திருப்புகழ் 375 கமரி மலர்குழல்  (திருவருணை)
Thiruppugazh 375 kamarimalarkuzhal  (thiruvaruNai)
Thiruppugazh - 375 kamarimalarkuzhal - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான

......... பாடல் .........

கமரி மலர்குழல் சரிய புளகித
     கனக தனகிரி யசைய பொருவிழி
          கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர்

கரிய மணிபுர ளரிய கதிரொளி
     பரவ இணைகுழை யசைய நகைகதிர்
          கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத்

திமிரு மதபுழு கொழுக தெருவினி
     லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
          திலத மணிமுக அழகு சுழலிக ...... ளிதழூறல்

திரையி லமுதென கழைகள் பலசுளை
     யெனவு மவர்மயல் தழுவு மசடனை
          திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய்

குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
          குமர குருபர குமர குருபர ...... எனதாளங்

குரைசெய் முரசமொ டரிய விருதொலி
     டமட டமடம டமட டமவென
          குமுற திமிலைச லரிகி னரிமுத ...... லிவைபாட

அமரர் முநிவரு மயனு மனைவரு
     மதுகை மலர்கொடு தொழுது பதமுற
          அசுரர் பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா

அகில புவனமொ டடைய வொளிபெற
     அழகு சரண்மயில் புறம தருளியொ
          ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய
பொரு விழி கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ்
மாதர்
... நிறைந்த வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அவிழ்ந்து சரிய,
புளகிதம் கொண்ட பொன் மயமான மலையைப் போன்ற மார்பகங்கள்
அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகள் என்னும்படியாக விளங்க,
நெற்றி புரள, ஆடையை நெகிழ விடுகின்ற விலைமாதர்கள்,

கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய
நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில்
போல
... கழுத்தில் கரிய மணி மாலை புரள்வதால் அருமையான ஜோதி
ஒளி பரவ, இரண்டு குண்டலங்களும் அசைய, ஒளி விளக்கமுள்ள
பொன்னாலாகிய வளையல்கள் கலகல என ஒலிக்க, மயில் போல நடை
பயிற்றுபவர்கள்,

திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை
தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள்
...
பூசப்பட்ட சாரமான புனுகு சட்டம் ஒழுகும்படி வீதியில் அலைய,
விற்கப்படும் மார்பு வெளித்தோன்ற காமப் பற்றுடன் நெற்றிப் பொட்டு
அணிந்துள்ள முக அழகுடன் அங்குமிங்கும் திரிபவர்களாகிய
விலைமாதர்களின்

இதழ் ஊறல் திரையில் அமுதென கழைகள் பல சுளை
எனவும் அவர் மயல் தழுவும் அசடனை திருகு புலை கொலை
கலிகள் சிதறிட அருள்தாராய்
... வாயிதழ் ஊறலை பாற்கடலில்
எடுத்த அமுதே இது என்றும், கரும்புச் சாறு இது என்றும், பலாப்பழத்தின்
சுளை இது என்றும் கருதி, அந்த விலைமாதர்களை மோகத்தில்
தழுவுகின்ற முட்டாளாகிய எனது குற்றங்கள், இழிவான குணங்கள்,
கொலைக்கு ஈடான நீசபுத்தி முதலியவைகள் சிதறி விலக அருள்
புரிவாயாக.

குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர
குருபர குமர குருபர என தாளம் குரை செய் முரசமொடு
அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற
... குமர
குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர
என்னும் ஓசையுடன் தாளங்கள் ஒலி செய்கின்ற முரசு போன்ற போர்ப்
பறையுடன் அருமையான வெற்றி ஒலிகள் டமடம டமட டம டமட
இவ்வாறு பலத்து ஒலிக்க,

திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட அமரர்
முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது
பதம் உற
... திமிலைப் பறை, சல்லரி என்னும் ஜாலரா வகை, கின்னரி
என்னும் யாழ்வகை முதலிய வாத்தியங்கள் இசைக்க, தேவர்களும்,
முனிவர்களும் பிரமனும் மற்றும் எல்லாரும் தேன் நிறைந்த பூக்களோடு
வணங்கி தத்தம் பதவிகளைப் பெற,

அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா ...
அசுரர்களின் குதிரை, யானை, தேர்ப்படைகள் உடைபட்டு ஒழியவும்
வேலாயுதத்தைச் செலுத்தியவனே,

அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில்
புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய
பெருமாளே.
... எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும் அழகிய
பாதங்களை மயிலின் மேல் இருத்தி, ஒப்பற்ற திருவண்ணாமலையில்
குறப் பெண்ணாகிய வள்ளியைச் சேர்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.191  pg 2.192  pg 2.193  pg 2.194 
 WIKI_urai Song number: 517 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 375 - kamari malarkuzhal (thiruvaNNAmalai)

kamari malarkuzhal sariya puLakitha
     kanaka thanakiri yasaiya poruvizhi
          kaNaika Lenanuthal puraLa thukilathai ...... nekizhmAthar

kariya maNipura Lariya kathiroLi
     parava iNaikuzhai yasaiya nakaikathir
          kanaka vaLaikala nadaikaL pazhakikaL ...... mayilpOlath

thimiru mathapuzhu kozhuka theruvini
     lalaiya vilaimulai theriya mayalkodu
          thilatha maNimuka azhaku suzhalika ...... LithazhURal

thiraiyi lamuthena kazhaikaL palasuLai
     yenavu mavarmayal thazhuvu masadanai
          thiruku pulaikolai kalikaL sithaRida ...... aruLthArAy

kumara gurupara kumara gurupara
     kumara gurupara kumara gurupara
          kumara gurupara kumara gurupara ...... enathALang

kuraisey murasamo dariya virutholi
     damada damadama damada damavena
          kumuRa thimilaicha lariki narimutha ...... livaipAda

amarar munivaru mayanu manaivaru
     mathukai malarkodu thozhuthu pathamuRa
          asurar parikari yiratha mudaipada ...... vidumvElA

akila puvanamo dadaiya voLipeRa
     azhaku saraNmayil puRama tharuLiyo
          raruNa kirikuRa makaLai maruviya ...... perumALE.

......... Meaning .........

kama ari malar kuzhal sariya puLakitha kanaka thana kiri asaiya poru vizhi kaNaikaL ena nuthal puraLa thukil athai nekizh mAthar: Their hair, swarmed around by beetles, becoming loose and falling freely, their exhilarated and golden mountain-like bosom heaving, their combative eyes looking like arrows and their forehead furrowed, these whores deliberately slacken their attire;

kariya maNi puraLa ariya kathir oLi parava iNai kuzhai asaiya nakai kathir kanaka vaLai kala nadaikaL pazhakikaL mayil pOla: as the string of black beads on their neck rolls, a rare bright radiation spreads around; their two ear-studs swing about; the dazzling golden bangles on their forearms make a jingling sound; these women walk with the gait of a peacock;

thimiru matha puzhuku ozhuka therivinil alaiya vilai mulai theriya mayal kodu thilatha maNimuka azhaku suzhalikaL: the paste of civet smeared on their chest oozing, these women roam about in the streets; exposing their breasts that are offered for sale, these whores wander hither and thither with intense passion, displaying the red vermillion on their forehead and their beautiful face;

ithazh URal thiraiyil amuthena kazhaikaL pala suLai enavum avar mayal thazhuvum asadanai thiruku pulai kolai kalikaL sithaRida aruLthArAy: declaring that the saliva secreting from their mouth is the nectar obtained from the milky ocean or the juice of sugarcane or the sweet slice of jack fruit, I have been embracing those whores obsessively; kindly bless me so that all lapses of this fool, base traits and heinous thoughts akin to murder are scattered and dispelled, Oh Lord!

kumara gurupara kumara gurupara kumara gurupara kumara gurupara kumara gurupara kumara gurupara ena thALam kurai sey murasamodu ariya viruthu oli damada damadama damada dama ena kumuRa: The drums in the battlefield were beaten to the meter "kumara gurupara kumara gurupara kumara gurupara kumara gurupara kumara gurupara kumara gurupara"; rare sounds of triumph were heard with a roaring noise "damada damadama damada dama";

thimilai chalari ki(n)nari muthal ivai pAda amarar munivarum ayanum anaivarum mathukai malar kodu thozhuthu patham uRa: the drum called thimilai, the cymbals called challari and other string instruments like lute (kinnari) were all played aloud; all the celestials, sages and BrahmA together offered their worship with honey-dripping flowers and redeemed their respective positions;

asurar pari kari irathamum udaipada vidum vElA: and the armies of the demons consisting of horses, elephants and chariots were all shattered to pieces when You wielded Your spear, Oh Lord!

akila puvanamodu adaiya voLi peRa azhaku saraN mayil puRam athu aruLi or aruNa kiri kuRa makaLai maruviya perumALE.: All the worlds were lit brightly everywhere when You mounted the peacock displaying Your hallowed feet and united with VaLLi, the damsel of the KuRavAs, and took Your seat in this matchless mountain, ThiruvaNNAmalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 375 kamari malarkuzhal - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]