பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை | திருப் புகழ் உரை 2O7 செளரியம் (பராக்ரமம்) உள்ளவள், வீரம் உள்ளவள். கடல் விஷத்தை உண்டவள், சக்கரம் ஏந்திய திருக்கரத்தை உடையவள், இலக்குமி, ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய், உமை, (ஆகிய பார்வதி) அருளிய குழந்தையே! பேரொலி செய்து போராடின தேவர்களின் பகைவர்களாம் அரக்கர்களுடைய முடிகள்தோறும் (ஆயுதங்கள்) படும்படிச் செலுத்திவைத்து அங்குக்கூடிப் பொருந்திய ஒரு சில பசாசுகள் குணலையிட்டு (ஆரவாரத்துடன் கூத்தாடி) மாமிசங்களை உண்ணும்படி விட்ட வேலனே! லகூழ்மீகரம் விளங்கும் சோணேசரது அண்ணா மலையில் மேகம் உலவும் (விமானம்) கோயிலில் (அல்லது) (கோபுரத்தில்) ஒன்பது நிலைகளைக் கோபுரத்தின் உச்சியில் விளக்கமுற்று உலாவின பெருமாளே. (மாயை படாமல் நின் அருள் தாராய்) 527. உருகி ஒழுகும் நல்ல மெழுகுபோல மோகம் விருத்தியாகும் க்ாமத்தில் உட்பட்ட பேர்வழிகள் வந்தால் நல்ல மெத்தை மேடையில் (தளத்தில்) இருந்து (தமது நீண்ட கூந்தலை வாரிக்கொள்ளும் அழகிய மாதர்கள் உடையாகக் கொண்டுள்ள மேல் ஆடையால் கொங்கைகளை மூடியும், (அந்த ஆடை நெகிழ்வதற்கு வேண்டிய ஜாலவித்தைகள் ஆடியும், உவமை கூறப்படும் சிறந்த மயில்போன்ற ஒளி கொண்ட மேனியர், பேசுவதிலேயே ஒளிப்பு (மறைவு) அமைந்த மனமுடைய மாதர்கள், (ஆகிய பொதுமகளிரின்) பெரிய வலையாகிய கலக (சச்சரவுக்) கடலில் வீழ்கின்ற அடியேன், நன்னெறியைக் கருதமாட்டாத அதிபாதகன், நேசம் (அன்பென்பதையே) அறியாத