திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 336 அயில் அப்பு (காஞ்சீபுரம்) Thiruppugazh 336 ayilappu (kAnjeepuram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் ...... தனதான ......... பாடல் ......... அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக் கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம் அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித் திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித் துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத் தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித் தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப் புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப் புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக் கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப் பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அயில் அப்புக் கயல் அப்புத் தலைமெச்சு உற்பல நச்சுக் கண் ... கண்கள் வேல், அம்பு, மீன், நீர்க்கிடமான கடல், வியக்கத் தக்க நீலோற்பல மலர், விஷம் போன்றவை என்றும், உரத்த ஐக் கன வெற்புத் தனமேகம் அளகக் கொத்து எனஒப்பிப் புளுகிச்சொற் பல கற்பித்து ... நெஞ்சில் உள்ள மார்பகமோ பருத்த மலை போன்றது, கூந்தல் கொத்து இருண்ட மேகம் தான் என்று உவமை கூறி, பொய் பேசி, பல சொற்களைக் கற்பனையாக அமைத்து, இளகிக் கற்பு உ(ள்)ள(ம்) நெக்குத் தடுமாறித் துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வு உற்று உக்கு அயர்வு உற்று ... உருகி, வலிமை உள்ள மனம் நெகிழ்ந்து, நிலை தடுமாற்றம் அடைந்து, தூக்கம் ஒழிந்து, செய்ய வேண்டிய செயல்கள் ஒழிந்து, துக்கம் கொண்டு, தளர்ச்சி அடைந்து, தொடியர்க்கு இப்படி எய்த்துச் சுழலாதே ... கைவளையல்கள் அணிந்த மாதர்களுக்கு இந்தவாறு இளைத்துப் போய் அலையாமல், சுருதிப்பொற் பொருள்செக்கர்க்(கு) குரவு இட்டுத் தமர்பற்றித் தொழுசெச்சைக் கழல் பற்றிப் பணிவேனோ ... வேதத்தின் அழகிய பொருளைக் கூறியவனாகிய உனது சிவந்த திருவடிக்கு குரா மலரைத் இட்டுப் பூஜித்து, அன்பு வைத்த அடியார் பற்றித் தொழுது பூஜிக்கும் வெட்சி மலர் சூழ்ந்த உனது திருவடியை சிக்கெனப் பிடித்துப் பணிய மாட்டேனோ? புயல் அத்தைக் குயில் தத்தைக் கிளை புக்குத் தொளை பச்சைப் புன முத்தைப் புணர் சித்ரப் புய வீரா ... புயலை* வாகனமாகக் கொண்ட தேவயானையையும், குயில் போன்ற பேச்சை உடையவளும், (நிறத்தால்) கிளி போன்றவளும், கிளிகள் புகுந்து மூக்கால் தொளைத்து உண்கின்ற பச்சைத் தினை விளைந்த புனத்தில் (காவல் இருந்த) முத்துப் போன்ற வள்ளி நாயகியையும் சேர்க்கின்ற அழகிய புயங்களை உடைய வீரனே, புரவிக் கொட்பு இரத அற்றத்து இருள் திக்கிப் படி மட்கப் புகல் பொன் குக்குட வெற்றிக் கொடியோனே ... குதிரைகள் சுழன்று வரும் சூரியனுடைய தேர் இருளான சமயத்தில் உலகு தடுமாறி வலிமை குன்றிப் போக, (இருள் நீங்கும்படி) உரத்துக் கூவுகின்ற அழகிய சேவல் என்ற வெற்றிக் கொடியை உடையவனே, கயில் அச்சுத் தர தத்துச் சயிலத்து உத்தர நிற்கக் கரணிச் சித்தர் உள் கச்சிப் பதியோனே ... பூமியை சமநிலையில் வைத்துள்ள ஆதாரமானது சாய்ந்து பயத்தைத் தர, ஆபத்தான நிலையிலிருந்த இமய மலையில் வட திசை உயர்ந்து சமமான நிலையில் நிற்கச் செய்தவரான சித்தராகிய அகத்திய முனிவர்* தியானித்து வணங்கிய காஞ்சீபுரத்தில் வாழ்பவனே, கடலில் கொக்கு அடல்கெட்டுக் கரம் உட்கத் தரம் உட்கப் பொரு சத்திக் கர சொக்கப் பெருமாளே. ... (சூரனாகிய) மாமரம் வலிமை இழந்து தன்னுடைய தீமை போய் நடுங்குதல் உண்டாக, மேன்மை போய் அஞ்சுதல் உண்டாகும் படியாக சண்டை செய்த சக்தி வேலை ஏந்திய திருக்கரத்தனே, அழகிய பெருமாளே. |
* இந்திரனுக்கு மேகம் வாகனம். எனவே அது அவன் மகள் தேவயானைக்கும் வாகனம். |
** பார்வதியின் திருமணத்தின் போது இமய மலையில் கூடிய முனிவர் பெருங் கூட்டத்தால், வட திசை தாழ்ந்தது. சிவபெருமான் ஆணையின்படி அகத்தியர் தென் திசைக்குச் சென்று, பொதிய மலையை அடைந்து, பூமியை நிலை நிறுத்தினார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.87 pg 2.88 pg 2.89 pg 2.90 pg 2.91 pg 2.92 WIKI_urai Song number: 478 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 336 - ayil appu (kAnjeepuram) ayilappuk kayalapputh thalaimecchuR palanacchuk kaNuraththaik kanaveRputh ...... thanamEkam aLakakkoth thenavoppip puLukicchoR palakaRpith thiLakikkaR puLanekkuth ...... thadumARith thuyilvittuc cheyalvittuth thuyarvutRuk kayarvutRuth thodiyarkkip padiyeyththuc ...... chuzhalAthE suruthippoR poruLsekkark kuravittuth thamarpatRith thozhusecchaik kazhalpatRip ...... paNivEnO puyalaththaik kuyilthaththaik kiLaipukkuth thoLaipacchaip punamuththaip puNarsithrap ...... puyaveerA puravikkot pirathatRath thiruLthikkip padimatkap pukalpoRkuk kudavetRik ...... kodiyOnE kayilacchuth tharathaththuc chayilaththuth tharaniRkak karaNicchith tharuLkacchip ...... pathiyOnE kadaliRkok kadalkettuk karamutkath tharamutkap porusaththik karachokkap ...... perumALE. ......... Meaning ......... ayil appuk kayal apputh thalaimecchu uRpala nacchuk kaN: Comparing their eyes to the spear, the arrow, the fish, the sea being the source of water, the wonderful blue lily and the poison, uraththa aik kana veRputh thanamEkam aLakak koththu enaoppip puLukicchoR pala kaRpiththu: and likening the bosom on their chest to the huge mountain and the bunch of their hair to the dark cloud, I have been lying and compiling several words of exaggeration; iLakik kaRpu u(L)La(m) nekkuth thadumARith thuyilvittuc cheyalvittuth thuyarvu utRu ukku ayarvu utRu: (in that process) my heart has melted losing its strength and composure; I have become unsteady; I have lost my sleep and forsaken all my duties; I am filled with sorrow and feeling very fragile; thodiyarkku ippadi eyththuc chuzhalAthE: I do not wish to weaken any further roaming after bangled women; suruthippoR poruLsekkark(ku) kuravu ittuth thamarpatRith thozhusecchaik kazhal patRip paNivEnO: will I be able to offer kurA flowers and prostrate at the reddish and hallowed feet of Yours, the feet that belong to One who interpreted the inner meaning of the VEdAs? will I not be able to hold firmly and surrender at those feet covered by vetchi flowers offered in worship by Your dear devotees? puyal aththaik kuyil thaththaik kiLai pukkuth thoLai pacchaip puna muththaip puNar sithrap puya veerA: She is DEvayAnai having the stormy cloud* as her vehicle; the other one is VaLLi whose speech is like that of cuckoo and whose complexion is like that of a parrot; She is the pearl of the millet-field (which she guarded) where parrots swarm in and eat the millet, tweaking with their beaks; both those consorts hug Your handsome shoulders, Oh valorous One! puravik kotpu iratha atRaththu iruL thikkip padi matkap pukal pon kukkuda vetRik kodiyOnE: When the chariot of the sun, revolving along with its horses, gets into darkness gripping the world that staggers and loses its strength, this pretty Rooster crows aloud to dispel that darkness; You hold that Rooster on Your triumphant staff, Oh Lord! kayil acchuth thara thaththuc chayilaththu uththara niRkak karaNic chiththar uL kacchip pathiyOnE: When the fulcrum that held the earth became scaringly imbalanced, the great Sidhdha Sage, Agasththiyar**, restored the earth's horizontal position by raising the dangerously low level of the northern direction at Mount HimAlayAs; he meditated and worshipped in Your abode, KAnchipuram! kadalil kokku adalkettuk karam utkath tharam utkap poru saththik kara chokkap perumALE.: The mango tree (in which the demon SUran had disguised himself) lost its strength and began trembling and SUran shed his prestige and started to shake in fear when You held the powerful spear in Your hand and fought the war, Oh Handsome and Great One! |
* IndrA's vehicle is the stormy cloud; so also for his daughter, DEvayAnai. |
** During the wedding of PArvathi, a large crowd of sages gathered at Mount HimAlayAs resulting in imbalance in the level due to excess load. On the command of Lord SivA, Sage Agasththiyar travelled in a southerly direction to reach Mount Pothigai and restored the horizontal balance of the earth. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |