திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 437 மானை விடத்தை (திருவருணை) Thiruppugazh 437 mAnaividaththai (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான ......... பாடல் ......... மானை விடத்தைத் தடத்தி னிற்கயல் மீனை நிரப்பிக் குனித்து விட்டணை வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை வாளை வனத்துற் பலத்தி னைச்செல மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர் மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும் ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு வூறு முபத்தக் கருத்த டத்தினை யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும் ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு பாதி யையொப்பித் துனிப்ப வத்தற வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ...... தெளியாதோ சான கிகற்புத் தனைச்சு டத்தன சோக வனத்திற் சிறைப்ப டுத்திய தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச் சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல் வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி லானை மதத்துக் கிடக்கு மற்புத சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத் தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர் சூர னைவெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மானை விடத்தைத் தடத்தினில் கயல் மீனை நிரப்பிக் குனித்து விட்டு அணை வாளியை வட்டச் சமுத்திரத்தினை வடி வேலை வாளை வனத்து உற்பலத்தினைச் செல மீனை விழிக்கு ஒப்பெனப் பிடித்து ... மானையும், விஷத்தையும், குளத்தினில் நிரப்பப்பட்ட கயல் மீனையும், (வில்லை) வளைத்துச் செலுத்தி அணையும்படி செய்கின்ற அம்பையும், வட்டமாக வளைந்துள்ள கடலையும், கூர்மையான வேலையும், வாளையும், நீரில் மலர்கின்ற செங்கழுநீரையும், சேல் மீனையும் நிகர் என்று (அவர்களின் கண்களுக்கு) உவமையாகச் சொல்லி, அவர் மாய வலைப் பட்டு இலைத் துடக்கு உழல் மண(ம்) நாறும் ஊன இடத்தைச் சடக்கு எனக் கொழு ஊறும் உபத்தக் கருத் தடத்தினை ஊது பிணத்தை ... அந்த விலைமாதர்களின் மாய வலையில் வசப்பட்டு, அரசிலை போன்றதும், சூதகமாம் துர் நாற்றம் நாறும் ஈனமான இடத்தை, வேகமாகக் கொழுப்பு ஊறுகின்ற ஜன்மேந்திரியமான பெண் குறியாகிய கரு உண்டாகும் இடத்தினை ஆசைப்பட்டு, உடல் வீங்கிப் பிணமாவதை, குண த்ரயத்தொடு தடுமாறும் ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை உபாதியை ஒப்பித்து உ(ன்)னி பவத்து அற ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இப் ப்ரமை தெளியாதோ ... ( த்வம், தாமசம், ராஜதம் என்ற) முக்குணங்களோடு தடுமாறுகின்ற, கெட்டழியும் பொருளாகிய உடலை, நிலை பேறு இல்லாத செத்தை போன்ற ஒரு வேதனையை அலங்கரித்து எப்போதும் காமத்தை நினைத்து, பிறப்பில் மிகவும் மகிழ்ச்சியைக் காட்டி மயங்குகின்ற இம்மயக்கம் தெளியாதோ? சானகி கற்பத் தனைச் சுட தன் அசோக வனத்தில் சிறைப் படுத்திய தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள ... சீதையின் கற்பு தன்னைச் சுட, தனது அசோக வனத்தில் சிறையில் வைத்த சேனைகளைக் கொண்ட அரக்கனாகிய ராவணனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் இறந்தொழியச் செய்தவனும், சாலை மரத்துப் புறத்து ஒளித்து அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு தாரை தனை சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே ... சாலையில் இருந்த மரங்களின் புறத்தில் ஒளிந்திருந்து, வன்மை வாய்ந்த வாலியினுடைய மார்பில் அம்பை எய்து, ஒப்பற்ற தாரையை சுக்கிரீவனுக்குக் கொடுத்தவனுமான ராமபிரானின் மருகனே, சோனை மிகுத்துத் திரள் புனத்தினில் ஆனை மதத்துக் கிடக்கும் அற்புத சோண கிரிச் சுத்தர் பெற்ற கொற்றவ ... விடா மழை அதிகமாகப் பொழிய, செழித்த வயல்களில் யானைகள் மயங்கிக் கிடக்கும் அற்புதமான திருவண்ணாமலையில் பரிசுத்த மூர்த்தியாக விளங்கும் அருணாசலேசுரர் அருளிய வீரனே, மணி நீபத் தோள் கொ(ண்)டு சக்ரப் பொருப்பினைப் பொடியாக நெருக்கிச் செருக் களத்து எதிர் சூரனை வெட்டித் துணித்து அடக்கிய பெருமாளே. ... கடப்ப மாலை அணிந்த தோள் கொண்டு சக்ரவளாக கிரியைப் பொடியாக்கி, நெருங்கி போர்க் களத்தில் எதிர்த்து வந்த சூரனை வெட்டித் துண்டாக்கி அடக்கிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.325 pg 2.326 pg 2.327 pg 2.328 WIKI_urai Song number: 578 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 437 - mAnai vidaththai (thiruvaNNAmalai) mAnai vidaththaith thadaththi niRkayal meenai