திருப்புகழ் 376 கயல் விழித்தேன்  (திருவருணை)
Thiruppugazh 376 kayalvizhiththEn  (thiruvaruNai)
Thiruppugazh - 376 kayalvizhiththEn - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

......... பாடல் .........

கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
     கணவகெட் டேனெனப் ...... பெறுமாது

கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
     கதறிடப் பாடையிற் ...... றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
     பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும்

பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்
     பரிகரித் தாவியைத் ...... தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே

அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
     தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
     புனமறப் பாவையைப் ...... புணர்வோனே

பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
     பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கயல்விழித்தேன் எனைச் செயலழித் தாயென ... கண்விழித்து
உனக்கு எத்தனை நாள் பணிவிடைகள் செய்தேன், என்னை செயலற்றுப்
போகச் செய்துவிட்டாயே என்றும்,

கணவகெட்டேனெனப் பெறுமாது ... கணவனே, உன்னை இழந்து
நான் அழிந்து போனேனே என்றும் மனைவி அழவும்,

கருதுபுத்ராஎன ... என் கருத்திலேயே நிலைத்து நிற்கும் மகனே
என்று தாயார் அழவும்,

புதல்வர் அப்பா எனக் கதறிட ... புதல்வர் அப்பா எனக் கதறி அழவும்,

பாடையிற் றலைமீதே ... பிணத்தை வைத்த பாடையின்
தலைமாட்டில் நின்று

பயில்குலத்தாரழப் பழையநட்பாரழ ... பழகிய சுற்றத்தார் அழவும்,
பழமையான நட்பினர்கள் அழவும்,

பறைகள்கொட்டாவர ... பறைகளை முழக்கிக் கொண்டு பலர் வரவும்,

சமனாரும் பரியகைப் பாசம்விட்டெறியுமப்போது ... யமனும்
பருத்த கையிலுள்ள பாசக் கயிற்றை என்மீது விட்டெறியும் அந்தத்
தருணத்தில்

எனைப் பரிகரித்து ஆவியைத் தரவேணும் ... என்னைக் காப்பாற்றி
உயிரைத் தந்தருள்க.

அயில் அறச் சேவல்கைக்கு இனிதர ... வேலும், தர்ம நெறி
வழுவாத சேவற்கொடியும் கைகளில் இனிது விளங்க,

தோகையுற்று அருணையிற் கோபுரத்துறைவோனே ... மயில் மீது
விளங்கி, திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலில் வீற்றிருப்பவனே,

அமரர் அத்தா சிறுக் குமரிமுத்தா ... தேவர்களுக்குத் தலைவனே,
அவர்களிடை வளர்ந்த சிறிய குமரி தேவயானையை முத்தமிட்டு
மகிழ்வோனே,

சிவத்தரியசொற் பாவலர்க்கு எளியோனே ... சிவபிரானை
அருமையான சொற்களால் பாடும் புலவர்களுக்கு எளியவனே,

புயல் இளைப்பாறு பொற் சயில மொய்ச் சாரலில் ... மேகங்கள்
தங்கி இளைப்பாறும் அழகிய மலையாம் வள்ளிமலையின் நெருங்கிய
மலைச்சாரலில்

புனமறப் பாவையைப் புணர்வோனே ... தினைப்புனம் காத்த
வேடர்குலப் பெண் வள்ளியைக் கூடியவனே,

பொடிபடப் பூதரத்தொடு கடற் சூரனை ... தூளாகும்படியாக
கிரெளஞ்ச மலையோடும், கடலில் மாமரமாக நின்ற சூரனோடும்

பொருமுழுச் சேவகப் பெருமாளே. ... போர் புரிந்த, பரிபூரண
பராக்கிரமத்தை உடைய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.193  pg 2.194  pg 2.195  pg 2.196 
 WIKI_urai Song number: 518 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 376 - kayal vizhiththEn (thiruvaNNAmalai)

kayal vizhiththEn enai seyAl azhith thAyena
     kaNava kettEn ena ...... peRumAdhu

karudhu puthrA ena pudhalvar appA ena
     kadhRidap pAdaiyitr ...... alaimeedhE

payil kulaththArezha pazhaiya natpAr azha
     paRaigaL kottAvara ...... samanArum

pariya kai pAsam vittu eRiyum appOdhenai
     parigarithth Aviyai ...... tharavENum

ayilaRa sEval kaikku inithara thOgaiyutr
     aruNaiyil gopurath ...... uRaivOnE

amararath thAsiRu kumari muththA sivath
     ariya soR pAvalark ...... eLiyOnE

puyaliLaip pARupoR sayila moy sAralil
     punamaRa pAvaiyai ...... puNarvOnE

podipada bUdharathodu kadal sUranai
     porumuzhu sEvaga ...... perumALE.

......... Meaning .........

kayal vizhiththEn enai seyAl azhith thAyena: "I kept a vigil day and night looking after you, but you abandoned me leaving me totally inactive;

kaNava kettEn ena: Oh my dear husband, having lost you, I am destroyed" so wailed the wife.

peRumAdhu karudhu puthrA ena: The old mother lamented "Oh my son, you always remain in my thoughts".

pudhalvar appA ena kadhRida: The sons wept loudly "Oh father!"

pAdaiyitr alaimeedhE payil kulaththArezha pazhaiya natpAr azha: At the head of the corpse, all relatives and old friends assembled and cried.

paRaigaL kottAvara: The funeral came with drum-beating.

samanArum pariya kai pAsam vittu eRiyum appOdhu: The God of Death (Yaman) threw the thick rope (PAsak kayiRu) around my neck and tightened it.

enai parigarithth Aviyai tharavENum: At this juncture, kindly save me and spare my life.

ayilaRa sEval kaikku inithara: With the Spear and the Staff of Rooster symbolising justice held in Your hands,

thOgaiyutru aruNaiyil gopurath uRaivOnE: You mount the peacock and reside in the temple tower of ThiruvaNNAmalai.

amararath thA siRu kumari muththA: You are the Lord of the Celestials! You kiss the little girl, DEvayAnai, reared by the DEvAs.

sivathariya soR pAvalark eLiyOnE: You are easily accessible to those poets who sing the glory of SivA in unique words!

puyaliLaip pARupoR sayila moy sAralil: In the dense hillside of beautiful VaLLimalai, where dark clouds linger and rest,

punamaRa pAvaiyai puNarvOnE: You wooed VaLLi, the damsel of the KuRavAs, who was minding the millet field, and united with her!

podipada bUdharathodu kadal sUranai poru: You smashed the Mount of Krouncha into powder and fought with SUran who hid as a mango tree in the sea;

muzhu sEvaga perumALE.: and You are the consummate warrior, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 376 kayal vizhiththEn - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]