திருப்புகழ் 458 கதித்துப் பொங்கலு  (சிதம்பரம்)
Thiruppugazh 458 kadhiththuppongalu  (chidhambaram)
Thiruppugazh - 458 kadhiththuppongalu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத்தம் தனத்தத்தத்
     தனத்தத்தம் தனத்தத்தத்
          தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான

......... பாடல் .........

கதித்துப்பொங் கலுக்கொத்துப்
     பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
          கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின்

கழுத்தைப்பண் புறக்கட்டிச்
     சிரித்துத்தொங் கலைப்பற்றிக்
          கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர்

பதித்துத்தந் தனத்தொக்கப்
     பிணித்துப்பண் புறக்கட்டிப்
          பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப்

பறித்துப்பின் துரத்துச்சொற்
     கபட்டுப்பெண் களுக்கிச்சைப்
          பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ

கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
     கொதித்துச்சங் கரித்துப்பற்
          கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக்

கழித்துப்பண் டமர்க்குச்செப்
     பதத்தைத்தந் தளித்துக்கைக்
          கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா

சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
     கயத்தைச்சென் றுரித்துத்தற்
          சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ்

செவிக்குச்செம் பொருட்கற்கப்
     புகட்டிச்செம் பரத்திற்செய்த்
          திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கதித்துப் பொங்கு அ(ல்)லுக்கு ஒத்துப் பணைத்துக் கொம்பு
எனத் தெற்றிக் கவித்துச் செம் பொ(ன்)னைத் துற்றுக்
குழலார்
... நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச்
செழிப்புற்று, கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய
சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய
விலைமாதர்களின்

பின் கழுத்தைப் பண்புறக் கட்டிச் சிரித்துத் தொங்கலைப்
பற்றிக் கலைத்துச் செம் குணத்தில் பித்து இடு மாதர் பதித்து
...
பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும், தொங்கும்
ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப்
பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப்
பதித்து,

தம் தனத்து ஒக்கப் பிணித்துப் பண்புறக் கட்டிப் பசப்பிப்
பொன் தரப் பற்றிப் பொருள் மாளப் பறித்துப் பின் துரத்துச்
சொல் கபட்டுப் பெண்களுக்கு இச்சைப் பலித்துப் பின்
கசுத்திப் பட்டு உழல்வேனோ
... தாம் பெற்ற பொருளுக்குத்
தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து இன்முகம் காட்டி
ஏய்த்தும், பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப்
போகுமளவும் கைப்பற்றி, பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை
உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு, பின்னர்
வருத்தத்தை அடைந்து திரிவேனோ?

கதித்துக் கொண்டு எதிர்த்துப் பின் கொதித்துச் சங்கரித்துப்
பல் கடித்துச் சென்று உழக்கித் துக்க அசுரோரைக் கழித்து
...
விரைந்து எழுந்து எதிர்த்து, பிறகு கோபம் கொண்டு அழித்து, பற்களைக்
கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை
ஒழித்து,

பண்டு அமர்க்குச் செம் பதத்தைத் தந்து அளித்துக் கைக்கு
அணிக் குச்சம் தரத்து ஐச் சுத்த ஒளிர் வேலா
... முன் ஒரு நாளில்
தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி, கையில் அலங்காரமாக
அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக
ஒளி விடும் வேலை ஏந்தியவனே,

சிதைத்திட்டு அம்புரத்தைச் சொல் கயத்தைச் சென்று
உரித்துத் தன் சினத் தக்கன் சிரத்தைத் தள் சிவனார்தம்
...
அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த
யானையிடம் சென்று அதன் தோலை உரித்து, தான் என்னும்
அகங்காரம் கொண்ட தக்ஷன் தலையை அறுத்துத் தள்ளிய
சிவபெருமானுடைய

