திருப்புகழ் 366 வேலைப்போல் விழி  (திருவானைக்கா)
Thiruppugazh 366 vElaippOlvizhi  (thiruvAnaikkA)
Thiruppugazh - 366 vElaippOlvizhi - thiruvAnaikkASri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தானன தத்தன தத்தன
     தானத் தானன தத்தன தத்தன
          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
     காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
          வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை

மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
     மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
          வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ்

சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
     காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
          தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும்

தோயப் பாயல ழைக்கும வத்திகள்
     மோகப் போகமு யக்கிம யக்கிகள்
          சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ

காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
     ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
          காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள்

கானத் தாசிர மத்தினி லுத்தம
     வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
          காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே

ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
     பாயச் சாலித ழைத்திர தித்தமு
          தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா

ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
     நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
          ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வேலைப் போல் விழி இட்டு மருட்டிகள் ... வேலைப் போன்று
கூர்மையான கண் கொண்டு மயக்குபவர்கள்,

காமக் (கு)ரோதம் விளைத்திடு துட்டிகள் ... காமம், கோபம்
இவைகளை உண்டு பண்ணும் துஷ்டப் பெண்கள்,

வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானைமேல் இட்டே
பொரவிட்ட பொறிச்சிகள்
... தெருக்களில் திரியும் பயனிலிகள்,
யானையைப் போல விளங்கும் மார்பகத்தை மேலே எதிர்த்துப் போர் செய்ய
விடுகின்ற தந்திரவாதிகள்,

மார்பைத் தோளை அசைத்து நடப்பிகள் ... மார்பையும்,
தோளையும் அசைத்து நடப்பவர்கள்,

வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் ... மன்மதனுக்கே
ஆண்மைச் சக்தியைத் தருகின்ற சாமர்த்தியசாலிகள்,

களி கூரும் சோலைக் கோகிலம் ஒத்த மொழிச்சிகள் ... மகிழ்ச்சி
பொங்கும் சோலைக் குயில்கள் போன்ற பேச்சை உடையவர்கள்,

காசு அற்றாரை இதத்தில் ஒழிச்சிகள் ... பொருள்
இல்லாதவர்களைப் பக்குவமாக நீக்குபவர்கள்,

தோலைப் பூசி மினுக்கி உருக்கிகள் ... உடலின் தோலைப்
பொடியால் பூசி மினுக்கி (கண்டோர்) மனதை உருக்குபவர்கள்,

எவரேனும் தோயப் பாயல் அழைக்கும் அவத்திகள் ... யாரோடும்
சிற்றின்ப சுகத்துக்காக படுக்கைக்கு அழைக்கும் கேடு கெட்டவர்கள்,

மோகப் போகம் முயக்கி மயக்கிகள் ... மோகானுபவத்தைத் தந்து
இணைந்து மயங்க வைப்பவர்கள்,

சூறைக் காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ ... இத்தகைய
கொள்ளைக்காரிகளான விலைமாதருடைய துன்பம் தருவதான
வலைக்குள் மாட்டிக்கொள்ளுதலை நீங்கேனோ?

காலைக்கே முழுகிக் குண திக்கினில் ஆதித்யாய எனப் பகர்
தர்ப்பணம் காயத்ரீ செபம் அர்ச்சனையைச் செய்யும்
முநிவோர்கள்
... காலை நேரத்தில் குளித்து, கிழக்கு திசையை நோக்கி
சூரிய பகவானே என்று துதிக்கும் நீர்க் கடன், காயத்திரி மந்திரம்,
அர்ச்சனை முதலியன செய்யும் முனிவர்கள் (வாழும்)

கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்விச் சாலை அளித்தல்
பொருட்டு
... காட்டில் ஆசிரமத்தில் மேன்மை வாய்ந்த யாக சாலையை
(இடையூறின்றிக்) காக்கும் பொருட்டு,

எதிர் காதத் தாடகையைக் கொல் க்ருபைக் கடல்
மருகோனே
... எதிர்த்து வந்த கொடியவளாகிய தாடகி என்னும்
அரக்கியைக் கொன்ற கருணைக் கடலான திருமாலின் மருகனே,

ஆலைச் சாறு கொதித்து வயல் தலை பாயச் சாலி தழைத்து
இரதித்து அமுதாக
... கரும்பாலைகளின் சாறு கொதித்து,
வயலிடத்தே பாய்வதால், நெற் பயிர் செழுமையாக வளர்ந்து சுவை
தருவதான அமுதம் ஆகின்ற,

தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா ... தேவர்கள்
போற்றும் வயலூரில் வீற்றிருக்கும் வேலனே,

ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த் திரு நீறு இட்டான்
மதிள் சுற்றிய
... சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற,
உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள்* சுற்றிலும் உள்ள,

பொன் திரு ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு
பெருமாளே.
... அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில்
எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே.


