திருப்புகழ் 365 பரிமளம் மிக உள  (திருவானைக்கா)
Thiruppugazh 365 parimaLammigauLa  (thiruvAnaikkA)
Thiruppugazh - 365 parimaLammigauLa - thiruvAnaikkASri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

......... பாடல் .........

பரிமள மிகவுள சாந்து மாமத
     முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
          பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே

பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
     பரிபுர மலரடி வேண்டி யேவிய
          பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா

விரகனை யசடனை வீம்பு பேசிய
     விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
          வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா

வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
     விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
          வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
     மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
          கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
     கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
          கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா

முரணிய சமரினில் மூண்ட ராவண
     னிடியென அலறிமு னேங்கி வாய்விட
          முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே

முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
     யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
          முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பரிமளம் மிக உள சாந்து மா(ன்) மத(ம்) ... நறுமணம் மிக்க
கலவைச் சாந்து, கஸ்தூரி,

முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய ... வாசனை வீசும் நல்ல
பூக்கள் இவைகளில் பொருந்திக் கூடியதும்,

பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில்போல ... பல
ரேகைகளைக் கொண்ட வண்டுகளின் துயில் கொண்டதும், ஆகாயத்தில்
உள்ள கருமேகம் போன்றதும்,

பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் ... பரந்துள்ள இருளைப்
போல் கரியதுமான கூந்தலை உடைய மாதர்களின்

பரிபுர மலர் அடி வேண்டி ... சிலம்பு அணிந்த மலர் போன்ற
அடிகளை விரும்பி,

ஏவிய பணி விடைகளில் இறுமாந்த கூளனை ... அவர்கள் இட்ட
வேலைகளை பணியாளாகச் செய்வதில் பெருமைகொள்ளும் பயனற்ற
என்னை,

நெறி பேணா விரகனை அசடனை ... ஒழுக்க முறையை
அனுஷ்டிக்காத வீணனை, மூடனை,

வீம்பு பேசிய விழலனை ... கர்வப் பேச்சு பேசும் உதவாக் கரையை,

உறு கலை ஆய்ந்திடா முழு வெகுளியை ... உரிய கலை நூல்களை
ஆய்ந்து அறியாத முழு வெறுப்பு மிக்கவனை,

அறிவது போம் கபாடனை ... அறிவு நீங்கிய வஞ்சகனை,

மலம் மாறா வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை ...
குற்றங்கள் நீங்காத வினை நிரம்பியவனை, சொல்லும் சொல் தவறிய
பாவியை,

விளிவு உறு நரகு இடை வீழ்ந்த மோடனை ... இறந்தபின்
சேரும் நரகத்தில் இப்போதே விழுந்துள்ள மூடனை,

வினவி முன் அருள் செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே ...
எனக்கு என்ன ஆயிற்று என்று கவனித்துக் கேட்டு, திருவருள் பாலித்து,
நன்கு ஆண்டருளுவதாகிய காலமும் ஒன்று உண்டா?

கருதலர் திரி புரம் மாண்டு நீறு எழ ... பகைவர்களின்
முப்புரங்களை அழித்துத் தூளாக்க

மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி ... மேரு மலையை
ஒரு கையில் வில்லாக வளைத்த நாராயணி (விஷ்ணுவின் தங்கை),

கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை ...
சிலம்பணிந்த மலை மகள், காஞ்சி நகரில் விளங்கும் தேவி காமாக்ஷி,

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி ... இன்பமாய் ஆடும்
மயில் போன்றவள், சிவபெருமானுடன் வாழும் அழகி,

கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை ... கடலை
ஆடையாகக்கொண்ட உலகத்தை ஈன்ற தாயாகிய உமா தேவி,

கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா ...
திருவானைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகி அருளிய
குழந்தையே,

முரணிய சமரினில் மூண்ட ராவணன் ... மாறுபட்ட போரில்
முற்பட்டெழுந்த இராவணன்

இடி என அலறி முன் ஏங்கி வாய்விட ... (வலியினால்) இடி
ஒலியுடன் அலறியும், அதற்கு முன் கலங்கி வாய்விட்டு அழவும்,

முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே ... (அவனுடைய)
பல தலைகளை அரிந்துத் தள்ளிய இராமனும், விஸ்வரூபம்
எடுத்தவனுமாகிய திருமாலின் மருகனே,

முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல்இடை ... முன்பு, ஒப்பற்ற
குற மகள் வள்ளியின் நுண்ணிய நூல்போன்ற இடை மீதும்,

இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக ... இரண்டு மார்புகளின்
மீதும் தோய்ந்த காதலனே,

முது பழ மறை மொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே. ...
மிகப் பழையதான வேதங்களை ஆய்ந்துள்ள தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.161  pg 2.162  pg 2.163  pg 2.164 
 WIKI_urai Song number: 507 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 365 - parimaLam miga uLa (thiruvAnaikkA)

parimaLa mikavuLa sAnthu mAmatha
     murukavizh vakaimalar sErnthu kUdiya
          palavari yaLithuyil kUrnthu vAnuRu ...... mukilpOlE

paraviya iruLseRi kUnthal mAtharkaL
     paripura malaradi vENdi yEviya
          paNividai kaLiliRu mAntha kULanai ...... neRipENA

virakanai yasadanai veempu pEsiya
     vizhalanai yuRukalai yAynthi dAmuzhu
          vekuLiyai yaRivathu pOngka pAdanai ...... malamARA

vinaiyanai yuraimozhi sOrntha pAviyai
     viLivuRu narakidai veezhntha mOdanai
          vinavimu naruLseythu pAngi nALvathu ...... morunALE

karuthalar thiripura mANdu neeRezha
     malaisilai yorukaiyil vAngu nAraNi
          kazhalaNi malaimakaL kAnji mAnaka ...... ruRaipEthai

kaLimayil sivanudan vAzhntha mOkini
     kadaludai yulakinai yeenRa thAyumai
          karivana muRaiyaki lANda nAyaki ...... yaruLbAlA

muraNiya samarinil mUNda rAvaNan
     idiyena alaRimu nEngi vAyvida
          mudipala thirukiya neeNda mAyavan ...... marukOnE

muthaloru kuRamakaL nErntha nUlidai
     yiruthana kirimisai thOyntha kAmuka
          muthupazha maRaimozhi yAyntha thEvarkaL ...... perumALE.

......... Meaning .........

parimaLam mika uLa sAnthu mA(n) matha(m): Aromatic paste of sandalwood powder, musk,

muruku avizh vakai malar sErnthu kUdiya: and bunches of fragrant flowers had all combined in their hair;

pala vari aLi thuyil kUrnthu vAnuRu mukilpOla: beetles with fine stripes slumbered restfully on the hair which looked like the dense rainy cloud in the sky;

paraviya iruL seRi kUnthal mAtharkaL: the hair of these women was black like the surrounding darkness;

paripura malar adi vENdi: seeking their lotus-like feet wearing the anklets,

Eviya paNi vidaikaLil iRumAntha kULanai: I gladly carried out the chores tossed by them at me, and I was indeed swollen with pride to do so; I was such a pathetic waste!

neRi pENA virakanai asadanai: I did not care to follow the righteous path; I was such a fool;

veempu pEsiya vizhalanai: my speech was full of vanity and emptiness;

uRu kalai AynthidA muzhu vekuLiyai: I never bothered to research and understand classic texts because I hated them;

aRivathu pOm kapAdanai: I was a cheat and had taken leave of my senses;

malam mARA vinaiyanai urai mozhi sOrntha pAviyai: I was full of blemishes and misdeeds; I was an unscrupulous person and went back on my words;

viLivu uRu naraku idai veezhntha mOdanai: and I had already fallen in hell which was supposed to be a destination after death.

vinavi mun aruL seythu pAngin ALvathum oru nALE: (Despite all the above), will there be a day when You will carefully enquire about what ailed me and graciously bring me under Your reign?

karuthalar thiripuram mANdu neeRu ezha: To shatter the enemy's stronghold, Thiripuram, to pieces,

malai silai oru kaiyil vAngu nAraNi: She, NArAyani (VishNu's sister), picked up Mount MEru in one hand as a bow;

kazhal aNi malai makaL kAnji mA nakar uRai pEthai: She wears anklets and is the daughter of Mount HimavAn; She is KAmakshi, the presiding deity in KAnchipuram,

kaLi mayil sivanudan vAzhntha mOkini: She is like the blissfully dancing peacock; She is the beautiful Consort of Lord SivA;

kadal udai ulakinai eenRa thAy umai: She is the Mother who created all the worlds which wear the sea as a dress; She is Goddess UmA;

kari vanam uRai akilANda nAyaki aruL pAlA: She is AkilANda NAyaki having Her shrine in ThiruvAnaikkA; and You are the child kindly delivered by Her!

muraNiya samarinil mUNda rAvaNan: In the war that was waged, RAvaNA charged aggressively

idi ena alaRi mun Engki vAyvida: and later screamed (in pain) like a thunder; before that, he wept at the top of his voice, thoroughly shaken

mudi pala thirukiya neeNda mAyavan marukOnE: as his many heads were severed by Rama; He is also VishNu, who took the Supreme Colossal shape (ViswarUpam); You are His nephew!

muthal oru kuRamakaL nErntha nUlidai: Once, You went seeking VaLLi, the matchless damsel of the KuRavAs, with a twine-like slender waist,

iru thana kiri misai thOyntha kAmuka: and buried Your face amidst her mountainous bosom, Oh Great Lover!

muthu pazha maRai mozhi Ayntha thEvarkaL perumALE.: You are the Lord of the celestials who have done extensive research on the old scriptures, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 365 parimaLam miga uLa - thiruvAnaikkA

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]