nirappik kuniththu vittaNai vALi yaivattac chamuththi raththinai ...... vadivElai vALai vanaththuR palaththi naicchela meenai vizhikkop penappi diththavar mAya valaippat tilaiththu dakkuzhal ...... maNanARum Una vidaththaic chadakke nakkozhu vURu mupaththak karuththa daththinai yUthu piNaththaik kuNathra yaththodu ...... thadumARum Usa lainiththath thvamatRa seththaiyu pAthi yaiyoppith thunippa vaththaRa vOkai seluththip pramikku mipramai ...... theLiyAthO sAna kikaRputh thanaicchu daththana sOka vanaththiR chiRaippa duththiya thAnai yarakkaR kulaththa raththanai ...... varumALac chAlai maraththup puRaththo Liththadal vAli yuraththiR charaththai vittoru thArai thanaicchuk rivaRka Liththavan ...... marukOnE sOnai mikuththuth thiratpu naththini lAnai mathaththuk kidakku maRputha sONa kiricchuth tharpetRa kotRava ...... maNineepath thOLko duchakrap poruppi naippodi yAka nerukkic cherukka Laththethir cUra naivettith thuNiththa dakkiya ...... perumALE. ......... Meaning ......... mAnai vidaththaith thadaththinil kayal meenai nirappik kuniththu vittu aNai vALiyai vattac chamuththiraththinai vadi vElai vALai vanaththu uRpalaththinaic chela meenai vizhikku oppenap pidiththu: Comparing these women's eyes to the deer, the poison, the kayal fish filling up the pond, the destructive arrow that is wielded from a well-bent bow, the round-shaped sea, the sharp spear, the sword, the red lilies that blossom in the water and the sEl fish, avar mAya valaip pattu ilaith thudakku uzhal maNa(m) nARum Una idaththaic chadakku enak kozhu URum upaththak karuth thadaththinai Uthu piNaththai: and being entrapped in the magical net cast by these whores, one becomes obsessed with the desire for their genital shaped like the pipal leaf, which is the basest spot with the stench of menstrual discharge and which is the source of reproduction, rapidly secreting mucous substance; the body becomes swollen with that desire and eventually turns into a corpse; kuNa thrayaththodu thadumARum Usalai niththathvam atRa seththai upAthiyai oppiththu u(n)ni pavaththu aRa Okai seluththi pramikkum ip pramai theLiyAthO: the deteriorating body vascillates between the three attributes (namely, tranquility, aggressiveness and sluggishness); adorning that mortal and miserable trash of a body, continuously preoccupied with sensual thoughts, one happily indulges in a delusory pleasure in this birth; will this hallucination ever wear off? sAnaki kaRpath thanaic chuda than asOka vanaththil chiRaip paduththiya thAnai arakkar kulaththar aththanaivarum mALa: As the chastity of the great damsel JAnaki (Seethai) scorched him, he kept her imprisoned in his AshOka forest; he was the evil demon, RAvaNan, with a large army; his entire clan was killed by Him (RAmA); chAlai maraththup puRaththu oLiththu adal vAli uraththil charaththai vittu oru thArai thanai sukrivaRku aLiththavan marukOnE: He hid behind the trees on the roadside to wield an arrow on the strongly-built chest of VAli and handed ThArai, the unique damsel, to Sugreevan; and You are the nephew of that RAmA! sOnai mikuththuth thiraL punaththinil Anai mathaththuk kidakkum aRputha sONa kiric chuththar petRa kotRava: Amidst incessant rains, the elephants lie down in a trance on the fertile fields of this wonderful town, ThiruvaNNAmalai; Lord AruNAchalar (SivA) stands out here as an epitome of purity; and You are His son, Oh Valorous One! maNi neepath thOL ko(N)du chakrap poruppinaip podiyAka nerukkic cheruk kaLaththu ethir cUranai vettith thuNiththu adakkiya perumALE.: With Your shoulders wearing kadappa garland, You smashed Mount ChakravaLAkam to pieces; and the body of the confronting demon SUran, who advanced aggressively on the battlefield, was split into two, and his arrogance was subdued by You, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |