திருப்புகழ் 314 புன மடந்தைக்கு  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 314 punamadanthaikku  (kAnjeepuram)
Thiruppugazh - 314 punamadanthaikku - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
     குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
          பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும்

புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும்

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
     டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
          தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித்

திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
     திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
          சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
     கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
          கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன்

கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
     திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும்

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
     கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
          பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப்

பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
     பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புன மடந்தைக்கு தக்க புயத்தன் ... தினைப்புனத்து மடந்தையாகிய
வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன்,

குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும் பொருளை ... குமரன்
என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை,

நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிது ஏதும் ... மனத்தில் கொண்ட
கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும்,

புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம் சகலமும் ...
புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு* வகையான தத்துவ
உண்மைகளும் ஆக எல்லாவற்றையும்,

பற்றி பற்று அற நிற்கும் பொதுவை ... பற்றியும், பற்று இல்லாமலும்
நிற்கும் பொதுப் பொருளை,

என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை நாளும் ... சூரியனுக்கு
ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை
நாள் தோறும்,

சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு ... கோபத்துடன்
வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு

அறுவரும் கைக்குத்து இட்டு ... அறு வகைச் சமயத்தாரும்
கைக்குத்துடன் வாதம் செய்து,

ஒருவர்க்கும் தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து ...
ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து,

உன்செயல் பாடி ... உன் திருவிளையாடல்களைப் பாடி,

திசைதொறும் கற்பிக்கைக்கு ... திக்குகள் தோறும் (உள்ள
யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க,

இனி அற்பம் திரு உ(ள்)ளம் பற்றி ... இனி மேல் நீ சற்று தயை
கூர்ந்து,

செச்சை மணக்கும் சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு
என்று அருள்வாயே
... வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை
அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு
எப்போது தந்து அருள்வாய்?

கனப் பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு
இக்கு
... கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு,
கரும்பு இவைகளையும்,

சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி ... சர்க்கரை, தேங்காய்,
கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு,

பிட்டொடு மொக்கும் திரு வாயன் ... பிட்டுடன் விழுங்கும் திரு
வாயை உடையவர்,

கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண் ... சோற்றுத் திரளை
உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு
போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர்,

திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் கரி முகன் ...
விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர்,

சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி ... அழகிய,
பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற
கணபதியைப் பெற்ற அந்தணி,

ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண் ... (1+8) ஒன்பது கோணங்களை
உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண்,

கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண் ... கெளரி, செவ்விய
அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண்,

பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் ... பழையவளும்,
அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண்,

பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி ...
தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி
நிறுத்தும் பகவதி (பார்வதி),

கம்பர்க்குப் புக்கவள் பக்கம் பயில் ... ஏகாம்பர நாதரைக்
கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து,

வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. ... வரத்தைப்
பெற்று**, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.


* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.


** தந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாது, பின்னர்
அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன் விடுத்தார். இந்த குற்றம்
நீங்க, முருகவேள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் தவம் புரிந்து,
தோஷம் நீங்கி வரம் பெற்றார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.23  pg 2.24  pg 2.25  pg 2.26 
 WIKI_urai Song number: 456 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 314 - puna madanthaikku (kAnjeepuram)

punamadan thaikkuth thakkapu yaththan
     kumaranen Reththip paththarthu thikkum
          poruLainen jaththuk kaRpanai mutRum ...... piRithEthum

pukalumeN paththet tettiyal thathvam
     sakalamum patRip patRaRa niRkum
          pothuvaiyen Rokkath thakkatho raththan ...... thanainALum

sinamudan tharkkith thuccilu kikkoN
     daRuvarung kaikkuth thittoru varkkum
          therivarum sathyath thaiththeri siththun ...... seyalpAdith

thisaithoRung kaRpik kaikkini yaRpan
     thiruvuLam patRis ceccaima Nakkum
          siRusathang kaippoR pathmame nakken ...... RaruLvAyE

kanaperun thoppaik ketpori yappam
     kanikizhang kikkuc carkkarai mukkaN
          kadalaikaN dappip pittodu mokkum ...... thiruvAyan

kavaLathung kakkaik kaRpaka mukkaN
     thikazhunang kotRath thotRaima ruppan
          karimukan cithrap poRpukar veRpan ...... Ranaiyeenum

panaviyon Rettuc cakratha lappeN
     kavurisem poRpat tuththari yappeN
          pazhaya aNdaththaip petRama dappeN ...... paNivAraip

bavatharang kaththaith thappani Ruththum
     bavathikam parkkup pukkavaL pakkam
          payilvaram petRuk kacchiyil niRkum ...... perumALE.

