பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப்புகழ் உரை 325 சொற்களை உடைய பொதுமகளிர், காசின்மேல் உள்ள ஆசையினாலே கொங்கையைப் பலருக்கும் விற்பவர்கள், பலவிதமான அனுபோக நுகர்ச்சிகளில் ஊக்கம் கொண்டுள்ள வேசிகள், மோகத்தினால் (காம மயக்கத்தால் துன்பம் அடைகின்ற மூடர்கள். உலகில் வஞ்சிப்பவர்கள், சார்வாய், (நம் பக்கம் சார்ந்த நட்பினர் போலிருந்து) மயக்குபவர்கள், திருடிகள், பயனிலிகள், மாயையே ஒருரு எடுத்து வந்ததுபோல் இருப்பவர்கள், தங்கள் சிரிப்பினாலேயே மனத்தை உருக்குபவர்கள், ஹாஹா என்று நகைத்துத் (தங்களிடம் வந்தவர்களின்) உள்ளத்தை மாய்க்கும் முற்றின தந்திரசாலிகள், மகாபாவிகள், (அபகடத்து அசட்டைகள்) வஞ்சகம் கொண்டு புறக்கணிப்போர், மூதேவிகள் . இத்தகைய பொதுமகளிரொடு நெருங்கிக் கலத்தல் ஒழிந்து உனது இரண்டு சீர்பாதங்களை என்று நான் அடைவேன்; தொகுத்தொ குத்தொகு...... தோதோ தொகுதொகு தொந்ததிதோ துடுட்டு டுட்டுடு. திகுத்தி குத்திகு திதோ என ஒப்பற்றதாய்த் தொடங்கும் ஒரு ஆடலை ஆடி விற்றிருப்பவர், அடியார்கள் விரும்பும் அகத்திசுரனும் (சிவபிரானும்), திருமாலும், பிரமனும் (காஞ்சியில்) அறம் வளர்த்தவளும், கற்பக விருகூடிம் போன்றவளும், சிறந்த ஞாலத்தவளும் (பூமியிற் பூசிக்கப்படுபவளும்) ஆன பார்வதியும் மகிழும்படி இருக்கும் அழிவிலாதவனாகிய பெருமாளே! அண்ணாமலையில் எழுந்தருளும் தலைவனே! போர்க்களத்தில் ஒப்பற்ற சூரர் தலைவனான சூரபத்மன் விழும்படி முறித்துக் கொன்று, அந்த தேவர்கள் (பொன்னு: ற் குடியேறும்படி வாழவிட்ட சுவாமியே! அடியவர் தம்பிரானே! 2. (சீர்பாதமும் இனி என்று சேர்வேன்)