திருப்புகழ் 374 விடமும் அமுதமும்  (திருவருணை)
Thiruppugazh 374 vidamumamudhamum  (thiruvaruNai)
Thiruppugazh - 374 vidamumamudhamum - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி
     வனச மலதழல் முழுகிய சரமென
          விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல ...... வொருஞான

விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென
     மொழியு மமுதல வுயிர்கவர் வலையென
          விழையு மிளநகை தளவல களவென ...... வியனாபித்

தடமு மடுவல படுகுழி யெனஇடை
     துடியு மலமத னுருவென வனமுலை
          சயில மலகொலை யமனென முலைமிசை ...... புரள்கோவை

தரள மணியல யமன்விடு கயிறென
     மகளிர் மகளிரு மலபல வினைகொடு
          சமையு முருவென வுணர்வொடு புணர்வது ...... மொருநாளே

அடவி வனிதையர் தனதிரு பரிபுர
     சரண மலரடி மலர்கொடு வழிபட
          அசல மிசைவிளை புனமதி லினிதுறை ...... தனிமானும்

அமர ரரிவையு மிருபுடை யினும்வர
     முகர முகபட கவளத வளகர
          அசல மிசைவரு மபிநவ கலவியும் ...... விளையாடுங்

கடக புளகித புயகிரி சமுகவி
     கடக கசரத துரகத நிசிசரர்
          கடக பயிரவ கயிரவ மலர்களும் ...... எரிதீயுங்

கருக வொளிவிடு தனுபர கவுதம
     புநித முநிதொழ அருணையி லறம்வளர்
          கருணை யுமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அ(ல்)ல
தழல் முழுகிய சரம் என விரை செய் ம்ருகமத அளகமும் முகில்
அ(ல்)ல ஒரு ஞான விழியின் வழி கெட இருள்வது இருள்
என
... விஷமும் அமுதமும் ஒன்று சேர்ந்து விளங்குகின்ற இரண்டு
கண்களும் தாமரைகள் அல்ல, நெருப்பில் தோய்த்த அம்புகளாம் என்றும்,
நறு மணம் கமழும் கஸ்தூரி வாசனை கொண்ட கூந்தல் கரு மேகம் அல்ல,
ஒப்பற்ற ஞான விழி நாடும் வழியை மறைக்கும் சூனியத்தைத் தரும் தனி
இருளாம் என்றும்,

மொழியும் அமுது அ(ல்)ல உயிர் கவர் வலை என விழையும்
இள நகை தளவு அ(ல்)ல களவு என வியன் நாபித் தடமும்
மடு அ(ல்)ல படு குழி என
... பேச்சும் அமுதம் அன்று, உயிரையே
கவரும் வலை என்றும், விரும்பும் காமத்தை ஊட்டும் பற்கள் முல்லை
அரும்பு அன்று, திருட்டுத்தனத்தைத் தம்மிடம் ஒளித்து வைத்துள்ளவை
என்றும், வியப்பைத் தரும் தொப்புள் என்னும் இடமும் ஆற்றிடைப் பள்ளம்
அன்று, (யானைகளைப் பிடிக்க அமைந்த) பெருங்குழியாம் என்றும்,

இடை துடியும் அ(ல்)ல மதன் உரு என வன முலை சயிலம்
அ(ல்)ல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை
தரளம் மணி அ(ல்)ல யமன் விடு கயிறு என
... இடை உடுக்கை
அன்று, மன்மதனின் உருவமாம் என்றும் (அதாவது அருவமானது),
அழகிய மார்பகம் மலை அன்று, கொலை செய்யும் யமனே என்றும்,
மார்பிலே புரளுகின்ற கோத்த வடம் முத்து மாலை அன்று, யமன் விட்ட
பாசக் கயிறே ஆகும் என்றும்,

மகளிர் மகளிரும் அ(ல்)ல வினை கொ(ண்)டு சமையும் உரு
என உணர்வொடு புணர்வதும் ஒரு நாளே
... இந்த விலைமாதர்கள்
மாதர்களே அல்ல, பல வினைகள் சேர்ந்து அமைந்த உருவமே என்றும்
காண வல்ல ஞான உணர்ச்சியோடு கலப்பதாகிய ஒரு நாள் எனக்குக்
கிடைக்குமோ?

அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர்
கொ(ண்)டு வழி பட
... வன தேவதைகள் உன்னுடைய இரண்டு
சிலம்பணிந்த, அடைக்கலம் புகத் தக்க, தாமரைத் திருவடிகளை மலர்
கொண்டு வழிபட,

அசல(ம்) மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி
மானும் அமரர் அரிவையும் இரு புடையினும் வர
...
வள்ளிமலைக்கு அருகிலே விளைந்துள்ள தினைப் புனத்தில் இனிது
அமர்ந்திருந்த ஒப்பற்ற மான் போன்ற வள்ளியும், தேவர்கள் வளர்த்த
மகளாகிய தேவயானையும் இரண்டு பக்கங்களிலும் வர,

முகர(ம்) முக படம் கவள(ம்) தவள கர அசல(ம்) மிசை வரும்
அபிநவ
... பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி
கொண்டதும், உணவு உண்டைகளை உட்கொள்வதும், வெண்ணிறம்
கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின்* மீது
எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே,

கலவியும் விளையாடும் கடக(ம்) புளகித புய கிரி சமுக விகட
அக
... (வள்ளி, தேவயானையுடன்) சேர்க்கை இன்பத்தில்
விளையாடுகின்றனவும், கங்கணம் அணிந்தனவும், புளகிதம்
கொண்டுள்ளனவுமாகிய புய மலைக் கூட்டத்தை உடைய அழகு வாய்ந்த
உள்ளத்தவனே,

கச ரத துரகத நிசிசரர் கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி
தீயும் கருக ஒளி விடு தனு
... அசுரர்களுடைய யானை, தேர்,
குதிரை, காலாட்படை ஆகியவைகளுக்கு பயங்கரத்தை ஊட்டுபவனே,
செவ்வாம்பல் மலர்களும், எரிகின்ற தீயும் கருகும்படி சிவந்த ஒளியை
வீசுகின்ற உடலை உடையவனே,

பர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர்
கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே.
... மேலான
கெளதமர் என்னும் பரிசுத்தமான முனிவர் தொழுது பூசிக்க,
திருவண்ணாமலையில் அற நெறியை வளர்த்த கருணை நிறைந்த உமா
தேவி பெற்றருளிய சரவண பவனே, தேவர்கள் தலைவனாகிய
இந்திரனுக்குப் பெருமாளே.


* முருகன் மயில் வாகனன் ஆகினும், அடியார்களை ஆட்கொள்வதற்கும்,
அருள் செய்வதற்கும், போர் புரிவதற்குப் புறப்படும்போதும் 'பிணிமுகம்' என்ற
யானை வாகனத்தில் செல்வான் என்பர்.

பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.187  pg 2.188  pg 2.189  pg 2.190  pg 2.191  pg 2.192 
 WIKI_urai Song number: 516 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 374 - vidamum amudhamum (thiruvaNNAmalai)

vidamu mamuthamu miLirvana iNaivizhi
     vanasa malathazhal muzhukiya saramena
          viraisey mrukamatha aLakamu mukilala ...... vorunjAna

vizhiyin vazhikeda iruLvatho riruLena
     mozhiyu mamuthala vuyirkavar valaiyena
          vizhaiyu miLanakai thaLavala kaLavena ...... viyanApith

thadamu maduvala padukuzhi yenaidai
     thudiyu malamatha nuruvena vanamulai
          sayila malakolai yamanena mulaimisai ...... puraLkOvai

tharaLa maNiyala yamanvidu kayiRena
     makaLir makaLiru malapala vinaikodu
          samaiyu muruvena vuNarvodu puNarvathu ...... morunALE

adavi vanithaiyar thanathiru paripura
     charaNa malaradi malarkodu vazhipada
          asala misaiviLai punamathi linithuRai ...... thanimAnum

amara rarivaiyu mirupudai yinumvara
     mukara mukapada kavaLatha vaLakara
          asala misaivaru mapinava kalaviyum ...... viLaiyAdung

kadaka puLakitha puyakiri samukavi
     kadaka kasaratha thurakatha nisisarar
          kadaka payirava kayirava malarkaLum ...... eritheeyung

karuka voLividu thanupara kavuthama
     punitha munithozha aruNaiyi laRamvaLar
          karuNai yumaitharu saravaNa surapathi ...... perumALE.

