பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா திருப்புகழ் உரை 129 இவைகளால் தோன்றுகின்ற காரியங்களையும், (உபாதி) வேதன்களையும் ஒழித்து ஞானமும், ஆசாரமும், சிரத்தை (முயற்சி) இவைகன்ளக் கொண்ட்வனாய் யான் வேறு, என்னுடைய உடல்வேறு பிரபஞ்சத்திலே யாவும் வேறு என வேற்றுமை காட்டும் வேறு வேறாக) எண்ணும்படி நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு (அல்லது யான்வேறு என் உடல் வேறு உலகில் உள்ள யாவும் வேறு என உதறின பற்றற்ற நிலையினால் அடையக்கூடியதும்), மனதுக்கு எட்டாததாய் விளங்கும் "சிவ சொரூப மஹாயோகி" என நான் ஆகும்படி என்னை ஆண்டருளுக. ஒலி தரும் இசையுடன் கூடிய புல்லாங்குழலை ஊதுபவரும், ஆயிரம் திருநாமம் கொண்டவருமான கோபாலப் பிள்ளைக்கு அல்லது நந்தகோபாலருடைய பிள்ளைக்கு (திருமாலுக்கு) அன்பு மாறுபடாத மருமகனே! விண்ணுலகம் (என்னும் கப்பலைக் காப்பாற்றிய) மாலுமியே! சகல லோகங்களையும் புரக்கும் அரசே! (மாலையாகக்) கட்டப்பட்ட கடப்ப மாலையனே! வேல்வீரனே! வயலூரானே! மனிதன் ஆதிய ஜீவ வர்க்கங்கள் உள்ள சோழநாடு தழைக்க வரும் ஃitதின் மகா வெள்ளநீரின் அன்ல்கள் மேர்துகின்ற்தும் நறுமணம் கமழ்கின்ற சோலைகள் சூழ்ந்துள்ளதுமான திருஆனைக்காப் பெருமாளே சகல லோகங்களை ஆள்பவரும் '; து வணங்கும் தெய்வமே தேவர் பெருமாளே! (சிவச்சொரூபமாயோகி என ஆள்வாய்) 498. ஹாரம் (மணிவடம்) அணிந்துள்ள (வார்) ரவிக்கையையும் (பீறி) கிழித்துக்கொண்டு, (அற) மிகவும் (மேலிட்டு) வெளித்தோன்றி, ஆண்களை வாட்டியும், துறவிகளைக் காமத்தில் ழ்த்தி, மடல் ஏறும்படிச் செய்வித்தும் ஆளவல்லதாய், அதிக பாரங்கொண்டதாய், பச்சைக் கற்பூரம், சந்தனம் இவைகளை அணிந்ததான கொங்கையை உடைய மாதர்களின்.