திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 373 முருகு செறிகுழல் சொரு (திருவருணை) Thiruppugazh 373 muruguseRikuzhalsoru (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... முருகு செறிகுழல் சொருகிய விரகிகள் முலைக ளளவிடு முகபட பகடிகள் முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல முழுகு புழுககில் குழைவடி வழகியர் முதிர வளர்கனி யதுகவ ரிதழியர் முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம் மருவி யமளியி னலமிடு கலவியர் மனது திரவிய மளவள வளவியர் வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான் மருளு மறிவின னடிமுடி யறிகிலன் அருணை நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே கருதி யிருபது கரமுடி யொருபது கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக் கவச அநுமனொ டெழுபது கவிவிழ அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா தருண மணியவை பலபல செருகிய தலையள் துகிலிடை யழகிய குறமகள் தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முக பட பகடிகள் முதலும் உயிர்களும் அளவிடு களவியர் ... நறுமணம் நிறைந்த கூந்தலை முடித்துள்ள தந்திரசாலிகள். மார்பகங்களை அளவிட்டுக் காட்டும் மேலாடை அணிந்த வெளி வேஷதாரிகள். அவரவர்களின் மூல தனத்தையும் குணாதிசயங்களையும் அளந்திடவல்ல திருடிகள். முழு நீல முழுகு புழுகு அகில் குழை வடிவு அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் ... முழுமையும் நீல நிறம் கொண்ட புனுகு சட்டம், அகில் இவையிரண்டும் குழைக்கப்பட்ட மணம் கொண்ட உருவ அழகியர். நன்கு பழுத்த (கொவ்வைக்) கனியின் தன்மையைப் பெற்றுள்ள வாயிதழை உடையவர்கள். கூர்மை கொண்ட வேலைப் போன்ற கண் பார்வையை வீசும் இழிந்தவர்கள். அநுராகம் மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான் மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் ... காமப் பற்று பொருந்த படுக்கையில் உடலுக்கு இன்பம் தரும் புணர்ச்சியினர் தங்கள் மனதை தாம் பெற்ற பொருளின் அளவுக்கு ஏற்ப அளந்து கொடுப்பவர்கள். பேசும் பேச்சில ஒரு நொடிப் பொழுதில் வஞ்சனை புகுத்துபவர். இத்தகைய பொது மகளிரின் வழியில் நான் மருள் கொண்ட அறிவில்லாதவன். தலை கால் தெரியாதவன். அருணை நகர் மிசை கருணையொடு அருளிய மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே ... அத்தகைய எனக்கு திருவண்ணாமலையில்* கருணையுடன் நீ அருள் செய்த மெளன உபதேசத்தையும் நின் இரண்டு பெருமை மிக்க திருவடிகளையும் நான் மறக்க மாட்டேன். கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது கடியவிய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க ... நன்கு ஆராய்ந்து பார்த்து, இருபது கரங்களும், ஒரு பத்து தலைகளும் பொன்னாலான கிரீடங்களை அணிந்த ராவணன் ஆட்சி செய்ததும், பழமையானதும், காவல் கொண்டதுமான அற்புத நகரமாம் இலங்கை தீப்பிடிக்க, கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு களரி தனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே ... கவசம் போல் விளங்கிய அனுமனோடு எழுபது ஆயிரம் குரங்குகள் (மலைகளைப்) போட்டுக் கட்டிய அணையின் வழியாக அலைகடலை அடக்கிக் கடந்து, எதிர்த்துப் போர்செய்த போர்க்களத்தில் ஒப்பற்ற அம்பைச் செலுத்தும் வலிமை வாய்ந்த ராமனாம் திருமாலின் மருகனே, சருவும் அவுணர்கள் தளமொடு பெரு வலி அகல நிலை பெறு சயிலமும் இடி செய்து தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா ... போராடிய அசுரர்கள் தங்கள் படையுடன் தமது வலிமை எல்லாம் தொலைந்தழிய, நிலை பெற்றிருந்த கிரவுஞ்ச மலையையும் இடித்துத் தள்ளி, யமதர்ம லோகத்துக்கு அனைவரையும் குடியேறும்படி உதவிய அழகு பொருந்திய மயில் வீரனே, தருண மணி அவை பல பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள் தனது தனம் அது பரிவொடு தழுவிய பெருமாளே. ... புதிய மணிகளைப் பலவாறு செருகியுள்ள தலையை உடையவள், ஆடை இடையில் அழகாக அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பினை அன்புடன் தழுவிய பெருமாளே. |
* இது அருணகிரியார் திருஅருணையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டதைக் குறிக்கும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.185 pg 2.186 pg 2.187 pg 2.188 WIKI_urai Song number: 515 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 373 - murugu seRikuzhal soru (thiruvaNNAmalai) muruku cheRikuzhal chorukiya virakikaL mulaika LaLavidu mukapada pakadikaL muthalu muyirkaLu maLavidu kaLaviyar ...... muzhuneela muzhuku puzhukakil kuzhaivadi vazhakiyar muthira vaLarkani yathukava rithazhiyar munaiko Layilena vizhiyeRi kadaisiya ...... ranurAkam maruvi yamaLiyi nalamidu kalaviyar manathu