......... Meaning .........

vidamum amuthamum miLirvana iNai vizhi vanasam a(l)la thazhal muzhukiya saram ena virai sey mrukamatha aLakamum mukil a(l)la oru njAna vizhiyin vazhi keda iruLvathu iruL ena: "Their two eyes appearing as an amalgam of poison and nectar are not lotus; instead, they are two arrows soaked in fire; their fragrant hair exuding an aroma of musk is not black cloud; instead, it is the unique darkness of ignorance that blocks the path to the matchless search for the eye of Knowledge;

mozhiyum amuthu a(l)la uyir kavar valai ena vizhaiyum iLa nakai thaLavu a(l)la kaLavu ena viyan nApith thadamum madu a(l)la padu kuzhi ena: their speech is not nectar; instead, it is the net that ensnares life; their teeth are not a row of jasmine that provoke passionate exhilaration; instead, they are hiding stealth in themselves; the awesome valley of their navel is not a deep pool in the river; instead, it is a trench (that is dug to entrap elephants);

idai thudiyum a(l)la mathan uru ena vana mulai sayilam a(l)la kolai yaman ena mulai misai puraL kOvai tharaLam maNi a(l)la yaman vidu kayiRu ena: their waist is not a hand-drum; instead, it is the shape of Manmathan (God of Love) (because it is shapeless like Manmathan); their beautiful bosom is not a mountain; instead, it is the deadly God of Death (Yaman), himself; the string of beads heaving on their chest is not made of pearls; instead, it is the rope of bondage cast by Yaman;

makaLir makaLirum a(l)la vinai ko(N)du samaiyum uru ena uNarvodu puNarvathum oru nALE: these whores are not women at all; instead, they are an embodiment of many deeds combined together" - will there be a day when I shall acquire the knowledge of the above feeling (and see the whores as they really are)?

adavi vanithaiyar thanathu iru paripura charaNa malar adi malar ko(N)du vazhi pada: The fairy queens of the forest worship by offering flowers at Your two hallowed lotus feet wearing anklets, that are worthy of surrender;

asala(m) misai viLai punam athil inithu uRai thani mAnum amarar arivaiyum iru pudaiyinum vara: VaLLi, the deer-like damsel with matchless beauty, residing in the field of millet grown near Mount VaLLimalai, and DEvayAnai, reared by the celestials, walk by Your side;

mukara(m) muka padam kavaLa(m) thavaLa kara asala(m) misai varum apinava: and You mount the bleating white elephant* that is adorned with an ornamental cloth covering its face, that devours huge balls of food, that has an enormous trunk and that looks like a mountain, Oh Novel Lord!

kalaviyum viLaiyAdum kadaka(m) puLakitha puya kiri samuka vikada aka: The exhilarated range of Your mountain-like shoulders revels in the bliss of union (with VaLLi and DEvayAnai), Oh Lord with an exquisite heart!

kasa ratha thurakatha nisisarar kadaka payirava kayirava malarkaLum eri theeyum karuka oLi vidu thanu: You terrify the armies of demons comprising the elephants, chariots, horses and soldiers! The red lilies and burning fire are withered and darkened by the radiant reddish rays emanating from Your body, Oh Lord!

para kavuthama punitha muni thozha aruNaiyil aRam vaLar karuNai umai tharu saravaNa surapathi perumALE.: The esteemed and pure sage Gauthamar prostates at Your feet and worships! You are the child delivered by the compassionate Goddess UmA DEvi, who carried out many virtuous acts in ThiruvaNNAmalai, Oh SaravaNabavA! You are the Lord of Indra, the leader of the celestials, Oh Great One!


* Although Murugan is known to mount the peacock most of the times, on certain occasions when He goes out to bestow His grace on His devotees or to enter the battlefield, He has used the elephant, PiNimukam, as the vehicle.

In many shrines, this appears as Murugan's vehicle.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 374 vidamum amudhamum - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]