திருப்புகழ் 372 முகிலை யிகல்  (திருவருணை)
Thiruppugazh 372 mugilaiyigal  (thiruvaruNai)
Thiruppugazh - 372 mugilaiyigal - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
     முதிய மதியது முகமென நுதலிணை
          முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... யெனமூவா

முளரி தனின்முகு ளிதமலர் முலையென
     முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
          மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப்

பகலு மிரவினு மிகமன மருள்கொடு
     பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
          பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே

பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
     விகட முடனடை பயில்மயில் மிசைவரு
          பவனி தனையநு தினநினை யெனஅருள் ...... பகர்வாயே

புகல வரியது பொருளிது எனவொரு
     புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
          பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப்

புரமு மெரியெழ நகையது புரிபவர்
     புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
          புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே

அகில கலைகளு மறநெறி முறைமையு
     மகில மொழிதரு புலவரு முலகினி
          லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே

அறுவர் முலையுணு மறுமுக னிவனென
     அரிய நடமிடு மடியவ ரடிதொழ
          அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது
முகம் என நுதல் இணை முரணர் வரி சிலை முடுகிடு கணை
விழி என
... மேகத்தைப் பகைத்துப் போராடும் முற்றின இருளுமே
கூந்தல் என்றும், பூரண சந்திரனே முகம் என்றும், புருவம் இரண்டும்
பகைவர்களால் கட்டப்பட்ட வில் என்றும், விரைந்து பாயும் அம்பு கண்
என்றும்,

மூவா முளரி தனின் முகுளித மலர் முலை என முறுவல்
தனை இரு குழைதனை மொழி தனை மொழிய அரியது ஒர்
தெரிவையர் வினை என மொழி கூறி
... மூப்பில்லாத தாமரையின்
அரும்பு நிலை மலர் மார்பு எனவும், பற்களையும் இரண்டு
குண்டலங்களையும் பேச்சையும் உவமை சொல்லுதற்கு அரிதானதோர்
மாதர்களின் செயலாற்றும் கருவிகள் எனவும் வர்ணித்துக் கூறி,

பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதி இலர் அவர்
வடிவுளது அழகு என ஒரு பழுதும் அற அவர் பரிவு உற இதம்
அது பகராதே
... பகலும் இரவும் மிக்க மன மருட்சியுடன் பொது
மகளிரின் வடிவில் அழகு இருப்பிடம் கொண்டிருக்கின்றது என்று,
சற்றும் குறைவிலா வகையில் அவர்கள் அன்பு கொள்ளுமாறு இன்ப
வார்த்தைகளை அவர்களிடம் சொல்லித் திரியாமல்,

பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் துகை பட விகடம்
உடன் அடை பயில் மயில் மிசை வரு பவனி தனை
அநுதின(ம்) நினை என அருள் பகர்வாயே
... பகையுடன் வந்து
எதிர்த்துப் போர் செய்யும் அசுரர்கள் துகைக்கப்பட்டு அழிய, நீ
நடனம் செய்யும் மயிலின் மேல் உலவி வரும் காட்சியை தினமும்
நினைப்பாயாக என்று வரம் தர வேண்டும்.

புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது
முதல் எனும் ஒரு பொதுவை இது என தவம் உடை முநிவர்கள்
புடைசூழப் புரமும் எரி எழு நகை அது புரிபவர்
... எடுத்துச்
சொல்லுவதற்கு முடியாததான பொருள் இதுதான் என்றும், ஒரு புதிய
வகையில் கற்பனை செய்ய முடியாததான முதன்மையானது என்றும்,
ஒப்பற்ற பொதுவாம் தன்மை கொண்டது இது என்றும் தவ நிலையில்
உள்ள முனிவர்கள் பக்கத்தில் சூழ்ந்து கூறிவர, திரி புரம் எரியுண்ணச்
சிரித்தவர்,

புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் புடவி வழிபட
புதை பொருள் விரகோடு புகல்வோனே
... கங்கையையும்
பிறையையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய சிவபெருமான்
பூமியில் (சுவாமி மலையில்) உன்னை வழிபட்டு நிற்க, அவருக்கு
ரகசியப் பொருளை ஆர்வத்துடன உபதேசித்தவனே,

அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி
தரு புலவரும் உலகு இனி அறிஞர் தவ(ம்) முயல்பவர்களும்
இயல் இசை அதனாலே
... எல்லா கலைகளும் தரும நெறியைக்
கூறும் நூல்கள் எல்லாவற்றையும் மொழிய வல்ல புலவர்களும்,
உலகிலுள்ள அறிஞர்களும், தவ நிலையைச் சார்ந்து முயல்பவர்களும்,
இயற்றமிழாலும், இசைத் தமிழாலும்,