......... Meaning .........

punamadan thaikkuth thakkapu yaththan: "He has the most appropriate shoulders suitable for VaLLi, the damsel of the millet field;

kumaranen Reththip paththarthu thikkum poruLai: He is Kumaran" - so praise His devotees paying obeisance; He is the object of such worship;

nen jaththuk kaRpanai mutRum piRithEthum: That object represents the entire range of imagination occurring in my mind and extends beyond them;

pukalumeN paththet tettiyal thathvam sakalamum patRi: It is attached to the celebrated tenets numbering ninety-six*;

patRaRa niRkum pothuvai: It is yet the common substance detached from those tenets;

yen Rokkath thakkatho raththan thanai: Its luminosity is comparable to that of the sun, and It is a matchless treasure;

nALum sinamudan tharkkith thucciluk kikkoNdu: Every day, people argue and fight about It animatedly, with a lot of ire and fury;

aRuvarung kaikkuth thittu: people belonging to the six different religions exchange blows while debating about It;

oru varkkum therivarum sathyath thaith therisiththu: yet no one is able to discern It, which is True Knowledge. I wish to have the vision of that Truth,

un seyalpAdith thisaithoRung kaRpik kaikku: sing of Your miraculous deeds and preach about You to everyone in all the eight directions.

ini yaRpan thiruvuLam patRi: Now it is Your turn to have mercy on this miserable lowly self;

ceccaima Nakkum siRusathang kaippoR pathmam enakken RaruLvAyE: When do You propose to bless me with Your hallowed lotus feet, fragrant with vetchi flowers and adorned with lilting anklets?

kanaperun thoppaik ketpori yappam kanikizhang kikku: He has a big belly into which He feeds sesame seeds, rice crispies, sweet rice-cakes, fruits, roots, sugarcane,

carkkarai mukkaN kadalaikaN dappip pittodu mokkum thiruvAyan: jaggery, coconut, peanuts, sugar candy and pittu (sweet fried rice powder), all of which He swallows in a gulp;

kavaLathung kakkaik kaRpaka mukkaN: He tosses down cooked rice with His great snout; He is KaRpaga VinAyagar, like the wish-yielding celestial tree; He has three eyes;

thikazhunang kotRath thotRaima ruppan karimukan: He is our celebrated valorous Lord with the single tusk; He has an elephant's face;

cithrap poRpukar veRpanRanaiyeenum panavi: He has pretty dots on His forehead; He is huge like a mountain; that Ganapathi was delivered by the warm-hearted Mother;

yon Rettuc cakratha lappeN: She presides over (1+8) nine chakrAs (navAvaraNam - Tattvik Centres);

kavurisem poRpat tuththari yappeN: She is Gowri donning a beautiful reddish silk sari;

pazhaya aNdaththaip petRama dappeN: She is primordial; She created the entire universe;

paNivArai bavatharang kaththaith thappani Ruththum bavathi: She is Bhagavathi (PArvathi) capable of dispelling the wavy sea of birth from Her devotees;

kamparkkup pukkavaL pakkam: EkAmabaranAthar (Lord SivA) is Her consort; You are seated very close to that UmAdEvi

payilvaram petRuk kacchiyil niRkum perumALE.: and obtained the requisite boon** at KAnchipuram, Your abode, Oh Great One!


* The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).


** Despite a request conveyed through a messenger by Lord SivA to release BrahmA from Murugan's prison, Murugan refused to do so. Only after His father's personal appearance and fervent appeal, Murugan released BrahmA. As atonement for this insubordination, Murugan had to do penance at KumarakOttam in KAnchipuram and obtained the boon from His parents.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 314 puna madanthaikku - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]