திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 337 கச்சு இட்ட அணி (காஞ்சீபுரம்) Thiruppugazh 337 kacchuittaaNi (kAnjeepuram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன ...... தனதான ......... பாடல் ......... கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய மச்சக் கொடிமதன் ...... மலராலுங் கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை அச்சப் படவெழு ...... மதனாலும் பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது சொச்சத் தரமல ...... இனிதான பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய செச்சைத் தொடையது ...... தரவேணும் பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய கச்சிப் பதிதனி ...... லுறைவோனே பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட உற்றுப் பொரவல ...... கதிர்வேலா இச்சித் தழகிய கொச்சைக் குறமகள் மெச்சித் தழுவிய ...... திருமார்பா எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கச்சு இட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்சக் கொடி மதன் மலராலும் ... கச்சை அணிந்த அழகிய மார்பகத்தைத் தைத்துக் கொண்டு ஊடுருவிச் சென்ற, மீன் கொடியைக் கொண்ட மன்மதனுடைய பூக்கணைகளாலும், கச்சைக் கலை மதி நச்சுக் கடல் இடை அச்சப் பட எழும் அதனாலும் ... தழும்புகள் உடைய கலைகளுடன் கூடிய சந்திரன் ஆலகால விஷத்தை உடைய கடலினிடையே இவள் பயப்படும்படி எழுந்துள்ள அந்தச் செய்கையாலும், பிச்சு உற்று இவள் உளம் எய்ச்சுத் தளர்வது சொச்சத் தரம் அல ... பைத்தியம் பிடித்து இத் தலைவி மனம் இளைத்துத் தளர்ச்சி அடைவது சாமானியமான அளவு இல்லை. இனிதான பிச்சிப் புது மலர் வைச்சுச் சொருகிய செச்சைத் தொடை அது தரவேணும் ... (ஆதலால், முருகா,) இனிமை தரும் ஜாதி மல்லிகையின் புது மலர்கள் இடையிடையே வைத்துச் சொருகப்பட்ட வெட்சி மாலையை நீ இவளுக்குத் தந்தருள வேண்டும். பச்சைத் திரு உமை இச்சித்து அருளிய கச்சிப் பதி தனில் உறைவோனே ... பச்சை நிறமுள்ள உமா தேவி அன்புடன் (சிவ பிரானுக்கு) பூஜை செய்து அருளிய காஞ்சி மா நகரத்தில் உறைபவனே, பற்றிப் பணிபவர் குற்றப் பகை கெட உற்றுப் பொர வல கதிர் வேலா ... அன்பு வைத்து உன்னைப் பணிபவர்களுக்கு குற்றம் செய்யும் பகைவர்கள் அழிந்து போக, வந்து போர் செய்து உதவிய கதிர் வேலனே, இச்சித்து அழகிய கொச்சைக் குறமகள் மெச்சித் தழுவிய திருமார்பா ... உன் மீது காதல் கொண்டு அழகு வாய்ந்தவளும், மழலைமொழி பேசும் குறத்தி ஆனவளுமான வள்ளி நாயகி மெச்சித் தழுவிய அழகிய மார்பனே, எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட வெட்டித் துணி செய்த பெருமாளே. ... ஏழு குல மலைகளுடன் கிரெளஞ்சமலையும் சேர்த்து எட்டு மலைகளும் அடியோடு பொடியாகும்படி சண்டை செய்து, அசுரர்களை வெட்டித் துணித்த பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் நற்றாய் பாடுவதுபோல அமைந்தது. மன்மதன், மலர் அம்புகள், சந்திரன், கடல் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.91 pg 2.92 WIKI_urai Song number: 479 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 337 - kacchu itta aNi (kAnjeepuram) kacchit taNimulai thaicchit turuviya macchak kodimathan ...... malarAlum kacchaik kalaimathi nacchuk kadalidai acchap padavezhu ...... mathanAlum picchut RivaLuLa meycchuth thaLarvathu socchath tharamala ...... inithAna picchip puthumalar vaicchuc chorukiya secchaith thodaiyathu ...... tharavENum pacchaith thiruvumai yicchith tharuLiya kacchip pathithani ...... luRaivOnE patRip paNipavar kutRap pakaikeda utRup poravala ...... kathirvElA icchith thazhakiya kocchaik kuRamakaL mecchith thazhuviya ...... thirumArpA ettuk kulakiri muttap podipada vettith thuNiseytha ...... perumALE. ......... Meaning ......... kacchu itta aNi mulai thaicchittu uruviya macchak kodi mathan malarAlum: Because of the flowery arrows shot by Manmathan (God of Love), with a staff of fish, that penetrated her beautiful bosom covered by blouse, kacchaik kalai mathi nacchuk kadal idai acchap pada ezhum athanAlum: and because of the ominous rising of the moon, blemished with spots, from the sea containing the evil poison, AlakAlam, picchu utRu ivaL uLam eycchuth thaLarvathu socchath tharam ala: this girl is driven crazy, and it is not an easy matter to describe the extent to which she has been mentally depressed and physically weakened. inithAna picchip puthu malar vaicchuc chorukiya secchaith thodai athu tharavENum: (Therefore, Oh MurugA,) You must kindly give her Your garland of vetchi flowers, intertwined with nice and fresh flowers of jasmine! pacchaith thiru umai icchiththu aruLiya kacchip pathi thanil uRaivOnE: You have Your abode in the City of KAnchipuram which place is blessed by UmAdEvi, of an emerald-green complexion, and where She worshipped (Lord SivA) with love! patRip paNipavar kutRap pakai keda utRup pora vala kathir vElA: For the sake of devotees who worship You with love, You fight with and destroy their harmful enemies, Oh Lord with the bright spear! icchiththu azhakiya kocchaik kuRamakaL mecchith thazhuviya thirumArpA: She is beautiful and full of love for You; she is VaLLi, the prattling damsel of the KuRavas; and she hugs You with admiration, Oh Lord with a hallowed chest! ettuk kulakiri muttap podipada vettith thuNi seytha perumALE.: You fight so fiercely that the seven famous mountains of the demons along with Mount Krouncha (totalling eight) are shattered to pieces and the demons are completely sheared away, Oh Great One! |
This song has been written in the Nayaka-Nayaki BhAva, where the poet has assumed the role of the heroine's mother, portraying the pangs of separation of her daughter from Lord Murugan. The Love God, the flowery arrows, the moon and the sea are some of the sources which aggravate the agony of separation from the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2017-2030 [xhtml] 0504.2022[css]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact us if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., we are NOT responsible for any damage caused by downloading any item from this website. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |