பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 525. பிறப்பு இறப்பு அற தானதன தானத் தானதன தானத் தானதன தானத் தனதான பேதகவி ரோதத் தோதகவி நோதப் பேதையர்கு லாவைக் கண்டுமாலின். பேதைமையு றாமற் றேதமக லாமற் பேதவுடல் பேணித் தென்படாதே; *சாதகவி காரச் சாதலவை போகத் தாழ்விலுயி ராகச் சிந்தையாலுன். தாரைவடி fவேலைச் சேவல்தனை யேனற் சாரல்மற மானைச் சிந்தியேனோ,

  1. போதகம யூரப் போதகக டாமற்

போதருணை வீதிக் கந்தவேளே Xபோதகக லாபக் கோதைமுது வானிற் போனசிறை மீளச் சென்றவேலா, பாதகய தாதிச் சூரன்முதல் வீழப் பாருலகு வாழக் கனன்டகோவே. பாதமலர் மீதிற் போதமலர் தூவிப் பாடுமவர் தோழத் தம்பிரானே (17) 輩 சாதக விகாரச் சாதல் - துன்பமான பிறப்பு இறப்பு. f வேல், சேவல், வள்ளியம்மை - இவைதமைத் தியானிக்க வேண்டும் எனபது:

  1. போதக மயூர போது அக அகடு ஆ மன் போது - யானை, மயில் இவைகளின் மேல் மல ராசனமிட்ட மத்திய ஸ்தானத்திலெழுந்தருளி வருகின்ற; யானைவாகனம் - திருப்புகழ் 516 பார்க்க.

X போதக கலாப கோதை முது வான் - தெய்வயானையம்மை அவதரித்த முதிய விண்ணுலகம்.