திருப்புகழ் 439 மேக மொத்தகுழலார்  (திருவருணை)
Thiruppugazh 439 mEgamoththakuzhalAr  (thiruvaruNai)
Thiruppugazh - 439 mEgamoththakuzhalAr - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தனதான

......... பாடல் .........

மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
     வாளி யொத்தவிழி யார்மு கக்கமல
          மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட

மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
     மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்
          வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர்

தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு
     நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்
          சோர நற்றெருவு டேந டித்துமுலை ...... விலைகூறிச்

சூத கச்சரச மோடெ யெத்திவரு
     வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல்
          தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ

சேக ணச்செகண தோதி மித்திகுட
     டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
          தீத கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை

தேச முட்கவர ஆயி ரச்சிரமு
     மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்
          தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ...... விடும்வேலா

ஆக மத்திபல கார ணத்தியெனை
     யீண சத்திஅரி ஆச னத்திசிவ
          னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே

ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு
     மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி
          ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மேகம் ஒத்த குழலார் சிலைப் புருவ வாளி ஒத்த விழியார்
முகக் கமல மீது பொட்டு இடு அழகார் களத்தில் அணி
வடம் ஆட மேரு ஒத்த முலையார்
... மேகம் போல் கரிய கூந்தல்
உடையவர்கள். வில்லைப் போல வளைந்த புருவம் உடையவர்கள். அம்பு
போன்ற கண்கள் உடையவர். தாமரை போன்ற முகத்தில் பொட்டு
அணிந்த அழகை உடையவர். கழுத்தில் அணிகின்ற மாலை அசைந்தாட
மேரு மலை போன்ற மார்பகத்தை உடையவர்கள்.

பளப்பள என மார்பு துத்தி புயவார் வளைக் கடகம் வீறிடத்
துவளு(ம்) நூலொடு ஒத்த இடை உடை மாதர் தோகை பக்ஷி
நடையார்
... பளபள என்று ஒளி தரும் மார்பில் தேமலும், கையில்
வரிசையாயுள்ள வளையல்களும் கங்கணமும் விளங்க, துவள்கின்ற நூல்
போன்ற நுண்ணிய இடை உடைய மாதர்கள். கலாபப் பட்சியாகிய மயிலை
ஒத்த நடையினர்.

பதத்தில் இடு நூபுரக் குரல்கள் பாட ஆ(அ)கத் துகில்கள்
சோர நல் தெரு உடே நடித்து முலை விலை கூறிச் சூதகச்
சரசம் ஓடே எத்தி
... கால்களில் அணிந்த சிலம்புகளின் ஓசைகள்
ஒலிக்க, உடல் மீதுள்ள ஆடைகள் நெகிழ, நல்ல வீதியின் வழியே
நடனமாடி வந்து, தம் மார்பகங்களை விலைக்கு விற்று, வஞ்சகத்தோடு
காமச் சேட்டைகளைக் காட்டி (ஆடவரை) மோசம் செய்து,

வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல் தூள் மருத்து
இ(ட்)டு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ
... தேடி வருபவர்களை
விரும்பி, கண்களால் மயக்கி காம மயக்கம் தரும் தூள் மருந்தை உண்ணச்
செய்து உயிரைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு எனக்கு
நல்லதாகுமோ?

சேகணச் செகண தோதிமித் திகுட
டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
தீத கத்திமித தோவு டுக்கை மணி முரசு ஓதை
... (சேகணச் - - தோ) இவ்வாறான
ஒலிகளை எழுப்பும் உடுக்கை, மணி, முரசு இவைகளின் ஆரவாரம்
ஓயாமல் ஒலிக்க,

தேசம் உட்க அர ஆயிரச் சிரமும் மூளி பட்டு மக(கா)
மேரு உக்க அவுணர் தீவு கெட்டு முறையோ எனக் கதற
விடும் வேலா
... நாடெல்லாம் அஞ்ச ஆதிசேஷனுடைய ஆயிரம்
தலைகளும் மூளியாகி, பெரிய மேரு மலையும் சிதறுண்டு, அசுரர்கள்
வாழும் தீவுகள் அழிந்து (யாவரும்) முறையோ என்று கதறும்படி
செலுத்திய வேலனே,

ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி
சிவன் ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே
... வேத
ஆகமங்களுக்கு உரியவள், பல காரணங்களுக்கு மூலப் பொருளானவள்,
என்னைப் பெற்றெடுத்த சக்தி, சிம்மாசனம் கொண்டவள்,
சிவபெருமானுடைய உடலில் இடம் கொண்டுள்ள சிவகாமி (என்னும்)
பத்தினி பெற்ற முருகனே,

ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக
சித்ர வ(ள்)ளி ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ்
பெருமாளே.
... பிரமனுக்கு வேதத்தைத் தேடித் தந்த திருமாலின்*
மகளாகிய சிறுமி, (உன் மீது) மோகம் கொண்ட அழகிய வள்ளி
நாயகியின் ஆசை பூண்டு திருவண்ணாமலையில் மகிழ்ந்து
வீற்றிருக்கும் பெருமாளே.


* சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கிக்
கடலுள் மறைந்தான். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடலுள் புகுந்து சோமுகனைக்
கொன்று நூல்களை மீட்டார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.331  pg 2.332 
 WIKI_urai Song number: 580 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 439 - mEga moththakuzhalAr (thiruvaNNAmalai)

mEka moththakuzha lArsi laippuruva
     vALi yoththavizhi yArmu kakkamala
          meethu pottidazha kArka LaththilaNi ...... vadamAda

mEru voththamulai yArpa LappaLena
     mArpu thuththipuya vArva Laikkadakam
          veeRi daththuvaLu nUlo doththaidai ...... yudaimAthar

thOkai pakshinadai yArpa thaththilidu
     nUpu rakkuralkaL pAda kaththukilkaL
          sOra natReruvu dEna diththumulai ...... vilaikURic

cUtha kaccharasa mOde yeththivaru
     vOrai naththivizhi yAlma ruttimayal
          thULma ruththiduyi rEpa Rippavarka ...... LuRavAmO

sEka NacchekaNa thOthi miththikuda
     dAdu duttamada deeku thaththokurthi
          theetha kaththimitha thOvu dukkaimaNi ...... murasOthai

thEsa mutkavara Ayi racchiramu
     mULi pattumaka mEru vukkavuNar
          theevu kettumuRai yOve nakkathaRa ...... vidumvElA

Aka maththipala kAra Naththiyenai
     yeeNa saththiari Asa naththisiva
          nAka mutRasiva kAmi paththiniyin ...... murukOnE

Ara NaRkumaRai thEdi yittathiru
     mAlma katchiRumi mOka chithravaLi
          Asai patRiaru NAsa laththinmakizh ...... perumALE.

......... Meaning .........

mEkam oththa kuzhalAr silaip puruva vALi oththa vizhiyAr mukak kamala meethu pottu idu azhakAr kaLaththil aNi vadam Ada mEru oththa mulaiyAr: Their hair is dark like the black cloud. Their eye-brows are curved like the bows. Their eyes are sharp like the arrow. On their lotus-like face, the decorative mark sits beautifully. With the chain hanging from their neck heaving, they display their prominent bosom that looks like Mount MEru.

paLappaLa ena mArpu thuththi puyavAr vaLaik kadakam veeRidath thuvaLu(m) nUlodu oththa idai udai mAthar thOkai pakshi nadaiyAr: On their shiny chest, the decolorisation of the skin is evident. With the bangles and bracelets neatly arranged in a stack on their arms, these women show their thread-like slender waist that caves in. Their gait is like that of the peacock with a plume of feathers.

pathaththil idu nUpurak kuralkaL pAda A(a)kath thukilkaL sOra nal theru udE nadiththu mulai vilai kURic cUthaka sarasam OdE eththi: With their anklets making a jingling sound and the attire on their body loosening, they come dancing along the nice streets to negotiate a price for their breasts and resort to treacherous and provocative tricks ensnaring the men.

varuvOrai naththi vizhiyAl marutti mayal thUL maruththu i(t)tu uyirE paRippavarkaL uRavAmO: Showing flirtatious affection to their suitors, these women entice them with their eyes and administer potions of seductive passion. These whores grab the lives of their suitors, and how can a liaison with such women do any good to me?

sEkaNac chekaNa thOthimith thikuda dAdu duttamada deeku thaththokurthi theetha kaththimitha thOvu dukkai maNi murasu Othai: The hand-drums, bells and drums made a continuous noise sounding "sEkaNac chekaNa thOthimith thikuda dAdu duttamada deeku thaththokurthi theetha kaththimitha thO";

thEsam utka ara Ayirac chiramum mULi pattu maka(a) mEru ukka avuNar theevu kettu muRaiyO enak kathaRa vidum vElA: the entire world was terrified; the thousand hoods of the Serpent AdhisEshan got blunted; the huge mount MEru was shattered; all the islands where the demons had settled were destroyed, and everyone over there screamed in distress as You wielded Your spear, Oh Lord!

Akamaththi pala kAraNaththi enai eeNa saththi ari Asanaththi sivan Akam utRa sivakAmi paththiniyin murukOnE: She belongs to the VEdAs and their scriptures; She is the Primeval Principle for many causes; She is the powerful Shakthi who gave birth to me; She is endowed with the throne of the lion; She is SivagAmi, concorporate on the left side of Lord SivA; and You are the child delivered by this Virtuous Goddess, Oh MurugA!

AraNaRku maRai thEdi itta thiru mAl makaL siRumi mOka chithra va(L)Li Asai patRi aruNAsalaththin makizh perumALE.: He restored the stolen VEdAs* to Lord Brahma; She is the daughter of that Lord VishNu, who was in deep love with You; desiring to join that beautiful damsel, VaLLi, You came to be seated with relish in ThiruvaNNAmalai, Oh Great One!


* A demon named SOmukan stole the four vEdAs from Lord Brahma and hid himself under the seas. Lord VishNu assumed the incarnation of a huge shark, entered the sea, killed SOmukan and restored the VEdAs to Brahma.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 439 mEga moththakuzhalAr - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]