அறுவர் முலை உ(ண்)ணும் அறுமுகன் இவன் என அரிய
நடம் இடும் அடியவர் அடி தொழ அருணை நகர் தனில்
அழகுடன் மருவிய பெருமாளே.
... ஆறு கார்த்திகை மாதர்களின்
முலைப் பாலை உண்ணும் ஆறுமுக சுவாமி இவன்தான் என்று
தியானித்துக் கூறி அருமையான நடனம் இடும் அடியவர்கள் உனது
திருவடியைத் தொழுது நிற்க, திருவண்ணாமலை என்னும் ஊரில்
அழகுடன் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.181  pg 2.182  pg 2.183  pg 2.184 
 WIKI_urai Song number: 514 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 372 - mugilai yigal (thiruvaNNAmalai)

mukilai yikalporu muzhuviruL kuzhalena
     muthiya mathiyathu mukamena nuthaliNai
          muraNar varisilai mudukidu kaNaivizhi ...... yenamUvA

muLari thaninmuku Lithamalar mulaiyena
     muRuval thanaiyiru kuzhaithanai mozhithanai
          mozhiya vAiyathor therivaiyar vinaiyena ...... mozhikURip

pakalu miravinu mikamana maruLkodu
     pathiyi lavarvadi vuLathazha kenavoru
          pazhuthu maRaavar parivuRa ithamathu ...... pakarAthE

pakaiko dethirporu masurarkaL thukaipada
     vikada mudanadai payilmayil misaivaru
          pavani thanaiyanu thinaninai yenaaruL ...... pakarvAyE

pukala variyathu poruLithu enavoru
     puthumai yidaari yathumutha lenumoru
          pothuvai yithuvena thavamudai munivarkaL ...... pudaicUzhap

puramu meriyezha nakaiyathu puripavar
     punalum vaLarmathi punaisadai yinaravar
          pudavi vazhipada puthai poruL virakodu ...... pukalvOnE

akila kalaikaLu maRaneRi muRaimaiyu
     makila mozhitharu pulavaru mulakini
          laRinjar thavamuyal pavarkaLu miyalisai ...... yathanAlE

aRuvar mulaiyuNu maRumuka nivanena
     ariya nadamidu madiyava radithozha
          aruNai nakarthani lazhakudan maruviya ...... perumALE.

......... Meaning .........

mukilai ikal poru muzhu iruL kuzhal ena muthiya mathi athu mukam ena nuthal iNai muraNar vari silai mudukidu kaNai vizhi ena: Comparing their hair to utter darkness that has overshadowed its rival, namely, the dark cloud, their face to the full moon, their two eye-brows to bows that are strung and bound by enemies, their eyes to rapidly-shot arrows,

mUvA muLari thanin mukuLitha malar mulai ena muRuval thanai iru kuzhaithanai mozhi thanai mozhiya ariyathu or therivaiyar vinai ena mozhi kURi: their blossoming bosom to the bud of lotus that never ages and their teeth, twin swinging ear-studs and speech to incomparable attributes of rare women,

pakalum iravinum mika manam maruL kodu pathi ilar avar vadivuLathu azhaku ena oru pazhuthum aRa avar parivu uRa itham athu pakarAthE: I have been telling these whores, day and night, with a fallacious mind, that they are the repository of beauty; in order that I do not roam about elating them unabatedly with pleasant words to impress them,

pakai kodu ethir porum asurarkaL thukai pada vikadam udan adai payil mayil misai varu pavani thanai anuthina(m) ninai ena aruL pakarvAyE: You have to grant me the boon of meditating on You, bringing to my vision Your dancing peacock that You mounted and crushingly destroyed the confronting demons who came to fight with You with enmity, Oh Lord!

pukala ariyathu poruL ithu ena oru puthumai ida ariyathu muthal enum oru pothuvai ithu ena thavam udai munivarkaL pudaicUzhap puramum eri ezhu nakai athu puripavar: Sages who have performed penance declaring "This is some thing unique that can never be explained; this primordial principle cannot even be imagined in a novel way and this has a matchless quality of commonality" came along surrounding Him as He laughed and burnt down Thiripuram;

punalum vaLar mathi punai sadaiyinar avar pudavi vazhipada puthai poruL virakOdu pukalvOnE: He wears River Gangai and the crescent moon on His matted hair; that Lord SivA prostrated at Your feet on this earth (in SwAmimalai), and You ardently preached to Him the Secret Principle (PraNava ManthrA), Oh Lord!

akila kalaikaLum aRa neRi muRaimaiyum akila mozhi tharu pulavarum ulaku ini aRinjar thava(m) muyalpavarkaLum iyal isai athanAlE: Poets who are capable of speaking about all forms of arts and all texts that enunciate the righteous principle, along with the wise men of the world and people who endeavour to attain realisation through penance, have declared, after solemn contemplation, in chaste literary Tamil and through Tamil music that

aRuvar mulai u(N)Num aRumukan ivan ena ariya nadam idum adiyavar adi thozha aruNai nakar thanil azhakudan maruviya perumALE.: the six-faced Lord ARumugan is none other than this child who was breast-fed by the six KArthigai maids; as the devotees dancing uniquely around You worship Your hallowed feet, You are seated elegantly in the town of ThiruvaNNAmalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 372 mugilai yigal - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]