பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை |{}{) வதம்செய் (அழித்த) பராக்ரம ரீராமன் நான் (நிலம்) உலகெலாம் அறியும் (இந்த என்னுடைய) அம்பை ஒகோகெட்டுப்போக வேண்டாம் - இனியேனும் தாமதிக்காது வரும்படிப் போய்ச்சொல் பார்ப்பாயாக பல போர்களின் விளைவை" என்றெல்லாம் இலக்குமணர் மூலமாகச் சுக்ரீவனுக்குச் சொல்லி (அனுப்பிப்) பேசி. தருமநெறி விளங்கும் அநுமாரோடு சென்று பெரிய கடலை அணையிட்டு அடைத்து, அந்த அணைமீது போய் ராவணனுடைய கோட்டைகளை அழித்து எதிர்த்துப் போர் செய்த நாராயண மூர்த்தியின் குமாரனான மன்மதனுக்கு மைத்துனனாம் வேளே! மயில் மீது விளங்கும் வயலூர் வேலாயுதப் பெருமானே! சிறப்பும் நலமும் கொண்ட ஆனைக்கா என்னும் பதியில் வாழ்வு கொண்ட தம்பிரானே! தேவர்கள் தம்பிரானே! (மனோலயம் என்று சேர்வேன்) 507. நறுமணம் மிகக் கொண்ட சாந்து, மாமதம் (மான்மதம்) கஸ்துாரி, வாசனை வீசும் நல்ல மலர்கள் இவைகளிற் பொருந்திக்கூடின பல ரேகைகள் கொண்ட வண்டுகளின் துயில் கொண்டதும், ஆகாயத்தில் உள்ள மேகம் போன்றதும், பரவின. இருள் நிறைந்ததுமான (மிகக் கருநிறங்கொண்டதுமான) கூந்தலை உடைய மாதர்களின் சிலம்பணிந்த மலர் போன்ற அடிகளை விரும்பி, அவர்கள் இட்ட வேலைகளைப் பணியாளாகச் செய்வதில் ஒரு பெருமை பாராட்டும் (கூளனை) விணனை (பயனற்றவனை) ஒழுக்க முறையை விரும்பி அனுட்டிக்காத