பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப் பொருசத்திக் கரசொக்கப் பெருமாளே (28) 479. அகப் பொருள் (மாலையை வேண்டுவது) தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தனதான கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய மச்சக் கொடிமதன் மலராலுங். கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை அச்சப் படவெழு மதனாலும்; பிச்சுற் றிவஞள மெய்ச்சுத் தளர்வது சொச்சத் தரமல இனிதான. பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய செச்சைத் தொடையது தரவேணும்: பச்சைத் திருவுமை யிச்சித் *தருளிய கச்சிப் பதிதனி லுறைவோனே. பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட உற்றுப் பொரவல கதிர்வேலா, இச்சித் தழகிய கொச்சைக் குறமகள் மெச்சித் தழுவிய திருமார்பா. எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட வெட்டித் துணிசெய்த iெருமாளே. (29)

  • அருளிய அன்புடன் (பூஜை செய்த வேடன் அருளிய பூஜை" பாட்டு 433 பக்கம்-589 கீழ்க்குறிப்பு: அன்புடன் அறம் வளர்த்த-எனலுமாம் "இச்சைப்படி தன் பேரறம் எண்ணான்கும் வளர்க்கும் பச்சைக்கொடி உறை கச்சிப்பதி " - வில்லிபாரதம் - அருச்சுனன் தீர்த்த 13.