திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 438 முகத் துலக்கிகள் (திருவருணை) Thiruppugazh 438 mugaththulakkigaL (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்த தத்தன தானா தனதன தனத்த தத்தன தானா தனதன தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான ......... பாடல் ......... முகத்து லக்கிக ளாசா ரவினிகள் விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள் முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் ...... முந்துசூது மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ முயற்று பொட்டிகள் மோகா வலமுறு ...... கின்றமூடர் செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள் திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள் சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ...... சிந்தைமாயத் திரட்பொ றிச்சிகள் மாபா விகளப கடத்த சட்டைகள் மூதே விகளொடு திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி ...... யென்றுசேர்வேன் தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு ...... தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ எனவொரு துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் ...... தொணடர்பேணும் அகத்தி யப்பனு மால்வே தனும்அறம் வளர்த்த கற்பக மாஞா லியுமகி ழவுற்ற நித்தபி ரானே அருணையில் ...... நின்றகோவே அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ முறித்து ழக்கிய வானோர் குடிபுக அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... முக(ம்) துலக்கிகள் ஆசார இ(ஈ)னிகள் விலைச் சிறுக்கிகள் நேரா அசடிகள் முழுச் சமர்த்திகள் காமா விரகிகள் ... முகத்தை மினுக்குபவர். ஆசாரத்தில் குறை உள்ளவர்கள். (உடல் நலத்தை) விலைக்கு விற்கும் சிறுக்கிகள். (அன்பு) பொருந்துதல் இல்லாத மூடர்கள். முழு சாமர்த்தியம் வாய்ந்தவர்கள். காம லீலை புரியும் தந்திரசாலிகள். முந்து சூது மொழிப் பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவ(ம்) முயற்று பொட்டிகள் மோக அவலம் உறுகின்ற மூடர் ... சூதான எண்ணம் முற்பட்டு நிற்கும் சொற்களை உடைய பொது மகளிர். காசின் மேல் உள்ள ஆசையால் மார்பினைப் பலருக்கும் விற்பவர்கள். பலவிதமான அனுபோக நுகர்ச்சிகளில் ஊக்கம் கொண்டுள்ள வேசிகள். காம மயக்கத்தால் துன்பம் அடையும் முட்டாள்கள். செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள் திருட்டு மட்டைகள் மாயா சொரூபிகள் சிரித்து உருக்கிகள் ஆகா என நகை சிந்தை மாயத் திரள் பொறிச்சிகள் மா பாவிகள் ... இப்பூமியில் வஞ்சிப்பவர்கள். நம் பக்கம் சார்ந்த நட்பினர் போலிருந்து மயக்குபவர்கள். திருட்டுத்தனம் கொண்ட பயனிலிகள். மாயையே ஒரு வடிவம் எடுத்து வந்தது போல் இருப்பவர்கள். தங்கள் சிரிப்பினால் மனதை உருக்குபவர்கள். ஆகா என்று பெரிதாகச் சிரித்து உள்ளத்தை மாய்க்கும் முற்றிய தந்திர சாலிகள். பெரிய பாவிகள். அபகடத்த சட்டைகள் மூதேவிகளோடு திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன் ... வஞ்சகம் கொண்டு புறக்கணிப்பவர்கள். (இத்தகைய) மூதேவிகளுடன் நெருங்கிக் கலத்தலை நீக்கி (உனது) இரண்டு அழகிய திருவடிகளை இனி எப்போது அடைவேன்? தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்து குத்திகு தீதோ எனவொரு துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் ... (இவ்வாறான) தாள ஒத்துக்களுடன் ஒப்பற்றதாய்த் தொடங்கும் ஆடலை ஆடி வீற்றிருப்பவர். தொண்டர் பேணும் அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழ் உற்ற நித்த பிரானே அருணையில் நின்ற கோவே ... அடியார்கள் விரும்பும் (அகத்தியரால் பூஜிக்கப்பட்ட) சிவபெருமானும், திருமாலும், பிரமனும், (காஞ்சியில்) அறங்களை வளர்த்த கற்பக விருட்சம் போன்றவளும் (ஆகிய காமாட்சியும்), பூமியில் சிறப்பாகப் பூஜிக்கப் பட்டவளும் (ஆகிய பார்வதியும்) மகிழும்படி இருக்கும் அழிவில்லாத பெருமாளே, திருவண்ணாமலையில் எழுந்தருளும் தலைவனே, அமர்க் களத்து ஒரு சூர ஈசனை விழ முறித்து உழக்கி அ(வ்) வானேர் குடி புக அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே. ... போர்க் களத்தில ஒப்பற்ற சூரர் தலைவனாகிய சூரபத்மன் (மாமரமாக வந்தபோது) விழும்படி முறித்து, மிதித்துக் கொன்று, தேவர்கள் பொன்னுலகுக்குக் குடியேறும்படி வாழவிட்ட சுவாமியே, அடியவரின் தம்பிரானே. |
இப்பாடலின் முதல் 12 வரிகள் வேசையரின் இயல்பை வருணிக்கின்றன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.327 pg 2.328 pg 2.329 pg 2.330 WIKI_urai Song number: 579 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 438 - mugath thulakkigaL (thiruvaNNAmalai) mukaththu lakkika LAsA ravinikaL vilaicchi RukkikaL nErA vasadikaL muzhuccha marththikaL kAmA virakikaL ...... munthucUthu mozhippa raththaikaL kAsA saiyilmulai palarkkum viRpavar nAnA vanupava muyatRu pottikaL mOkA valamuRu ...... kinRamUdar sekaththi leththikaL sArvAy mayakikaL thiruttu mattaikaL mAyA sorupikaL siriththu rukkikaL AkA venanakai ...... sinthaimAyath thiratpo RicchikaL mApA vikaLapa kadaththa sattaikaL mUthE vikaLodu thiLaiththa latRiru seerpA thamumini ...... yenRusErvEn thokuththo kuththoku thOthO thokuthoku sekucche kuccheku sEsE sekakaNa thokuththo kuththoku thOthO thokuthoku ...... thonthatheethO thuduttu duttudu dUdU dudududu thikuththi kuththiku theethO enavoru thuvakka nirththana mAdA vuRaipavar ...... thoNadarpENum akaththi yappanu mAlvE thanumaRam vaLarththa kaRpaka mAnjA liyumaki zhavutRa niththapi rAnE aruNaiyil ...... ninRakOvE amarkka Laththoru cUrE sanaivizha muRiththu zhakkiya vAnOr kudipuka amarththi vittasu vAmee adiyavar ...... thambirAnE. ......... Meaning ......... muka(m) thulakkikaL AsAra i(ee)nikaL vilais siRukkikaL nErA asadikaL muzhus samarththikaL kAmA virakikaL: These women apply make-up profusely on their face. They lack conventional discipline. These base women sell their body for a price. They are foolish and are devoid of true love. They are totally devious and manipulative. They are tricksters capable of many an act of passion. munthu cUthu mozhip paraththaikaL kAsu Asaiyil mulai palarkkum viRpavar nAnA anupava(m) muyatRu pottikaL mOka avalam uRukinRa mUdar: The words of these whores betray their treachery. Propelled by greed for money, they sell their bosom to many men. These whores are enthusiastic in experiencing a variety of carnal pleasures. Due to their obsessive passion, these stupid women eventually come to grief. sekaththil eththikaL sArvAy mayakkikaL thiruttu mattaikaL mAyA sorUpikaL siriththu urukkikaL AkA ena nakai sinthai mAyath thiraL poRicchikaL mA pAvikaL: They are born on this earth only to deceive. Pretending to be our close ally, they cast a magic spell. These useless women are full of thievery. They are a personification of delusion. They are capable of melting others' heart by their mere smile. Laughing very loudly, these cunning women blow off the mind of their suitors. They are the worst sinners. apakadaththa sattaikaL mUthEvikaLOdu thiLaiththal atRu iru seer pAthamum ini enRu sErvEn: These women are so deceitful that they mercilessly throw their suitors away. When will I avoid my close liaison with these impish Goddesses of adversity (mUthEvi) and attain Your two hallowed feet? thokuththo kuththoku thOthO thokuthoku sekucche kuccheku sEsE sekakaNa thokuththo kuththoku thOthO thokuthoku thonthatheethO thuduttu duttudu dUdU dudududu thikuththu kuththiku theethO enavoru thuvakka nirththanam AdA uRaipava: He rests after dancing to the matchless meter that begins as "thokuththo kuththoku thOthO thokuthoku sekucche kuccheku sEsE sekakaNa thokuththo kuththoku thOthO thokuthoku thonthatheethO thuduttu duttudu dUdU dudududu thikuththu kuththiku theethO"; thoNdar pENum akaththiyappanum mAl vEthanum aRam vaLarththa kaRpaka mA njAliyum makizh utRa niththa pirAnE aruNaiyil ninRa kOvE: He is Lord SivA earnestly sought after by His devotees and worshipped by Sage Agasthiyar; along with Him, Lord VishNu, Brahma and Mother KAmAkshi (PArvathi) who is like the wish-yielding KaRpaga tree and who carried out many charitable acts (in KAncheepuram) and who is worshipped outstandingly on this earth are all exhilarated in Your presence, Oh Immortal and Great One! You are the leader seated in ThiruvaNNAmalai! amark kaLaththu oru cUra eesanai vizha muRiththu uzhakki a(v) vAnEr kudi puka amarththi vitta suvAmee adiyavar thambirAnE.: On the battlefield, the demon SUran, the leader of the matchless warriors, (who came in the disguise of a mango tree) was felled, broken, trodden upon and killed by You, letting the celestials resettle in their golden land, Oh Lord! You are the Great One worshipped by Your devotees! |
The first twelve lines of this song describe the attributes of the whores. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |