திருப்புகழ் 355 அனித்தமான ஊன்  (திருவானைக்கா)
Thiruppugazh 355 aniththamAnaUn  (thiruvAnaikkA)
Thiruppugazh - 355 aniththamAnaUn - thiruvAnaikkASri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தான தானான தனத்த தான தானான
     தனத்த தான தானான ...... தனதான

......... பாடல் .........

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
     யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
     அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
     சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
     சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
     சுதற்கு நேச மாறாத ...... மருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
     தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
     மகப்ர வாக பானீய ...... மலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
     மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அனித்தமான ஊன் நாளுமிருப்பதாகவே ... அழியக் கூடிய இந்த
உடல் என்றும் நிலைத்து இருக்கச் செய்ய,

நாசி யடைத்து வாயு ஓடாத வகைசாதித்(து) ... மூக்கை
அடைத்து மூச்சு ஓடாத வகையை அப்யசித்து,

அவத்திலே குவால் மூலி புசித்து ... வீணாக நிரம்ப மூலிகைகளை
உண்டு,

வாடும் ஆயாச அசட்டு யோகி யாகாமல் ... வாடுகின்ற, அலுப்பும்
மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல்,

மலமாயை செனித்த காரிய உபாதி யொழித்து ...
மும்மலங்களினாலும் மாயையினாலும் தோன்றுகின்ற காரியங்களையும்
வேதனைகளையும் ஒழித்து,

ஞான ஆசார சிரத்தை யாகி ... அறிவும், ஆசாரமும், முயற்சியும்
உடையவனாக ஆகி,

யான்வேறு எனுடல்வேறு செகத்தி யாவும் வேறாக ... யான் வேறு,
எனது உடல் வேறு, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே வேறு என்ற
பற்றற்ற நிலையினால் அடையக் கூடியதும்,

நிகழ்ச்சியா மநோதீத ... நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு
எட்டாததாய் விளங்குவதும் ஆன

சிவச்சொரூப மாயோகி யெனஆள்வாய் ... சிவ ஸ்வரூப மஹா
யோகி என யான் ஆகுமாறு என்னை ஆண்டருள்வாயாக.

தொனித்த நாத வேய் ஊது ... ஒலி தரும் இசையுடன் கூடிய
புல்லாங்குழலை ஊதுபவனும்,

சகஸ்ர நாம கோபால சுதற்கு ... ஆயிரம் நாமங்கள் கொண்டவனும்,
நந்தகோபனின் மகனுமான திருமாலின்

நேச மாறாத மருகோனே ... அன்பு மாறுபடாத மருமகனே,

சுவர்க்க லோக மீகாம ... தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய
மாலுமியே,

சமஸ்த லோக பூபால ... சகல லோகங்களையும் பாலித்து அருளும்
அரசனே,

தொடுத்த நீப வேல்வீர வயலுரா ... அப்பொழுதுதான் தொடுக்கப்
பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே,

மனித்தர் ஆதி சோணாடு தழைக்க ... மனிதர்கள் முதல் சகல
ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட

மேவு காவேரி மகப்ரவாக பானீயம் அலைமோதும் ... வரும்
காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும்,

மணத்த சோலை சூழ்காவை ... நறுமணம் கமழும் சோலைகள்
சூழும் திருவானைக்காவை மேவியவனே,

அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமியே ... சகல
லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே,

தேவர் பெருமாளே. ... எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.133  pg 2.134  pg 2.135  pg 2.136 
 WIKI_urai Song number: 497 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 355 - aniththamAna Un (thiruvAnaikkA)

aniththa mAna UnALum iruppa dhAgavE nAsi
     adaiththu vAyu OdAdha ...... vagaisAdhith

thavaththilE kuvAl mUli pusiththu vAdum AyAsa
     asattu yOgi yAgAmal ...... malamAyai

jenniththa kAri yOpAdhi ozhiththu gnAna AchAra
     siradhdhai yAgi yAn vERen ...... udalvERu

jegaththi yAvum vERAga nigazhchiyA manOtheetha
     siva sorUpa mAyOgi ...... ena ALvAy

dhoniththa nAdha vEyUdhu sahasra nAma gOpAla
     sudhaRku nEsa mARAdha ...... marugOnE

suvarga lOka meekAma samastha lOka bUpala
     thoduththa neepa vElveera ...... vayalUrA

maniththa rAdhi sONAdu thazhaikka mEvu kAvEri
     magapra vAga pAneeya ...... malaimOdhum

maNaththa sOlai sUzhkAvai anaiththulOkam ALvAru
     madhiththa sAmi yEdhEvar ...... perumALE.

......... Meaning .........

aniththa mAna UnALum iruppa dhAgavE: Under the delusion that this mortal body is going to last for ever,

nAsi adaiththu vAyu OdAdha vagaisAdhiththu: people hold their noses and practise controlling their breath!

avaththilE kuvAl mUli pusiththu: In vain, do they eat only leaves and herbs?

vAdum AyAsa asattu yOgi yAgAmal: In that process, they suffer and wear themselves out easily. I do not want to be like those pseudo-yogis.

malamAyai jenniththa kAri yOpAdhi ozhiththu: I want to destroy all the effects and sufferings arising from my three slags (namely arrogance, desire and karma) and delusion;

gnAna AchAra siradhdhai yAgi: I want to be full of knowledge, discipline and flair;

yAn vERen udalvERu jegaththi yAvum vERAga: I want to realise that I am a separate entity, from my body and that the rest of the universe is separate too;

nigazhchiyA manOtheetha: I want to attain that state which is beyond the comprehension of my mind, and which causes the incidents to happen.

siva sorUpa mAyOgi ena ALvAy: Kindly bless me to become the great Yogi of SivA's manifestation!

dhoniththa nAdha vEyUdhu: He blows sweet music into His flute;

sahasra nAma gOpAla sudhaRku: He is the son of Nandagopan; and He has a thousand names.

nEsa mARAdha marugOnE: You are the dearest nephew of that Gopalan (Vishnu)!

suvarga lOka meekAma: You are the captain who protected the great ship called DEvA's land!

samastha lOka bUpala: You are the protector of the entire world!

thoduththa neepa vElveera vayalUrA: You wear the garland made of fresh kadappa flowers! You hold the Spear valorously, and belong to VayalUr!

maniththa rAdhi sONAdu thazhaikka mEvu kAvEri: River KAveri flows in the ChOzha kingdom benefitting mankind and every living being;

magapra vAga pAneeya malaimOdhum: and that river's forceful flow brings water and waves to the banks of

maNaththa sOlai sUzhkAvai: ThiruvAnaikkA, surrounded by fragrant flower gardens!

anaiththulOkam ALvAru madhiththa sAmi yE: All the rulers of the world praise and worship You, Oh Lord!

dhEvar perumALE.: You are the Lord of DEvAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 355 aniththamAna Un - thiruvAnaikkA

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]