thiraviya maLavaLa vaLaviyar vasana morunodi nilaimaiyil kapadiyar ...... vazhiyEnAn maruLu maRivina nadimudi yaRikilan aruNai nakarmisai karuNaiyo daruLiya mavuna vachanamu miruperu saraNamu ...... maRavEnE karuthi yirupathu karamudi yorupathu kanaka mavulikoL purisaisey pazhaiyathu kadiya viyanakar pukavaru kanapathi ...... kanalmUzhkak kavasa anumano dezhupathu kavivizha aNaiyi lalaiyeRi yethiramar poruthidu kaLari thaniloru kaNaividu madalari ...... marukOnE saruvu mavuNarkaL thaLamodu peruvali yakala nilaipeRu sayilamu midiseythu tharuma navarpathi kudividu pathanisai ...... mayilveerA tharuNa maNiyavai palapala cherukiya thalaiyaL thukilidai yazhakiya kuRamakaL thanathu thanamathu parivodu thazhuviya ...... perumALE. ......... Meaning ......... muruku cheRi kuzhal chorukiya virakikaL mulaikaL aLavidu muka pada pakadikaL muthalum uyirkaLum aLavidu kaLaviyar: These cunning women bind their fragrant hair into a tuft. These masqueraders deliberately expose their bosom whose contours are very revealing through their attire. These women of thievery are capable of assessing the capital funds and character of everyone (of their suitors). muzhu neela muzhuku puzhuku akil kuzhai vadivu azhakiyar muthira vaLar kani athu kavar ithazhiyar munai koL ayil ena vizhi eRi kadaisiyar: These pretty women smear themselves with a fragrant and thick blue paste of civet and incence. Their lips have the reddishness of fully-ripe kovvai fruit. These base women ogle with their eyes that look like sharp spear. anurAkam maruvi amaLiyil nalam idu kalaviyar manathu thiraviyam aLavu aLavu aLaviyar vachanam oru nodi nilaimaiyil kapadiyar vazhiyE nAn maruLum aRivinan adimudi aRikilan: They passionately make love on the bed measuring their mind and the quantity of the pleasure they give to the (suitor's) body commensurate with the money they have received. In the course of conversation, they introduce treachery in a second. I have gone along the path of such whores in utter delusion and without applying my mind. I have fallen head over heels for them. aruNai nakar misai karuNaiyodu aruLiya mavuna vachanamum iru peru saraNamum maRavEnE : To such a base person, You graciously granted the silent preaching* in ThiruvaNNAmalai; I can never forget that kindness nor Your hallowed feet, Oh Lord! karuthi irupathu kara mudi oru pathu kanaka mavuli koL purisai sey pazhaiyathu kadiyaviya nakar puka varu kana pathi kanal mUzhka: After careful consideration, he set fire to the old, well-secured and wonderful city, LankA, ruled by RAvaNan with ten heads, wearing golden crowns, and twenty arms; kavasam anumanodu ezhupathu kavi vizha aNaiyil alai eRi ethir amar poruthidu kaLari thanil oru kaNai vidum adal ari marukOnE: he was Hanuman who served as the shield; along with him, seventy thousand monkeys threw mountains on, and built a bridge across, the sea; through that bridge they were able to tame the sea and cross to the other side; in the battlefield they fought against the enemy, and He wielded a matchless arrow; He is the strong Lord RAmA (VishNu), and You are His nephew, Oh Lord! saruvum avuNarkaL thaLamodu peru vali akala nilai peRu sayilamum idi seythu tharuman avar pathi kudi vidu pathan isai mayil veerA: The warring demons and their armies were rendered powerless and destroyed; the rigid and firm mount Krouncha was also shattered and all the demons were transported to settle in the land of Yaman (God of Death) with Your help, Oh Handsome Lord mounting the Peacock! tharuNa maNi avai pala pala cherukiya thalaiyaL thukil idai azhakiya kuRamakaL thanathu thanam athu parivodu thazhuviya perumALE.: She inserts novel gems at random on her hair; She elegantly wraps a sari around her waist; She is VaLLi, the damsel of the KuRavAs; and You hug her bosom fondly, Oh Great One! |
* This refers to the divine incident by which AruNagirinAthar was taken over graciously by Lord Murugan in ThiruvaNNAmalai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |