பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 179 515. நறுமணம் நிறைந்த கூந்தலைச் சொருகி முடித்துள்ள தந்திரசாலிகள், கொங்கைகளை அளவிட்டுக் காட்டும் மேலாடை அணிந்துள்ள வெளி வேஷக்காரிகள், (அவரவர்க்குள்ள) மூலதனத்தையும், அந்த அந்த உயிர்களையும் (தம்மிடம் வரும் பேர்வழிகளின் சுபாவத்தையும்) அளந்திடவல்ல திருடிகள் முழுமையும் நீலநிறம் நிரம்பக்கொண்ட புழுகு (புனுகு சட்டம்), அகில் இவையிரண்டும் குழையப்பட்ட மணங்கொண்ட உருவ அழகியர், நன்கு பழுத்த (கொவ்வைக்) கனியின் தன்மையைக் கவர்ந்துள்ள (வாய்) இதழினர், கூர்மைகொண்ட வேல்போன்ற கண் பார்வையை விசிடும் மாதர்கள் (அல்லது கடைப்பட்டோர் - இழிந்தோர்). (அல்லது) அயிலெனக் கடைவிழியை (கடைக்கண்ணை வீசுபவர்)காமப்பற்று - பொருந்த படுக்கையில் (தேக) நலத்தைத்தரும் புணர்ச்சியாளர், தங்கள் மனதைத் (தயவைத்) தாம் பெற்ற பொருளின் அளவளவே அளந்து தருபவர், பேசும் பேச்சில் ஒரு நொடி நேரத்தில் வஞ்சனை புகுத்துபவர் . ஆகிய பொதுமகளிரின் வழியில் நான் மருள்கின்ற அறிவைக் கொண்டவன், (அடிமுடி - முடிஅடி) தலைகால் தெரியாதவன், (அத்தகைய எனக்குத்) திரு அண்ணாமலையில் கருணையுடன் நீ அருளின மெளனோ. பதேசத்தையும் இரண்டு பெருமைவாய்ந்த திருவடிகளையும் நான் மறவேன் . ஆய்ந்து இருபது கரங்களும் தலை ஒரு பத்தும் பொன்னாலாய கிரீ டங்களனிந்த தலையினன் (ராவணன்) ஆண்ட மதில்கள் கொண்டதும், பழமையானதும், காவல் கொண்டதுமான அற்புத நகரம், அயலார் புகுதற்கு அரிதான பெருமைவாய்ந்த நகரம், ஆன - இலங்கை எரியில் முழுக -