திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 383 பேதக விரோத (திருவருணை) Thiruppugazh 383 pEdhagavirOdha (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தானத் தானதன தானத் தானதன தானத் ...... தந்ததான ......... பாடல் ......... பேதகவி ரோதத் தோதகவி நோதப் பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின் பேதைமையு றாமற் றேதமக லாமற் பேதவுடல் பேணித் ...... தென்படாதே சாதகவி காரச் சாதலவை போகத் தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன் தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற் சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ போதகம யூரப் போதகக டாமற் போதருணை வீதிக் ...... கந்தவேளே போதகக லாபக் கோதைமுது வானிற் போனசிறை மீளச் ...... சென்றவேலா பாதகப தாதிச் சூரன்முதல் வீழப் பாருலகு வாழக் ...... கண்டகோவே பாதமலர் மீதிற் போதமலர் தூவிப் பாடுமவர் தோழத் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... பேதகவி ரோதத் தோதக விநோதப் பேதையர் ... மனம் வேறுபட்ட, பகைமை வஞ்சகம் இவைகளைக் கொண்ட விசித்திரமான மங்கையர்கள் குலாவைக் கண்டு மாலின் ... மகிழ்ச்சியுடன் உறவாடுதலைக் கண்டு மோகித்து, பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல் ... அறியாமை உற்று, அதனால் குற்றம் குறைகள் என்னைவிட்டு நீங்காமல், பேதவுடல் பேணித் தென்படாதே ... மாறுதலை அடையும் உடலை விரும்பிப் பாதுகாத்து வெளியே தென்படாமல், சாதக விகாரச் சாதல் அவை போக ... பிறப்பும், (பாலன், குமரன், கிழவன் என்ற) மாற்றங்களும், இறப்பும் ஆகிய இவையாவும் தொலைய, தாழ்வில் உயி ராகச் சிந்தையால் உன் ... குறைவில்லாத ஒன்றாக என் உயிர் விளங்க, மனத்தால் உனது தாரை வடிவேலைச் சேவல்தனை ... புகழ் பெற்ற வேலாயுதத்தை, சேவல் கொடியை, ஏனல் சாரல் மறமானைச் சிந்தியேனோ ... தினைப்புனச் சாரலில் இருந்த வேடர்களின் மான் போன்ற வள்ளியை தியானிக்கமாட்டேனோ? போதக மயூரப் போது அக அகடாமன் போது ... யானை*, மயில் இவற்றின் மீது மலர் ஆசனம் இட்ட நடு இருப்பிடத்தில் எழுந்தருளி உலா வருகின்ற அருணை வீதிக் கந்தவேளே ... திருஅண்ணாமலை வீதியில் உள்ள கந்தப் பெருமாளே, போதக கலாபக் கோதை முது வானில் ... யானையாகிய ஐராவதம் வளர்த்த மயில் போன்ற தேவயானை வாழும் பழைய விண்ணுலகத்தார் போனசிறை மீளச் சென்றவேலா ... சென்றிருந்த (சூரனின்) சிறையினின்றும் அவர்கள் மீண்டு வருவதற்காக (சூரனுடன்) போருக்குச் சென்ற வேலனே, பாதக பதாதிச் சூரன்முதல் வீழ ... பெரிய பாபச் செயல்களைச் செய்தவனும், காலாட்படைகள் உடையவனுமான சூரன் முதலிய அரக்கர்கள் அனைவரும் விழுந்து மடிய, பாருலகு வாழக் கண்டகோவே ... மண்ணுலகும் விண்ணுலகும் வாழும் பொருட்டு கருணை புரிந்த தலைவனே, பாதமலர் மீதிற் போதமலர் தூவி ... உன் திருவடி மலர்களை நினைந்து, ஞான பூஜை செய்து பாடுமவர் தோழத் தம்பிரானே. ... பாடுகின்ற அடியார்களின் தோழனான தனிப் பெரும் தலைவனே. |
* முருகன் மயில் வாகனன் ஆகினும், அடியார்களை ஆட்கொள்வதற்கும், அருள் செய்வதற்கும், போர் புரிவதற்குப் புறப்படும்போதும் 'பிணிமுகம்' என்ற யானை வாகனத்தில் செல்வான் என்பர். பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.209 pg 2.210 pg 2.211 pg 2.212 pg 2.213 pg 2.214 WIKI_urai Song number: 525 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 383 - pEdhaga virOdha (thiruvaNNAmalai) pEthakavi rOthath thOthakavi nOthap pEthaiyarku lAvaik ...... kaNdumAlin pEthaimaiyu RAmat REthamaka lAmaR pEthavudal pENith ...... thenpadAthE sAthakavi kArac cAthalavai pOkath thAzhviluyi rAkac ...... cinthaiyAlun thAraivadi vElaic cEvalthanai yEnaR cAralmaRa mAnaic ...... cinthiyEnO pOthakama yUrap pOthakaka dAmaR pOtharuNai veethik ...... kanthavELE pOthakaka lApak kOthaimuthu vAniR pOnaciRai meeLas ...... cenRavElA pAthakapa thAthic cUranmuthal veezhap pArulaku vAzhak ...... kaNdakOvE pAthamalar meethiR pOthamalar thUvip pAdumavar thOzhath ...... thambirAnE. ......... Meaning ......... pEthakavi rOthath thOthakavi nOthap pEthaiyar: These strange women with conflicting, hostile and deceitful attitudes ku lAvaik kaNdumAlin: flirt with me, and I am enamoured of them. pEthaimaiyu RAmat REthamaka lAmaR: I am oblivious of this weakness of mine, and none of my blemishes and sins takes leave of me; pEthavudal pENith thenpadAthE: I hide the various changes occurring in my body which I dotingly nourish. sAthakavi kArac cAthalavai pOka: To put an end to this metamorphosis, such as birth, ageing (from child to youth to old man) and eventual death and thAzhviluyi rAkac cinthaiyAlun: in order that my life is without any imperfection, my mind has to envision You, with thAraivadi vElaic cEvalthanai: Your glorious and sharp Spear, Your staff with Rooster on it, yEnaR cAralmaRa mAnaic cinthiyEnO: and VaLLi, the deer-like damsel of the hunters who lived in the valley of the millet field; will I ever be able to meditate on these? pOthakama yUrap pOthakaka dAmaR pOthu: Seated on a central flowery seat, mounted on an elephant* or Your peacock, You come out in procession aruNai veethik kanthavELE: in the streets of ThiruvaNNAmalai, Oh Lord Kandha! pOthakaka lApak kOthaimuthu vAniR: The good old celestials, in whose land lives peacock-like DEvayAnai, reared by the white elephant (AirAvadham), pOnaciRai meeLas cenRavElA: were all released from the prisons of SUran by Your going to war with him, Oh Lord with the Spear! pAthakapa thAthic cUranmuthal veezha: The biggest sinner, SUran, and other demons, with a large battalion of soldiers, were all destroyed in the battle; pArulaku vAzhak kaNdakOvE: To save this earth and the celestial world, You showed Your mercy, Oh Lord! pAthamalar meethiR pOthamalar thUvi: Thinking about Your hallowed lotus feet and worshipping them by flowers represented by True Knowledge pAdumavar thOzhath thambirAnE.: are Your singing devotees, and You are their bosom friend, Oh Great One! |
* Although Murugan is known to mount the peacock most of the times, on certain occasions when He goes out to bestow His grace on His devotees or to enter the battlefield, He has used the elephant, PiNimukam, as the vehicle. In many shrines, this appears as Murugan's vehicle. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |