியும், விக்கலும், துக்கமும், சீத மலம், பித்தம் ஆகிய நோய்களைக்
கொள்வதால், வலிமை குன்றி அழிந்து படும் இந்தக் கள்வனுக்கும்
(சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ய எனப்படும்) சிவலோக இன்பப்
பதவிகள்* கிடைப்பது எப்போதோ?

குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு
எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் கொற்றமும்
கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா
... வஞ்சகம் கற்ற
சண்டாளர் ஆகிய ஏழு மலைகளும் பொடிபட்டு நின்று குலைய,
எட்டுத் திக்குப் பாலகர்களும் உனது வீரத்தைப் புகழ் மாலையாகப்
பாட, நடனமாகிய கூத்துக்களைக் கொண்ட வேலனே,

கொற்றர் பங்கு உற்ற சிந்தாமணிச் செம் குமரி பத்தர்
அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி கொட்(கு) புரம்
தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா
...
வெற்றியாளராகிய சிவபெருமானது இடது பக்கத்தில் உள்ள சிந்தாமணி
போன்றவள், செவ்விய குமரி, பக்தர்கள் அன்பு கொண்ட எமது தாய்,
அழகு கொஞ்சும் கிளி, சுழன்று திரியும் திரி புரங்கள் எல்லாம் வெந்து
குலைய வைத்த நெருப்புக் கண்ணை உடைய பார்வதி தேவியின் புதல்வனே,

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று
எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி சில் சிதம் பொன் புயம்
சேர முற்றும் புணரும் எங்கள் கோவே
... விசித்திரமான அழகிய
குறப் பெண்ணாகிய வள்ளி அருகில் சென்று சேர வளைச் செட்டி வடிவு
எடுத்து ஏமாற்றி வந்து விளையாடல்கள் செய்து கூத்துக்கள் புரிந்து,
நுண்ணிய ஞானத்தவளாகிய அந்த வள்ளி உனது அழகிய
தோள்களைச் சேர, அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவனே,

சிற் பரன் தற்பரன் சீர் திகழ்த் தென் புலியூர் ருத்திரன்
பத்திர அம் சூல(ம்) கர்த்தன் சபையில் தித்தி என்று ஒத்தி
நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே.
... ஞானபரன், பரம்
பொருள், சீர் விளங்கும் அழகிய சிதம்பரத்தில் விளங்கும் ருத்திர மூர்த்தி,
இலைகளை உடைய சூலாயுதத்தைக் கொண்ட தலைவன்,
பொன்னம்பலத்தில் தித்தி என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடனம்
செய்யும் நடராஜப் பெருமானது தம்பிரானே.


* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.387  pg 2.388  pg 2.389  pg 2.390  pg 2.391  pg 2.392 
 WIKI_urai Song number: 601 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 460 - thaththaiyendRu (chidhambaram)

thaththaiyen Roppidun thOkainat tangkoLuvar
     paththirang katkayang karaiyop punguzhalkaL
          sacchaiyang kecchaiyun thALavoth thumpathumai ...... yenpaneelac

chakkaram poRkudam pAliruk kunthanamo
     dotRinan chiththiram pOlaeth thumpaRiyar
          sakkaLanj chakkadanj chAthithuk kangkolaiyar ...... sangamAthar

suththidum piththidum cUthukaR kumchathiyar
     muRpaNang kaikkodun thArumit tangkoLuvar
          chokkidum pukkadan sErumat tunthanakum ...... vinjaiyOrpAl

thokkidung kakkalunj cUlaipak kampiLavai
     vikkalun thukkamum seethapith thangaLkodu
          thuppadang kippadunj chOranuk kumpathavi ...... yenthanALO

kuththirang katRasaN dALarsath thangkuvadu
     pottezhun thittunin RAdaet tanthikaiyar
          kotRamung kattiyam pAdanirth thampavuri ...... koNdavElA

kotRarpang kutRasin thAmaNic chengkumari
     paththaran putRaen thAyezhiR konjukiLi
          kotpuran thokkaven thAdavit tangivizhi ...... mangaipAlA

chiththiram poRkuRam pAvaipak kampuNara
     chettiyen Reththivan thAdinirth thangaLpuai
          chiRchitham poRpuyanj chEramut RumpuNaru ...... mengaLkOvE

chiRparan thaRparan seerthikazhth thenpuliyur
     ruththiran paththiranj cUlakarth thansapaiyil
          thiththiyen Roththinin RAduchit Rampalavar ...... thambirAnE.