செவிக்குச் செம் பொருள் கற்கப் புகட்டிச் செம் பரத்தில் செய்த்
திருச்சிற்றம்பலச் சொக்கப் பெருமாளே.
... திருச்செவிக்குள்
பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி, செவ்விய மேலான
வகையில் அமைந்த திருச் சிற்றம்பலத்தில் (சிதம்பரத்தில்)
எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.381  pg 2.382  pg 2.383  pg 2.384 
 WIKI_urai Song number: 599 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 458 - kadhiththup pongalu (chidhambaram)

kathiththuppong kalukkoththup
     paNaiththukkom penaththetRik
          kaviththucchem ponaiththutRuk ...... kuzhalArpin

kazhuththaippaN puRakkattic
     chiriththuththong kalaippatRik
          kalaiththuccheng kuNaththiRpith ...... thidumAthar

pathiththuththan thanaththokkap
     piNiththuppaN puRakkattip
          pasappippon tharappatRip ...... poruLmALap

paRiththuppin thuraththucchoR
     kapattuppeN kaLukkicchaip
          paliththuppin kasuththippat ...... tuzhalvEnO

kathiththukkoN dethirththuppiR
     kothiththucchang kariththuppaR
          kadiththucchen Ruzhakkiththuk ...... kasurOraik

kazhiththuppaN damarkkucchep
     pathaththaiththan thaLiththukkaik
          kaNikkucchan tharaththaicchuth ...... thoLirvElA

sithaiththittam puraththaicchoR
     kayaththaicchen RuriththuththaR
          chinaththakkan siraththaiththat ...... sivanArtham

chevikkucchem porutkaRkap
     pukatticchem paraththiRcheyth
          thiruchchitRam palacchokkap ...... perumALE.

......... Meaning .........

kathiththup pongku a(l)lukku oththup paNaiththuk kompu enath thetRik kaviththuc chem po(n)naith thutRuk kuzhalAr: These whores have thickly braided hair that is effusive, resembling pitch-black darkness, plaited into a tress like a horn, and adorned with an inverted golden and rounded hair-brooch (jadaipillai);

pin kazhuththaip paNpuRak kattic chiriththuth thongkalaip patRik kalaiththuc chem kuNaththil piththu idu mAthar pathiththuth: I have been chasing them, hugging their neck tightly with a hearty laugh, pulling the outer end of their sari and loosening it and setting my heart emphatically on these whores who are capable of converting my virtuous behaviour into madness;

tham thanaththu okkap piNiththup paNpuRak kattip pasappip pon tharap patRip poruL mALap paRiththup pin thuraththuc chol kapattup peNkaLukku icchaip paliththup pin kasuththip pattu uzhalvEnO: commensurate with the money they have received, these whores ensnare their suitors, hug them tightly with a pleasant face and then ditch them, grabbing whatever gold that is offered, seizing their entire belongings and chasing them away with harsh words; falling for these treacherous whores crazily, am I destined to roam about later in misery?

kathiththuk koNdu ethirththup pin kothiththuc changkariththup pal kadiththuc chenRu uzhakkith thukka asurOraik kazhiththu: Rising swiftly and fiercely, You marched ahead in confrontation, destroying angrily with gnawing teeth, and stirred up the sea of the enemy's army, killing all the demoralised demons;

paNdu amarkkuc chem pathaththaith thanthu aLiththuk kaikku aNik kuccham tharaththu aic chuththa oLir vElA: once upon a time, You restored the glorious status to the celestials; You hold in Your hallowed hand the beautiful, scary, pure and dazzling spear that shines like an ornament decorated with a pretty colourful flower-bunch on its staff, Oh Lord!

sithaiththittu ampuraththaic chol kayaththaic chenRu uriththuth than sinath thakkan siraththaith thaL sivanArtham: He destroyed the beautiful kingdom of Thiripuram; He fought with the famous elephant-demon (kayAsuran) and peeled off his hide; He severed away the head of the egoistic and arrogant king, Thakshan; and He is Lord SivA;

sevikkuc chem poruL kaRkap pukattic chem paraththil seyth thiruchchitRampalac chokkap perumALE.: into His ears, You preached the meaning of the PraNava ManthrA making it lucid for Him to comprehend, and You are seated in this famous and exalted town of Chidhambaram, Oh Great and Handsome One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 458 kadhiththup pongalu - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]