திருப்புகழ் 356 ஆரமணி வாரை  (திருவானைக்கா)
Thiruppugazh 356 AramaNivArai  (thiruvAnaikkA)
Thiruppugazh - 356 AramaNivArai - thiruvAnaikkASri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தனதான

......... பாடல் .........

ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
     டாடவர்கள் வாடத் ...... துறவோரை

ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
     பாளித படீரத் ...... தனமானார்

காரளக நீழற் காதளவு மோடிக்
     காதுமபி ராமக் ...... கயல்போலக்

காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
     காலைமற வாமற் ...... புகல்வேனோ

பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
     சாமளக லாபப் ...... பரியேறிப்

பாய்மதக போலத் தானொடிக லாமுற்
     பாடிவரு மேழைச் ...... சிறியோனே

சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
     காரஇள வேனற் ...... புனமேவுந்

தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
     சோதிவளர் காவைப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆரம் அணி வாரைப் பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட ...
மணி வடம் அணிந்துள்ள மார்க்கச்சைக் கிழித்துக் கொண்டு, மிகவும்
வெளித் தோன்றி ஆண்களை வாட்டியும்,

துறவோரை ஆசை மடல் ஊர்வித்து ஆளும் அதி பாரப்
பாளித படீரத் தன மானார்
... துறவிகளையும் காமத்தில் ஆழ்த்தி,
மடல் ஏறும்படிச்* செய்து ஆள வல்லதாய், அதிக கனம் கொண்டதாய்,
பச்சைக் கற்பூரமும் சந்தனமும் அணிந்ததான மார்பகங்களை உடைய
விலைமாதர்களின்

கார் அளக(ம்) நீழல் காது அளவும் ஓடிக் காதும் அபிராமக்
கயல் போலக்
... கருமேகம் போன்ற கூந்தலின் நிழலிலே, செவி
வரைக்கும் ஓடி, கொல்லும் தொழிலை மேற்கொண்ட அழகிய கயல் மீன்
போன்ற கண்கள் போலக் (கொலைத் தொழிலைக் கொண்ட)

காலன் உடல் போடத் தேடி வரு நாளில் காலை மறவாமல்
புகல்வேனோ
... யமன் உடலை விட்டு என் உயிரைப் பிரிப்பதற்காகத்
தேடி வருகின்ற தினத்தில், உன் திருவடிகளை மறக்காமல் சொல்லும்
பாக்கியத்தைப் பெறுவேனோ?

பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாசச் சாமள கலாபப் பரி
ஏறி
... உலகம் முழுவதும் வாழ்விக்கும் சர்ப்பராஜன் ஆதிசேஷனையும்
தன் கால்களில் கட்டவல்ல பசுந் தோகை வாகனமான மயிலாகிய
குதிரை மேல் ஏறி,

பாய் மத கபோலத்தானொடு இகலா(ம்) முன் பாடி வரும்
ஏழைச் சிறியோனே
... முன்பொரு காலத்தில் மதம் கொண்ட
மத்தகத்தை உடைய விநாயகரோடு மாறுபட்டு, வளைந்தோடி வருகின்ற
பாடி ஓட்டம் ஆகிய விளையாட்டை ஆடிய ஏழை இளையவனே,

சூரர் புர சூறைக்கார சுரர் காவற்கார ... சூரர்களுடைய
ஊர்களைச் சூறையாடி அழித்தவனே, தேவர்களுக்குக்
காவற்காரனாய் விளங்குபவனே,

இள ஏனல் புன(ம்) மேவும் தோகை திரு வேளைக்கார ...
பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய
வள்ளியுடன் பொழுது போக்கிக் காவல் இருப்பவனே,

தமிழ் வேதச் சோதி வளர் காவைப் பெருமாளே. ... தமிழ்
மறையாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராகத் தோன்றி)
அருளிய ஜோதி மூர்த்தியே, வளரும் திருவானைக்காவில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* மடல் ஏறுதல்:

காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை
முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம்
உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.135  pg 2.136  pg 2.137  pg 2.138 
 WIKI_urai Song number: 498 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 356 - AramaNi vArai (thiruvAnaikkA)

AramaNi vAraip peeRiyaRa mElit
     tAdavarkaL vAdath ...... thuRavOrai

Asaimada lUrvith thALumathi pArap
     pALitha padeerath ...... thanamAnAr

kAraLaka neezhaR kAthaLavu mOdik
     kAthumapi rAmak ...... kayalpOlak

kAlanudal pOdath thEdivaru nALiR
     kAlaimaRa vAmaR ...... pukalvEnO

pAradaiya vAzhvith thArapathi pAsac
     chAmaLaka lApap ...... pariyERip

pAymathaka pOlath thAnodika lAmuR
     pAdivaru mEzhaic ...... chiRiyOnE

cUrarpura cURaik kArasurar kAvaR
     kAraiLa vEnaR ...... punamEvun

thOkaithiru vELaik kArathamizh vEtha
     sOthivaLar kAvaip ...... perumALE.

......... Meaning .........

Aram aNi vAraip peeRi aRa mElittu AdavarkaL vAda: Their bosom, adorned with a chain of gems, rips open the tight blouse and gets exposed in a revealing way, whipping up passion in men;

thuRavOrai Asai madal Urviththu ALum athi pArap pALitha padeerath thana mAnAr: they are capable of immersing even the ascetics who have renounced desire into deep passion, forcing them to resort to mounting the madal* (madal ERuthal); those heavy breasts, wearing the paste of camphor and sandal, belong to the whores;

kAr aLaka(m) neezhal kAthu aLavum Odik kAthum apirAmak kayal pOlak: under the shade of their hair looking like the dark cloud, beautiful eyes like kayal fish run sideways right up to the ears and have undertaken the job of knocking men dead; comparable to those eyes is the function of

kAlan udal pOdath thEdi varu nALil kAlai maRavAmal pukalvEnO: Yaman (God of Death) who would come one day seeking to take my life away from this body; will I have the good fortune on that day to praise the Glory of Your hallowed feet without fail?

pAr adaiya vAzhviththa Arapathi pAsac chAmaLa kalApap pari ERi: The serpent King AdhisEshan protects the entire universe; even he could be tied up to its feet by the able peacock with green plumes, which You mount as if it were a horse, Oh Lord!

pAy matha kapOlaththAnodu ikalA(m) mun pAdi varum Ezhaic chiRiyOnE: Once, You had a spat with Lord VinAyagA, with the jaw of a raging elephant, and played the game of PAdi involving running around in circles, Oh poor little kid!

cUrar pura cURaikkAra surar kAvaRkAra: You raided all the towns of the demons and destroyed them! You remain as a protective guard for the celestials!

iLa Enal puna(m) mEvum thOkai thiru vELaikkAra: You whiled away Your time happily with the peacock-like damsel, VaLLi, who lived in the fertile millet field, and You stood guard for her!

thamizh vEtha sOthi vaLar kAvaip perumALE.: You graciously composed the Tamil VEdAs (ThEvAram), Oh Effulgent Lord (who came as ThirugnAna Sambandhar)! You have an abode in this flourishing town, ThiruvAnaikkA, Oh Great One!


* sending out passion-filled doodles in palm leaves was known as "madal ERuthal": here the passion-stricken hero makes several doodles and mounts a horse made of palm leaves to go around the town announcing to the world his love for the heroine.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 356 AramaNi vArai - thiruvAnaikkA

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 1209.2021[css]