பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 377 மதிக்கத்தக்க கடப்பமாலை அணிந்த தோள்களும் அழகிய பொன்முடியும், அழகிய கண்டாரால் விரும்பப்படும். திருவடித் தாமரையும் என்றன் முன்பு முற்பட, நீ) தோன்றி உன்னுடைய திருவுள்ளத்தைத் தந்தருளுக (என்னைக் கண்பார்த்தருளுக) (அல்லது) உன்னை நினைக்கும்படியான சிந்தையை உள்ளத்தைத் தந்தருளுக. விண்ணிலுள்ளோர் பிரமித்து ஒட, (விஞ்சையர்கள்) வித்யாதரர்கள் மனக்கவலையுடன் ஒட, கந்தருவரும், பிரமனும் மனம் சோர்வடைந்து ஒட, எட்டுத் திசையிலும் பரந்த பூமியை உண்ட திருமால். அச்சமுற்று உனது திருவடிச் சேவையைத் தந்து (காத்தருளுக) என்று கூற, (எதிர்த்து) வந்த கொடிய கோபத்தினராகிய அசுரர்களின் காடுபோன்ற பெருங் கூட்ட்ம் எரிபட்டுவிழ நெருப்பின் தன்மையைக் கொண்ட அம்பினைச் செலுத்திவிட்ட செங்கை வேலனே! யானையின் பருத்த கொம்புபோன்ற கொங்கைகளை உடைய குறமங்கை (வள்ளி) (இன்புற) மகிழும்படி அவளது தோள்களை அணைந்து (உருக) நின்று - உருகி, (சிந்துரம் தனை) யானை (வளர்த்த) மகளாம் தேவசேனையைச் சிறப்புடன் திருமணம் செய்துகொண்ட நல்ல கந்தவேளே. (சிந்திமுன் புரக்காடு மங்க) முன் புரக்காடு சிந்திமங்க . முன்பு திரிபுரங்கள் என்னும் காடு சிதறுண்டு அழிய சிரிப்பிற் கொண்ட பெரு நெருப்பை ஏவின அழகர், (அல்லது சிரித்த செவ்விய நெருப்பு உருவத்தினர்), தேவர்கள் புகழும் (அம்பலவர்), செம்பொன் அம்பலத்திலே திருநடனம் புரியும் அம்பலவர் ஆகிய சிவபிரானுக்குத் தம்பிரான்ே! (உன் தனது சிந்தை தாராய்) 599. நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமானமாகி, செழிப்புற்று, கொம்புபோல ஜடையாகப் பின்னப்பட்டு, (கவித்து செம்பொனை) செம்பொன்னாலாய ஜடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய மாதர்களின் பின்சென்று (அல்லது அவர்தம் பின்புறத்தே)