* திருவானைக்காவில் ஐந்து மதில்கள் உள்ளன. நான்காவது மதில், திருநீறிட்டான்
மதில், மிகப் பெரியது. இதைக் கட்டும் போது சிவபெருமான் ஒரு சித்தாளாகக்
கூலிக்கு வேலை செய்தார். கூலியாக திருநீற்றையே கொடுக்க, அந்தத் திருநீறு
பொற்காசு ஆயிற்று என்பது புராண வரலாறு - திரு ஆனைக்கா புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.163  pg 2.164  pg 2.165  pg 2.166  pg 2.167  pg 2.168 
 WIKI_urai Song number: 508 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 366 - vElaippOl vizhi (thiruvAnaikkA)

vElaip pOlvizhi yittuma ruttikaL
     kAmak rOthamvi Laiththidu thuttikaL
          veethik kEthiri pappara mattaikaL ...... mulaiyAnai

mElit tEpora vittapo RicchikaL
     mArpaith thOLaiya saiththuna dappikaL
          vELuk kANmaise luththusa marththikaL ...... kaLikUrum

sOlaik kOkila moththamo zhicchikaL
     kAsat RAraiyi thaththilo zhicchikaL
          thOlaip pUsimi nukkiyu rukkikaL ...... evarEnum

thOyap pAyala zhaikkuma vaththikaL
     mOkap pOkamu yakkima yakkikaL
          cURaik kArikaL thukkava laippada ...... lozhivEnO

kAlaik kEmuzhu kikkuNa thikkinil
     Athith yAyae nappakar tharppaNa
          gAyath reesepa marcchanai yaiccheyu ...... munivOrkaL

kAnath thAsira maththini luththama
     vELvic chAlaiya Liththalpo ruttethir
          kAthath thAdakai yaikkolkru paikkadal ...... marukOnE

Alaic chARuko thiththuva yatRalai
     pAyac chAlitha zhaiththira thiththamu
          thAkath thEvarkaL mecchiya seyppathi ...... yuRaivElA

Azhith thErmaRu kiRpayil meyththiru
     neeRit tAnmathiL sutRiya potRiru
          Anaik kAvini lapparpri yappadu ...... perumALE.

......... Meaning .........

vElaip pOl vizhi ittu maruttikaL: They enchant with their eyes sharp as the spear;

kAmak (ku)rOtham viLaiththidu thuttikaL: these are bad girls that provoke passion and anger;

veethikkE thiri pappara mattaikaL mulai yAnaimEl ittE poravitta poRicchikaL: they are worthless street-walkers; they are the manipulators who deliberately expose their elephant-like breasts outward in a combative manner;

mArpaith thOLai asaiththu nadappikaL: they shake their bosom and shoulders while walking;

vELukku ANmai seluththu samarththikaL: they are so clever that they could instill virility even to Manmathan (God of Love);

kaLi kUrum sOlaik kOkilam oththa mozhicchikaL: their speech is like the happy cooing of the cuckoos in the grove;

kAsu atRArai ithaththil ozhicchikaL: they tactfully get rid of those seeking them without money;

thOlaip pUsi minukki urukkikaL: they smear powder over the skin and flaunt their body, melting the mind of their suitors;

evarEnum thOyap pAyal azhaikkum avaththikaL: they are so debauched that they indiscriminately seek carnal pleasure with one and all, inviting them to their bed;

mOkap pOkam muyakki mayakkikaL: they unite with such a passionate zeal that leaves men dazed;

cURaik kArikaL thukka valaippadal ozhivEnO: will I not be able to escape the miserable web spread by these dacoit-like whores?

kAlaikkE muzhukik kuNa thikkinil AthithyAya enap pakar tharppaNam kAyathree sepam arc chanaiyaic cheyyum munivOrkaL: At the dawn, they bathe and prostrate towards the east, worshipping the Sun God, performing all kinds of offerings like tharppanam (offering of water), chanting of GAyathri ManthrA and floral offerings; those sages lived in

kAnaththu Asiramaththinil uththama vELvic chAlai aLiththal poruttu: the forest and performed many a great sacrifice in their secluded dwelling; to protect that sacred place (from all obstacles),

ethir kAthath thAdakaiyaik kol krupaik kadal marukOnE: He killed the evil demoness, ThAdakai, who confronted Him; You are the nephew of that Lord VishNu, whose compassion was deep like the sea!

Alaic chARu kothiththu vayal thalai pAyac chAli thazhaiththu irathiththu amuthAka: In this place, the molten juice of the sugarcanes crushed in the mills flow through the paddy fields, resulting in a bumper crop of rice that tastes like nectar;

thEvarkaL mecchiya seyppathi uRai vElA: here, in VayalUr, lauded by the celestials, You are seated with Your spear, Oh Lord!

Azhith thEr maRukil payil meyth thiru neeRu ittAn mathiL sutRiya: Wheeled chariots are driven in the streets of this place surrounded by the famous ThiruneeRittAn wall*, which stands as the testimony for truth;

pon thiru AnaikkAvinil appar priyappadu perumALE.: this is the beautiful town, ThiruvAnaikkA, where the presiding Lord SivA who is fond of You is seated, Oh Great One!


* There are five walls surrounding the town of ThiruvAnaikkA, the tallest among them being the fourth, known as ThiruneeRittAn wall. When that wall was being built, Lord SivA came in the disguise of a stone-mason and participated in building the wall. He received holy ash in lieu of wages, and by miracle, that ash turned into golden coins - ThiruvAnaikkA PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 366 vElaippOl vizhi - thiruvAnaikkA

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]