......... Meaning .........

thaththai enRu oppidum thOkai nattam koLuvar: With their looks comparable to a parrot, these women dance like the peacock.

paththiram kaN kayal kAri oppum kuzhalkaL sacchai am kecchaiyum thALa oththum pathumai enpa: With arrow-like eyes and hair resembling rain-bearing cloud, these statuette-like women have lilting anklets that give out sound in measured beats.

neelac chakkaram pon kudam pAl irukkum thanamodu otRi nan chiththiram pOla eththum paRiyar: Their milk-bearing bosom looks like the blue krouncha bird and like a golden pot with which they hug (their suitors) tightly. These pretty women appearing as if they came off a painting deceive and grab money.

chak ka(L)Lam chakkadam sAthi thukka kolaiyar sanga mAthar suththidum piththidum cUthu kaRkum sathiyar: They establish a blatant lie as truth through their insistence. These beautiful whores are capable of murder causing misery. These treacherous women make the men reel under their influence by pumping delusory passion into them.

mun paNam kaik kodu unthu Arum ittam koLuvar chokki idumpuk kadan sEru mattum thanakum vinjaiyOr pAl: They show their liking to whoever is able to advance money in their hand. They speak very haughty words that entice the suitors and cast a magic spell by showing affection until the desired amount of money is tendered.

thokkidum kakkalum cUlai pakkam piLavai vikkalum thukkamum seetha piththangaL kodu thuppu adangip padum chOranukkum pathavi entha nALO: Afflicted by bouts of vomitting, venereal disease, virulent carbuncle on the sides of the chest, miserable hiccups, dysentery, biliousness and a host of other ailments, this wicked thief (namely, myself) is so much debilitated. When will be the day when the various status of heavenly bliss* will be granted to me?

kuththiram katRa saNdALar saththa am kuvadu pottu ezhunthittu ninRu Ada ettu am thikaiyar kotRamum kattiyam pAda nirththam pavuri koNda vElA: As the seven debased and treacherous mountains were smashed to pieces and the protectors of the eight cardinal directions sang hymns extolling Your valour, You resorted to several victory dances, Oh Lord with the spear!

kotRar pangu utRa sinthAmaNic chem kumari paththar anputRa em thAy ezhil konju kiLi kot(ku) puram thokka venthu Adavittu angi vizhi mangai pAlA: She is like the wish-yielding Divine Gem (ChinthAmaNi) concorporate on the left side of the triumphant Lord SivA; She is the most virtuous damsel; She is our Mother enjoying the love of Her devotees; She is like a beautiful parrot; She possesses the fiery eyes that burnt down the revolving and flying Thiripuram; and You are the son of that Goddess PArvathi!

chiththiram pon kuRam pAvai pakkam puNara chetti enRu eththi vanthu Adi nirththangaL puri chil chitham pon puyam sEra mutRum puNarum engaL kOvE: To stay very close to the wonderful and beautiful damsel of the KuRavAs, You assumed the disguise of a bangle-merchant and played a number of deceptive games with her and danced about; when that VaLLi, known for her sharp intelligence, hugged Your shoulders, You took her over and united with her completely, Oh Lord!

chiR paran thaRparan seer thikazhth then puliyUr ruththiran paththira am cUla(m) karththan sapaiyil thiththi enRu oththi ninRu Adu chitRampalavar thambirAnE.: He is the Supreme Knowledge, the greatest principle and the Lord Rudra presiding at the beautiful and prosperous shrine Chidhambaram; He is the leader holding the trident with three distinct leaves; He is Lord NadarAjar dancing on the golden stage to the beat of "thiththi"; and You are the Master of that Lord SivA, Oh Great One!


* The four methods of worship are:

1.  sariyai:  Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'.

2.  kiriyai:  Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'.

3.  yOgam:  Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'.

4.  gnAnam:  Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 460 thaththaiyen Roppidu - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]